சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

அகிலேஷ் யாதவ் அரசின் 1000 கோடி ‘பென்ஷன்’ ஊழல்!

உ.பியின் முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடியாக உ.பியின் புதிய ஒய்வூதிய திட்டத்தை துவக்கியுள்ளார்.

2014 – 2015 ஆண்டில் அகிலேஷ் யாதவின் அரசு, மக்களை கவரும் பொருட்டு புதிய ஒய்வூதிய திட்டத்தை அறிவித்தது.

மாதம் 75 மாவட்டங்களில் இருந்து 54 லட்சம் மக்களை தேர்ந்தெடுத்து மாதம் ரூபாய் 500 தருவதாக வாக்களித்தது.

இந்த திட்டத்தால் உ.பி அரசுக்கு 1000 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளதாக தற்போதைய முதல்வர் குற்றம் சாட்டியுள்ளார்.

1000 கோடி மெகா ஊழல்!

அகிலேஷ் யாதவ் சமாஜ்வாதி ஒய்வூதிய திட்டத்தில் சுமார் 1000 கோடி ஊழல் நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் 60 வயதிற்கும் குறைவான வயதினர் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் 43,000 இறந்தவர்கள், 4,5 லட்சம் தகுதியற்றவர்கள் என பட்டியல் நீளுகிறது.

சுமார் ஒரு கோடியே 20 லட்சம் பேர்களுக்கு புதிய ஒய்வூதிய திட்டத்தில், மாதம் ரூபாய் 400, அளிக்கபடும் என முதல்வர் யோகி உறுதி அளித்துள்ளார். விதவைகள், உடல் ஊனம் உற்றவர்கள், விவசாயிகள், என பலரும் சேர்க்கப்பட்டுள்ளன.

(Visited 10 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *