சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

இது வேறு மொழி… மனசை தொடும் குறும் படம்!

லதா கிருஷ்ணாவிற்க்கு விருதுகளும், பரிசுகளும் புதிதல்ல. பல பன்னாட்டு விருதுகளை பெற்றுள்ள இவர், தமிழ் நாட்டில் ‘ஊரறிந்த ரகசியம்’ சீரியலுக்காகவும் விருது பெற்றவர்.
உலக சமய பாராளுமன்றத்தில் சிறப்பு பேச்சாளராக பங்கேற்ற பெருமை உடையவர். மணிமேகலையாகவும், சகோதரி நிவேதிதாவாகவும் நடித்து பாராட்டுகள் பெற்றவர்.

ராமாவரம் தோட்டத்தில் உள்ள காது கேட்காத, வாய் பேசாத குழந்தைகளுக்கான பள்ளியை இயக்கி வரும் திருமதி. லதா ராஜேந்திரனின் தேடலில் உருவானது தான் ‘டிஃபரண்ட் லாங்வேஜ்’ எனும் குறும்படம்.

வாய் பேச முடியாத நிலையில் எம்.ஜி.ஆர் நோய்வாய் பட்டு இருந்தபோதே, அவரது தயாள மனம், இந்த குறைகளோடு பிறக்கும் குழந்தைகளை எண்ணிப் பார்த்தது, அதன் பரிசு தான், தான் வாழ்ந்த ராமாவரம் தோட்டத்தில் கடவுளால் ஒரவஞ்சனை செய்யப்பட்ட இந்த குழந்தைகளுக்கான பள்ளி என்கிறார் திருமதி. லதா ராஜேந்திரன்.
எங்கள் பள்ளிக்கு ஒரு முகவரி தேவை. அது மனதை தொடவேண்டும் என்று நான் கேட்க, கிருஷ்ணசாமி அசோசியேட்ஸின் நிர்வாக இயக்குநர் லதா கிருஷ்ணா உலகளவில் சாதித்து விட்டார் என்கிறார் பள்ளி நிர்வாகி.

லதா கிருஷ்ணா

லதா கிருஷ்ணாவின் 30 வருட அனுபவம் பல பரிமாணங்களை கொண்டது. கிருஷ்ணசாமி அசோசியேட்ஸ் எனும் 54 வருட மீடியா நிறுவனத்தில் தனது தந்தையுடன் குழந்தை பருவத்தில் இருந்தே கற்று வந்தவர் லதா.
எழுத்தாளர், இயக்குநர், பரத நாட்டிய கலைஞர், சொற்பொழிவாளர், நடிகர் என பன்முகம் கொண்ட லதா கிருஷ்ணாவின் முக்கிய திறமை அவரது எளிமையும் உற்சாகமும் தான்.

விருதை பற்றி

கேன்ஸ் மீடியாவின் 2018 வெள்ளி பரிசு பெற்ற குறும்படத் தயாரிப்பாளர் திருமதி. லதா கிருஷ்ணா இந்த படத்தை இப்படித் தான் பண்ண வேண்டும் என்று நினைத்து போகவில்லை. ஆனால் அந்ந் பள்ளிக்கு சென்றவுடன் எனக்கு பெரிய ஷாக். காது கேட்காதவர்கள் வாய் பேச முடியாதவர்கள் இருக்கும் பள்ளி என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் அங்கு நுழைந்ததும் ஒரே உற்சாகம். பல தகவல்களை என்னுடன் பகிர்ந்து கொள்வதில் ஒரே போட்டி!! சந்தோஷம் பெருக்கெடுத்து ஒடுகிறது.
எல்லா குழந்தைகளுக்கும் உலக தரம் வாய்ந்த காது கேட்கும் கருவிகள், வாய் அசைவுகளை வைத்து புரிந்துக் கொள்ளும் பயிற்சிகள் உண்டு. பெரிய குழந்தைகள் ஒரளவு பேசுகின்றன என்பதே ஒர் அதிசயம்.
அது வேறு ஒரு உலகம்.
Different Ianguage… வேறு மொழி! என்று என் மனசில் பட்டது. இது ஒரு குறை அல்ல… வேறு மொழி தான் என்று நான் மட்டும் நினைக்க கூடாது.. உலகமும் இனி அவர்களை அப்படித் தான் பார்க்க வேண்டும் என்றே குறும்படத்தின் தலைப்பை ‘இது வேறு மொழி’ என்று வைத்தோம் என்கிறார் உணர்ச்சியுடன் லதா கிருஷ்ணா.
வாழ்த்துகள் லதா உங்களது பயணம் மென்மேலும் வெற்றிகரமாக மனிதம் தழைக்க தொடரட்டும்.

(Visited 17 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *