சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

இனியாவது நிம்மதியாக வாழுங்கள்!

‘‘பெட்ரூம் லைட் அணைச்சா தான், செட்லைட் மேல விழும்னு’’  இயக்குநர் சிகரத்தின் அரங்கேற்றம் படத்தில ஒரு டயலாக் வரும்.

இது யதார்த்தம்னு தான் சினிமாவில இருக்கிற வங்க சொல்வாங்க…

ஏன்னா இன்னிக்கு சினிமாவில நடிக்கனும்னா ஒட்டி, உரசி, முத்தம் கொடுத்து, படுக்கையறை காட்சிகள்ல நடித்து, வில்லன்களோடு ரேப்சீன்ல நடிச்சு, கனவு காட்சியில, கேவலமாக துணி அணிந்து, அத விட கேவலமான அங்க அசைவுகளோடு நடிக்க ரெடியா இருக்காங்கன்னு அர்த்தம்!!!

பின்ன இயக்குநர், நாயகன், தயாரிப்பாளர்னு பலர அட்ஜஸ்ட் செய்யறவங்க, நிறைய பேர் இருக்கும் போது பாஜை தெரியாம, முறையான பாட்டு, டான்ஸ் தெரியாம, டயலாக்கும் பேச முடியாம, சுமாரா இருக்கிற பொண்ணு டாப்ல வரதுன்னா என்ன காரணம் இருக்க முடியும்!!

இந்த போட்டியில திறமைக்கு முக்கியத்துவம் இல்லையா??

போட்டியில ஜெயிக்க முடியாதவங்க தான் இந்த மீ..டூ வில புலம்பி தள்ளராங்கன்னு நினைக்க தோணுது.

ஆனா உண்மையில, சினிமாவோட வெளி கவர்ச்சியில மயங்கி இந்த சகதியில விழறவங்களுக்கு, வாழ்கையின் ஒரு கட்டத்தில, இழந்து விட்ட தன்மானம், கௌரவம் மனசை கலங்கடிச்சிடும். அப்போ தான் அவங்க வெடித்து கிளம்பறாங்க!! அதான் இந்த மீ..டூ!!

தீடீர் புகழுக்கும் பணத்திற்க்கும் ஆசைப்பட்டு, திசை மாறிவிட்டவர்களின் சோக குரல் தான் இது என்றே நான் நினைக்கிறேன்.

சின்மயில் போன்ற திறமைமிக்கவர்கள் இந்த மீ..டூவில் சொல்லும் சேதி மனதை வேதனை செய்கிறது. அதிலிருந்து மீண்டு இன்று மற்ற பெண்களுக்கு பாதுகாப்பு அவசியம் என்று குரல் கொடுத்துள்ளதை பாராட்டுகிறேன்.

மீ..டூ என்பது ஒரு களமாக பெண்கள் பயன் படுத்தும் போது கொஞ்சம் ஆபத்தும் உள்ளது. பெரும்பாலும் இது போன்ற விஷயங்களில் பெண்கள் வெளியே சொல்ல முன் வரமாட்டார்கள் தான். ஆனால் ஏதோ காழ்ப்பு உணர்ச்சியாலோ, அல்லது பிளாக்மெயில் செய்யவோ கூட சில பெண்கள் இதனை ‘வேட்டை களமாக’ மாற்றலாம்!!

நாங்கள் எப்படி வேண்டுமானாலும் கவர்ச்சியாக உடை உடுத்துவோம். ஆனால் ஆண்கள் கண்ணியமாக பார்க்க வேண்டும் என்று பேசுவது இன்று ஃபாஷனாகி விட்டது.

காசுக்காக உடலை காட்டி உடை உடுத்தும் நடிகைகளை பார்த்து, அதே போல உடை உடுத்தும் குடும்ப பெண்களை பார்த்து வேதனை அடைந்த நாட்கள் பல.

பாடனும், ஆடனும், தீடீர் புகழ் வேணும் என்று அறியா பிள்ளைகள் நினைத்தால் திருத்த வேண்டிய பெற்றோரே, சினிமா எனும் மாயவலையில் சரிந்து விடுவதால் தான் இன்று இவ்வளவு குழப்பம் நம் சமூகத்தில்.

சினிமா என்பது ஒரு உணர்ச்சி குவியலான கலவர லோகம். அவர்களை சராசரி மனிதர்களோடு ஒப்பிட கூடாது. வீழ்ந்தவர் லட்சம். வாழ்ந்தவர் 100 பேர்.

மீ..டூ பெண்களை பார்த்தால் ஆறுதல் சொல்வேன். வாழ்வின் முடிந்து போன அத்தியாயம் அது. கொட்டி விட்டாய். இனியாவது நிம்மதியாக வாழுங்கள் என்று ஆசீர்வதிப்பேன்.

சினிமாவில் 40 ஆண்டுகளாக பணிபுரிபவன்!!

(பெயர் தேவையா!?)

(Visited 29 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *