சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

அகிலா என்ற ஹதியா


இஸ்லாம் மதம்

இஸ்லாம் மதத்தில் சேர்ந்தால் அதிக பணம் பெறலாம். மேலும் நாம் இஸ்லாம் அல்லாதவராக இருந்தால் கடுமையான நரகத்தில் மிகவும் கொடும் தண்டனைகளை அனுபவிக்க வேண்டும். எனவே நீயும் மாறிவிடு என்று சொல்லும் அளவு அகிலா மனம் மாறியிருந்தாள். அந்த தோழிகளுடன் விடுமுறைக்கு அவர்களது வீட்டுக்கு செல்லுவாள். அந்த தோழிகளின் தந்தை அபுபக்கர், என் மகளை மேலும் மூளை சலவை செய்தார் என்று அசோகன் புகார் அளித்துள்ளார்.
எங்கள் செல்ல மகள் எங்களிடம் மிகவும் முரட்டுத் தனமாக நடந்து கொள்கிறாள். நாங்கள் துயரத்தின் எல்லையை தொட்டுவிட்டோம். பொன்னம்மாவும் நானும், எங்களுக்கு ஒரு குழந்தை போதும் என்றே முடிவு செய்தோம். வரமாக வந்தவள் அகிலா. அவளுக்காகவே நாங்கள் உயிர் வாழ்கிறோம். என் இறுதி மூச்சு வரை, கடைசி ரூபாய் வரை அவளது உயிரை காக்க போராடுவேன்! என் மகளை ஒரு தீவீரவாதியிடமிருந்து காக்க போராடுவேன் என்று கலங்கிய கண்களோடு உடைந்து போகிறார் தந்தை அசோகன்.

10 செப்டம்பர் 2015

அகிலா இஸ்லாமிய மதத்திற்கு மாற நீதிமன்றத்தில் பதிவு செய்தார்.

நவம்பர் 2015

அகிலாவின் பெற்றோருக்கு இந்த விஷயம் தெரிய வந்தது.

1, ஜனவரி 2016

அகிலா தனது வீட்டை விட்டு வெளியேறி, அபுபக்கரின் வீட்டில் வசிக்க தொடங்குகிறாள்.
அகிலாவின் பெற்றோர் போலிஸ் நிலையத்தில் புகார் அளிக்க, அடிபக்கர் கைது செய்யப்படுகிறார்.
ஜனவரி 6ந் தேதி, அகிலா கல்லூரிக்கு பர்தா அணிந்து வந்ததாக கேள்விபட்ட அவளது பெற்றோர் அங்கு விரைந்தனர். ஆனால் அகிலாவை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
அகிலாவின் பெற்றோர் ‘ஹேபியஸ் கார்பஸ்’ எனும் ஆட் கொணர்வு மனுவை நீதிமன்றத்திற்கு சமர்பித்தனர்.

ஜனவரி 19, 2016, அகிலா எனும் ஹதியா

இஸ்லாம் மதத்திற்கு தான் மாறி விட்டதாக அகிலா எனும் ஹதியா தெரிவித்தார். இந்த முடிவை நான் எடுக்க காரணம் எனுது தோழியரின் ஒழுக்கமும் மதகட்டுபாடும் தான். நான் கல்லூரி சேர்ந்த வருடம் முதல் இஸ்லாமிய மதத்தால் ஈர்க்கப்பட்டேன். எனது தோழிகளும் பல நீதிகளை சொல்லித் தருவர். அவர்களது தந்தை அபுபக்கரும் எனக்கு போதனை செய்வார்.
எனது பெற்றோர் என்னை கண்டிக்கவே நான் மலப்புரத்தில் உள்ள அபுபக்கரின் வீட்டிற்கு சென்றேன்.

சத்திய சாரணி இல்லம்

அபுபக்கர் ரிமிவி எனும் கேரளா இஸ்லாமிய நிலையத்தில் அனுமதி கோரி கிடைக்கவில்லை. கோழிக்கோடில் உள்ள ‘‘தெரிபியாத்துல்’’ அமைப்பிடம் சென்றார். அங்கு அவர்கள் வெளியில் தங்கி கொண்டு இங்கு வந்து படிக்கலாம் என்று சொல்லவே, இறுதியாக அபுபக்கர் சத்திய சாரணி எனும் இஸ்லாமிய விடுதியில், அகிலாவை தங்க வைத்து, இஸ்லாமிய மார்க்கத்தை அங்கேயே கற்கவும் ஏற்பாடு செய்தார்.

சயிநபா

அகிலாவின் மேற்பார்வையாளராக சயிநபா அறிமுகமனார். அவர் தான் சத்திய சாரணியின் நிர்வாகியும் ஆவார்.
அகிலாவின் தந்தை அசோகன் கொடுத்துள்ள புகாரின் படி, இந்த அமைப்பை சார்ந்த சயிநபா பலநூறு பெண்களை இவ்வாறு ஏமாற்றி மதம் மாற்றியுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

ஜனவரி 25 2016

கேரளா உயர் நீதிமன்றம் அசோகனின் மனுவை நிராகரித்தது. அகிலா தனது விருப்பப்படி தான் மதம் மாறி உள்ளதாக அறிவித்தது. சயிநபாவுடன் தொடர்ந்து இருக்கவும் அனுமதி வழங்கியது அகிலாவின் பெற்றோர் அவளை சந்திக்கலாம் என்றும் கூறி வழக்கை முடித்தது.

ஆகஸ்ட் 17, 2016

6மாதங்களில் இரண்டாம் முறையாக அகிலாவின் தந்தை அசோகன் நீதிமன்றம் சென்றார். எனது மகளை நாடு கடத்தி, செக்ஸ் அடிமையாக்கும் முயற்சி நடக்கிறது. சிரியாவிற்கு புனித போரில் பங்கு பெற போவதாக என்னிடம் அவள் கூறுகிறாள்.
அவளை ஒரு இஸ்லாமியருக்கு போலி திருமணம் செய்து வைத்து, சிரியாவிற்கு அனுப்பி விடுவார்கள் என்பது என் சந்தேகம். என் மகளை காப்பாற்றுங்கள் என்று மன்றாடினார்.

ஆகஸ்ட் 26, 2016

நான் நன்றாக யோசித்து தான், சுய சிந்தனையோடு இஸ்லாமிய மதத்திற்கு மாறி உள்ளேன் என்று அகிலா பிரமாண பத்திரம் தாக்கல் செய்கிறார்.

செப்டெம்பர் – 2016

நீதிமன்றம் அசோகனின் மனுவை பரீசிலித்து, அகிலாவின் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிட்டது. எர்ணா குளத்தில் உள்ள ஒரு விடுதிக்கு செல்ல உத்தரவிட்டது. அறிந்த தகவல்களை வைத்து, சில வாரங்களில், அகிலா சயிநபாவுடன் சென்று தங்கலாம் என்று அனுமதி வழங்கியது. பாஸ்போர்ட் இல்லை, சிரியா செல்ல மாட்டேன் என்ற உத்தரவாதம் அகிலாவிடம் இருந்து பெறபட்டது.

நவம்பர் – 2016

சயிநபாவுடன் வாழ்ந்த அகிலாவின் செலவுகளை யார் செய்கிறார்கள் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. சயிநபாவின் அமைப்பிற்கு பணம் எங்கிருந்து வருகிறது என்ற கேள்வியும் அரசு வக்கீலால் எழுப்பப்பட்டது.
மருத்துவ தொழில் மூலமாக தனக்கு 2000 ரூபாய் சம்பளம் வருவதாக அகிலா பதிவு செய்ய, நீதிமன்றம் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. 4 1/2 வருடம் சித்த படிப்பை முடித்தும், 1 வருடம் ஹவுஸ் சர்ஜன்சியை முடிக்காத நிலையில் அவரால் மருத்துவராக வேலை பார்க்க முடியாது என்று கூறி, அகிலாவை அந்த ஒரு வருட படிப்பை படிக்க சொல்லி அறிவுறுத்தியது.

டிசப் 19ம் தேதி,

இந்த உத்தரவை பிறப்பித்த நீதிமன்றம், டிச 21ம் தேதி, அகிலாவின் தந்தையை அவளது மருத்துவ சான்றிதழ்களை கொண்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்க கோரியது.

டிச 21ம் தேதி – அதிர்ச்சி

அகிலா என்ற ஹதியா திடிரென ஒரு இஸ்லாமிய இளைஞனுடன் நீதிமன்றம் வந்தாள். அவளது வக்கீல் அவளுக்கு டிச 19ந் தேதி ஷெவின் ஜகான் எனும் இஸ்லாமிய இளைஞனுடன், இஸ்லாமிய முறைப்படி, சயிநபாவின் இல்லத்தில் நிக்கா நடந்து விட்டதாக அறிவித்தவுடன் கடும் அதிருப்தி அடைந்தனர் நீதிபதிகள். அகிலா உண்மையில் வெளிநாடு செல்லதான் இந்த திடிர் திருமணமா?? என்றும் கேட்டனர்.
1. ஷெவினுக்கு அகிலாவை எப்படி தெரியும்?
2. ஏன் டிச.19ந் தேதி நீதிமன்றத்திடம் இதனை தெரிவிக்கவில்லை.
3. ஏன் அகிலாவின் பெற்றோருக்கு இதனை தெரிவிக்கவில்லை.
என சரமாரியான கேள்விகளை கேட்டது. அகிலா தரப்பு வக்கீல் மௌனமாகினார்.

சதி

அரசு தரப்பு வக்கீல், இந்த திருமணத்தில் சூழ்ச்சி உள்ளதாக தெரிவித்தார். நமது இந்திய சட்டத்தின்படி, கல்யாணமாகாத பெண் பெற்றோரின் பாதுகாப்பில் இருப்பவராக கருதப்படுவார். இதனை உடைக்கவே இந்த திடிர் திருமணம். இனி அகிலா வெளிநாடு செல்ல சட்டம் தடை செய்ய முடியாது என்றே இந்த திடிர் திருமணம் என்று வாதிட்டார்.

ஜனவரி 2017

கவலை கொண்ட நீதிமன்றம் டிசம்பர் மாதம் முதல் அகிலாவை அரசு விடுதியில் தங்க ஏற்பாடு செய்து, அரசு தரப்பு வக்கிலிடம் புது மாப்பிள்ளை ஷெவினை பற்றி அறிக்கை கேட்டது.

தீவீரவாத தொடர்பு

4 கிரிமினல் வழக்குகளில் சிக்கியவன் தான் இந்த ஷெகின். சத்திய சாரணியுடன் நெருங்கிய தொடர்புடையவன் மேலும் தீவீரவாத தொடர்பு உள்ளவன் என்ற அறிக்கையை கொடுத்தது.
ஏப்ரல் மாதம் 2016ம் ஆண்டு, நிக்கா காம் எனும் இணையதளத்தில் தனது பெயரை பதிவு செய்ததாக அகிலா தெரிவித்தார். இதன் மூலமாக தான் ஷெவினை திருமணம் செய்ததாக கூறப்பட்டது.

மே 24 – 2017 – அதிரடி தீர்ப்பு

கேரள உயர் நீதிமன்றம் அதிரடியாக, அகிலாவிற்கும், ஷெவினுக்கும் நடந்த திருமணம், அகிலாவை நாடு கடத்த நடந்த ஒரு சதி நாடகம். எனவே அந்த திருமண்ம் ரத்து செய்யப்படுகிறது. அகிலா தனது பெற்றோருடன் செல்ல வேண்டும் என உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றம்

கபில் சிபில், இந்திரா ஜெய்சிங் என வக்கீல் படையொடு, ஷெவின் தனது மனைவி அகிலா எனும் ஹடியாவை தான் துபாய்க்கு தனது தாயாரை காண அழைத்துச் செல்ல வேண்டும் என வழக்கு தொடுத்தார்.

ஆகஸ்ட் 16 – 2017

உச்ச நீதிமன்றம், கேரள அரசிடமிருந்து அனைத்து தகவல்களையும் வாங்கி பரிசீத்தது. தேசிய புலனாய்வு துறையை நியமித்து, உண்மையில் கேரளாவில் இந்து, கிறிஸ்த்துவ பெண்கள், ‘‘லவ் ஜிகாத்’’எனும் சூழ்ச்சியால் புத்தி மாற்றம் செய்யப்பட்டு, மதம் மாறி பின்னர் நாடு கடத்தப் படுகிறார்களா என ஆய்வறிக்கையை சமர்பிக்க உத்தரவிட்டது.
சாதாரணமான சூழ்நிலையில் ஒரு இளம் பெண் மதத்தினை குறித்து அதிகம் சிந்திப்பதில்லை. மேலும் இவர்களது கூற்றில் பல சந்தேகங்கள் எழுகின்றன.
ஒரு பெண் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்வது ஏற்றுக்கொள்ள கூடியது. அகிலாவின் வழக்கில் ஏதோ மூளை சலவை நடந்திருக்க வாய்ப்பு உள்ளதாக தோன்றுகிறது. என்றும் தனது கவலையை தெரிவித்தது.

இடைக்கால தீர்ப்பு

உச்ச நீதிமன்றம் இந்த வழக்கினை தீர விசாரிக்க உள்ளது. தேசிய புலனாய்வு துறையின் இடைக்கால கருத்துகளின் அடிப்படையில், அகிலா என்ற ஹடியாவை, மறுபடியும் சேலம் சிவராஜ் மருத்துவ கல்லூரியில் தங்கி இருந்து, 1வருட பணியை முழுமை செய்ய சொல்லி உள்ளது.
கணவருடன் சேர்ந்து வாழ கூடாது என்றாலும், பார்ப்பதை பற்றி ஒன்றும் சொல்லவில்லை. சிவராஜ் கல்லூரி முதல்வரின் நேரடி பார்வையிலும், பாதுகாப்பிலும் அகிலா இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
டிசம்பர் 21ம் தேதி மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. அதற்குள் தேசிய புலனாய்வு துறை முழுமையான ஒரு அறிக்கையை சமர்பிக்க வேண்டும்.
தங்கள் ஒரே செல்ல மகளின் வாழ்வு பற்றி அஞ்சி வாழும் அசோகன், பொன்னம்மா தம்பதியினர் பேசும் போது, ‘‘நாங்கள் நீதிமன்றம் தர்மத்தை நிலைநாட்டும் என்றே நம்புகிறோம் என கலங்கினர்.
அசோகன் கூறும் போது, நான் கால் போன போக்கில் நடந்து கொண்டே மதுவிலும், சிகரெட்டிலும் வெறுமையை உணர்கிறேன். இதோ வருகிறேன் என்று சொல்லி வெளியே செல்லும் பொன்னம்மா, சிவன் கோயிலுக்குச் சென்று வேண்டிக் கொண்டு இருப்பாள். நீதிமன்றம் எது சொன்னாலும் சரி. என் மகள் நாட்டை விட்டு வெளியே செல்ல கூடாது!! என்றார்.

இது அகிலாவோடு முடியுமா??

தேசிய புலனாய்வு அமைப்பு, தீவிரமாக களம் இறங்கி, கேரளாவில் மட்டும் எவ்வளவு பெண்கள் மதம் மாறி திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். அவர்கள் இப்போது எங்கே எப்படி உள்ளனர். அவர்கள் காதலுக்காக மதம் மாறினரா இல்லை மத மாற்றத்திற்காக திருமணம் செய்தனரா?? அவர்கள் யாருடன் பேசி சம்மதம் தெரிவித்தனர் என பல நூறு கேள்விகளுக்கான விடையை தேடி வருகிறார்கள்.

2015ம் ஆண்டு முதல் 90 பேர் மதம் மாறி பிறகு திருமணம் செய்து உள்ளனர் என்று கேரள போலிஸ் கூறியுள்ளது.

அதிரா என்ற பெயரில் இரண்டு பெண்கள் தற்போது தேசிய புலனாய்வு அமைப்பிடம் தங்களது சொந்த அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள்.
அதிரா, அகிலா என இந்த பெணிகளின் விஷயத்தில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா எனும் இஸ்லாமிய அமைப்பும், அதன் அரசியல் பிரிவான ‘சோஷியல் டிமாகிரடிக் பார்ட்டி ஆப் இந்தியா’ எனும் அமைப்பும் மிகவும் இணக்கமாக வேலை செய்து வருவதை தேசிய புலனாய்வு துறை கண்காணித்து வருகிறது.

தேசிய புலனாய்வு துறை இன்னமும் அகிலாவின் வழக்கை முழுமையாக விசாரிக்கவில்லை. 90 பெண்களின் கதையையும் பரிசீலித்து விட்டு தான் நீதிமன்றத்திற்கு தனது அறிக்கையை தர உள்ளதாம்.

எத்தனை பெண்கள்

25 ஜூன் 2012ம் ஆண்டில் உமன் சான்டி மாநில சபையில் சில புள்ளி விவரங்களை கூறியுள்ளார்.
7713 பேர்கள் 2006-&2012ம் ஆண்டு வரை இஸ்லாமிய மதத்திற்கு மாறியுள்ளனர்.
2195 இந்து பெண்கள் இஸ்லாம் மதத்திற்கு 2009-&2012ம் ஆண்டு வரை மாறியுள்ளனர்.
492 கிறிஸ்துவ பெண்கள் இஸ்லாமிய மதத்திற்கு 2009-&2012 ஆண்டு வரை மாறியுள்ளனர்.
2012-&2017 வரை இன்னும் அதிகபடியான மதம் மாற்றம் நடந்து வரும் என்ற நிலையில், உண்மையான எண்ணிக்கை தெரிவதில்லை.
கொச்சினில் உள்ள கிறிஸ்த்துவ ஹெல்ப் லைன் ‘‘கடந்த சில வருடங்களில் சுமார் 1500 கிறிஸ்த்துவ பெண்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறி உள்ளதாக கூறியது. இதில் 10 பெண்கள் சிரியாவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள் என்றும் கூறியுள்ளது.
கேரளாவில் நடப்பதை உச்ச நீதி மன்றம் ஆய்வு செய்து, அபலை பெண்களை காக்கட்டும்!!
காதல் மணம் புரிந்து மதம் மாறி செல்பவர்களை பற்றி நாம் கவலைபட தேவையில்லை.
காதல் வலையில் தந்திரமாக வீழ்த்தி, மூளை சலவை செய்து, மதம், மாற்றி பின் தீவீரவாத செயல்களுக்கு அவர்களை இட்டு செல்லாது பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை.
புளு வேல் விளையாட்டை போலவே கொஞ்சம் ஏமாறும் பெண்களை குறி வைத்து, ஹிப்நாட்டிசம், மூளை சலவை செய்து மதம் மாற்றி சிரியாவிக்கு அனுப்பினால் அது எப்படி சுதந்திரம் ஆகும் என்பதே அகிலாவின் தந்தை அசோகனின் ஆவேச கேள்வி??
உச்ச நீதி மன்றம் நீதி சொல்லி இந்த அகிலாவை காக்க வேண்டும். இனிமேலும் அகிலாக்கள் உருவாகாமல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு பெற்றோரின் வேண்டுகோள்.

(Visited 29 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *