சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

ஆட்டம் காணும் நக்ஸல்!

சத்திஸ்கர், தெலுங்கானா, அசாம், ஒரிசா போன்ற மாநிலங்களில் உள்ள மாவோயிஸ்டுகள் மற்றும் நக்ஸல்களின் முதுகெலும்பு டிமானிட்டை சேஷனால் உடைக்கப்பட்டுள்ளது என்று பொது மக்கள் கருத்து கணிப்பு வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

யார் நக்ஸல்வாதிகள்!

நக்ஸல் காரர்கள் என்பவர்கள் பொது உடைமைவாதிகள். வங்காள தேசத்தில் உள்ள நக்ஸ் பாரி எனும் நகரில் நில உரிமையாளர்களுடனான சண்டை அங்கு தான் முதலில் தோன்றியது. எனவே இந்த அமைப்பிற்க்கு நக்ஸல் என்று பெயர் வந்தது. இவர்களும் சீனாவின் மாவோயிஸ்ட் கொள்கைகாரர்களும் தோஸ்த்தாக இருந்து இப்போது இரண்டற கலந்து விட்டனர்.

பணப் புழக்கம்!

இத்துப்போன் கம்யூனிஸ் கொள்கை எனும் கொடியை பிடித்திருந்தாலும் இப்போது நக்ஸல், மாவோயிஸ்ட் என்றால் தேசத்திற்கு எதிரானவர்கள் என்றே பொருள் கொள்ள வேண்டும்.
மிஷினரிகளும், சீனாவும் இவர்களை தாங்கி பிடித்து, பணம் மற்றும் போர் கருவிகளை கொடுத்து உதவுகிறது.

பண மதிப்பு இழப்பு!

நவம்பர் 8ந்தேதி இந்த நக்ஸல் நாசகார கும்பலுக்கு சாவு மணி என்று கூட சொல்லலாம். பொதுவாக இந்த நக்ஸல்கள், கிராம எல்லைகளில் தங்கி, அந்த கிராமங்களில் உள்ளவர்களை உருட்டி, மிரட்டி சிலரை பணம் கொடுத்து, அரசுக்கு ஆதரவாக செயல்பட விடாமல் தடுத்து வருவார்கள். அதனால் அந்த கிராமத்தில் எந்த அரசு திட்டமும் செயல்படாது, சாலை, பள்ளி என வசதிகள் இல்லாது இருக்கும்! நக்ஸல்கள் கை இதனால் ஒங்கி இருக்கும்.
அரசு மீறி வந்தால் குண்டு எறிந்து கொல்வது போலிசை சுட்டுக் கொல்வது என அட்டகாசம் செய்து வருபவர்கள் தான் இந்த நக்ஸல் அமைப்பினர்.

சேமிப்பு!

வருடம் 300 கோடிகள் இந்த அமைப்பிற்கு தேவை என்றால், குறைந்தபட்சமாக 500 கோடிகளை தேற்றி வைத்துக் கொள்வார்கள். அவ்வப்போது அள்ளிவிட்டு இளைஞர்களை மூளை சலவை செய்து வந்தனர். இவர்களது கள்ள பணத்தை, வெள்ளையாக்குவதும் நகர்புற நக்சல்களே.

டிமானிடைஷேசன்!

இதனால் ஒரே இரவில் நக்ஸல்களின் அத்தனை பணமும் மதிப்பு இல்லாமல் போனதும் இவர்களது கொட்டம் அடங்கியுள்ளது.

சரண்!

சுமார் 500 நக்ஸல்கள் தங்கள் துப்பாக்கிகளுடன் சரண் அடைந்து வருகின்றனா, ஒவ்வொரு நக்ஸல் மறைவிடத்திலிருந்தும்!! நக்ஸல்களின் பண பலம் குறைந்துள்ளதால் அரசு இப்போது நக்ஸல் கிராமங்களுக்கு உள்ளே சென்று, கல்வி, சாலை போக்குவரத்து, என பல உதவிகளை செய்ய தொடங்கி உள்ளது.
நக்ஸல் வன்முறைகள் 30% குறைந்துள்ளது. பணமதிப்பு இழப்பு அனைத்து தீவீரவாத அமைப்புகளுக்கும் ஒரு பேரிடி என்று அந்த ஆய்வறிக்கை புள்ளி விவரங்களுடன் கூறியுள்ளது.

(Visited 36 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *