சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

அலிபாபாவின் தலைவர் ஜாக் மா அமெரிக்காவிற்கு கொடுத்த பதிலடி..!

அமெரிக்க அதிபர் டிரம்ப் கூட்டத்தில் பேசுகையில், இனியும் சீன அரசு அமெரிக்காவை பொருளாதார ரீதியாக கற்பழிப்பதை அனுமதிக்க போகிறோமா?? என்று பேசினார்.

சின்டு முடிந்த நிருபர்கள்!

நிருபர்கள் சீன அதிபரிடம் இதற்கு பதில் கேட்க, சீன அதிபர் சிரித்த முகம் மாறாமல் அமைதியாக ஆனால் நெத்தியடியாக பதில் கொடுத்துள்ளார்.

பதிலடி!

‘‘அமெரிக்காவில் பேச்சுரிமை உண்டு. அதனால் அவர் பேசியிருக்கிறார் என்றே நான் கருதுகிறேன். 30 வருடங்களுக்கு முன்னர் நான் கல்லூரி படித்துக் கொண்டிருந்தேன். அப்போது அன்றைய அமெரிக்க அரசு ஒரு முடிவு எடுத்தது.

அமெரிக்காவின் முடிவு!

உற்பத்தி தொழிலை மனிதவளம் மிக்க மெக்ஸிக்கோ மற்றும் சீனாவிடம் விட்டு விடுவது என்றும், சேவை தொழிலை இந்தியாவிடம் விட்டுவிடுவது என்று அமெரிக்க அரசு முடிவெடுத்தது.

போரில் செலவழித்த அமெரிக்க அரசு!

கடந்த 30 வருடங்களில் 13 போர்களில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. 14.2 டிரில்லியன் டாலர்கள் செலவழித்துள்ளது! ஏன் அப்படி செய்தது??
ஏன் உள்கட்டமைப்பை செய்யவில்லை இந்த 14 டிரில்லியன் டாலரில் உள் கட்டமைப்பு செய்திருந்தால் உற்பத்தி திறன், அறிவு சார் திறனை தம் மக்களுக்கு வளர்த்திருக்கலாமே!!
நான் அமெரிக்காவில் படித்துதான் வந்துள்ளேன். நான் படிக்கும் காலத்தில் போயிங் விமான உற்பத்தி ஃபோர்ட் கார் உற்பத்தி நிறுவனம் போன்ற தொழில்கள் இருந்தன.

இன்று என்ன இருக்கிறது??

இன்று சிலிக்கான் வேலியும், வால் ஸ்டிரீடும் தான் உள்ளன. 2008ம் ஆண்டில் வால் ஸ்டீரிட் படு வீழ்ச்சி அடைந்தது. அதனால் உலகெங்கும் 34 மில்லியன் வேலைகள் போயின் 19.2 டிரில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டது சீனாவில் மட்டும்.

அமெரிக்காவின் மிட்வெஸ்ட் பகுதியை முன்னிலை படுத்த வேண்டும்!

அமெரிக்கா தனது நிலைபாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். தனது நாட்டு மக்கள் திறனில் நம்பிக்கை கொண்டு, உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டும். போர்முனைப்பு! வால் ஸ்டீரிட்! போன்ற வற்றை ஒதுக்கிவிட்டு மக்கள் வளத்தை பெருக்க திறன் மேம்பாடு செய்ய வேண்டும். உங்கள் வேலைகளை யாரும் பறிக்கவில்லை. அதனை செய்யும் திறனை, உள்கட்டமைப்பை நீங்கள் உருவாக்கி கொள்ள வில்லை என்று நெத்தியடி கொடுத்துள்ளார்.

(Visited 12 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *