சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

அந்தமானின் ஆதிவாசிகளிடம் நாம் தான் கற்றுக் கொள்ள வேண்டும்!

‘‘சாத்தானின் பிடியிலிருந்து இவர்களை காப்பாற்ற போகிறேன்’’ என்று சபதம் செய்து நவ 17, 2018ல் அந்தமானில் உள்ள தெற்கு சென்டினல் தீவிற்கு சென்றார் ஜான் ஆலன் சௌவ் எனும் 27 வயது வாலிபர். அங்கிருக்கும் பழங்குடியினரை கிறிஸ்துவர்களாக மாற்ற சென்றார்.
தனிமையில் வாழும் ஒரே இனமான’ சென்டினல் பழங்குடியினர், தங்களது கரையிற்கு வரும் எவரையும் கொன்று விடுவதே வழக்கம்.
பல நூறு ஆண்டுகளாக கப்பல் மாலுமிகளுக்கு இந்த சென்டினல் கரையில் கப்பல் தரை தட்டி விடுவோமோ என்ற பயம் உண்டு. கொன்று விடுவார்கள் என்று தெரியும்.

யார் இவர்கள்!

நினைத்து கூட பார்க்க முடியாத அதிசய பிறவிகள் இவர்கள். சுமார் 60,000 வருடங்களுக்கு முன்னர் ஆப்பிரிக்காவின் மூதாதையர்களை விட்டு பிரிந்து, கிழக்கு முகமாக பயணித்து, இந்திய கரைகளின் வழியாக அந்தமானை அடைந்துள்ளனர் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இந்த குழுவில் சிலர் தெற்கு நோக்கி பயணத்தை தொடர்ந்து இன்றைய ஆஸ்திரேலியா, பப்பா நீயு கினியா நாடுகளுக்கும் பரவினர்.
இவர்களது மரபணு 97% தனித்துவம் கொண்டது. இவர்களது மொழியும் அந்தமானிஸ் மற்றும் அங் வகையை சார்ந்தது. தனித்துவம் கொண்டது.

போர்ட் பிளேர்!

1858ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு, இந்தியாவின் அந்தமானின் தீவுகளையும் விட்டு வைக்கவில்லை. துப்பாக்கியின் தோட்டாக்கள் உதவியுடன் ஒரு தீவினை கைப்பற்றி அதற்கு போர்ட் பிளேர் என்றும் பெயர் வைத்தனர். அதனை ஒரு சிறைசாலை ஆக்கினர்.

இன ஒழிப்பு!

ஒவ்வொரு முறை ஒரு புதிய இடத்தை பிடித்தவுடன் அங்கிருக்கும் பூர்வ குடிகளை அழிக்கும் பிரிட்டிஷார் இங்கேயும் அதனை தொடர்ந்தனர். சில அந்தமான் பழங்குடியினரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களுக்கு குடிப்பழக்கத்தை ஏற்படுத்தினர். பெண்களை கற்பழித்தனர். சிஃபிலிஸ் எனும் பாலின தொற்று நோயை உருவாக்கிய பின் அவர்களை தங்கள் இன மக்களுடன் பழக விட்டனர்.

அழிந்த இனம்!

பிரிட்டிஷின் இந்த இழிவான சூழ்ச்சியால் தெரியாத வியாதியால் பழங்குடியினர் சாகத் தொடங்கினர். 10 பழங்குடி இனங்களில் சுமார் 8000 வரை இருந்தவர்கள், 1960களில் 19 பேராக சுருங்கி விட்டனர்.

இன்றைய நிலை!

தற்போது மொத்தமாக அனைத்து 10 பழங்குடி இனங்களின் சார்பாக 50 பேர்கள் மட்டுமே இருக்கிறார்கள்.
10 விதமான பழங்குடி மொழிகளை கலந்து அந்தமானிஸ் எனும் மொழியினை பேசுகிறார்கள்.
தாங்கள் மட்டுமே தங்கள் இனத்தின் அடையாளம் என்பதால் இவர்கள் தாங்கள் வாழும் சென்டினல் தீவினை ஒரு கோட்டையாகவே மாற்றியுள்ளனர்.

நோய் நொடி இல்லாமல்…

இந்தியா மற்றும் பிற நாடுகளில் உள்ள நோய் எதுவும் இவர்களுக்கு இல்லை, காட்டில் சுதந்திரமாக சுற்றி திரியும் இவர்கள் கூட்டாக சிறு இடத்தில் கூடி வாழ்கிறார்கள்.
இவர்களுக்கு பிற உலக மக்களுக்கு வரும் நோய் எதிர்ப்பு சக்தி இல்லை என்பதே பெரும் ஆபத்து! அவர்களுக்கு அதுவே அவர்களது முதல் நோக்கம் தங்களை தனிமை படுத்திக் கொள்ள!!

சுதந்திரம்!

காடுகளை அழிக்காது, விலங்குகளை அழிக்காது இயற்கையோடு இணைந்து வாழும் இவர்களிடம் நாம் கற்க வேண்டியது எத்தனையோ உள்ளது. இவர்களது அபூர்வ மூலிகைகள், சுனாமி, எரிமலை போன்ற இயற்கை சீற்றங்களை கையாளும் முறைகள் என பல உள்ளன.
இவர்களுக்கு நாம் சொல்லி தர வேண்டியது ஒன்றும் இல்லை என்பதே உண்மை. கடந்த 200 வருடங்களில், அறிவியல், விஞ்ஞானம் என்று நாம் இயற்கையை முற்றிலும் அழித்து, மனித நேயத்தையும் கொன்று விலங்குகளாகவே வாழ்கிறோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

வேண்டாம் இந்த முயற்சி!

கொல்லப்பட்ட கிறிஸ்துவ பாதிரி ஜான், தான் இறந்து விட்டாலும் தன்னை அங்கேயே புதைக்கும்படி தான் கூறியுள்ளாராம். ஆனால் அமெரிக்க அரசு அந்த உடலை மீட்க போராடி வருகிறது. சென்டினல் குடிகளும் வில் அம்புகளோடு கரையை நோக்கி காத்து கிடக்கிறார்கள்.
கடந்த வருடம் வரை இந்த தீவுகளுக்கு செல்ல தடை இருந்ததும், அரசு அதனை எடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தாங்கள் மட்டுமே தங்கள் இனத்தின் அடையாளம் என்பதால் இவர்கள் தாங்கள் வாழும் சென்டினஸ் தீவினை ஒரு கோட்டையாகவே மாற்றியுள்ளனர்.

(Visited 25 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *