சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

இன்று சபரிமலை… நாளை?

மதச்சார்பற்ற இந்தியாவில் அனைத்து மதங்களுக்கும் சம உரிமை என்பது ஏட்டளவில் உள்ள உண்மை. ஆனால், எழுத்தளவில் உண்மை என்னவென்றால், இந்து மதத்துக்கு எதிராக யார் என்ன கருத்து கூறினாலும், ‘கருத்து சுதந்திரம்’ என்ற வட்டத்தில் அடங்கிவிடும். இந்த வகையில் அரசியல் சாசனத்தின் அதிகாரம் மிக்க பாதுகாவலனாக உள்ள சுப்ரீம் கோர்ட்டும் பல நேரங்களில், இந்துக்கள் தொடர்பான வழக்கு என்றால் மின்னல் வேகத்தில் விசாரித்துவிடும்.
உண்மையில் வழக்கைத் தொடர்ந்தவர் யார்? வழக்குக்கும் அவருக்கும் என்ன தொடர்பு? இந்த வழக்கால் அவருக்கு என்ன ஆதாயம்? வழக்கு இந்தியாவின் பாரம்பரியம் சார்ந்ததா? மத வழிபாடு
சார்ந்ததா? வழக்கு மத சுதந்திரத்தில் தலையிடுகிறதா? மக்களின் பாரம்பரிய நம்பிக்கையை சிதைக்கும் வகையில் உள்ளதா? என்றெல்லாம் பார்ப்பது நீதித்துறையில் இப்போது குறைந்துவிட்டது.

இந்த வகையில், இந்தியாவின் புனிதத் தலங்களைக் குறிவைத்து நடத்தப்படும் மத வன்முறைகள் இப்போது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றான திருப்பதி மலையில் கிறிஸ்தவ மிஷினரிகளுக்கு இடம் ஒதுக்கும் ராஜசேகர ரெட்டியின் திட்டம் இந்துக்களே எதிர்பார்க்காத அதிர்ச்சியைக் கொடுத்தது. திருப்பதி இந்துக்களுக்கே என்ற முழக்கம் வலுப்பெற்றதால், திருப்பதி மலையில் மிஷினரிகளுக்கு இடம் கொடுக்கும் திட்டத்தை ராஜசேகர ரெட்டி கைவிட்டார்.

புதிதல்ல…

ஆனால், இது ஏதோ புதிய திட்டம் என்று எண்ண வேண்டிய அவசியம் இல்லை. காரணம், இது இந்தியாவில் கிறிஸ்தவத்தை பரப்பத் துடிக்கும் கிறிஸ்தவ மிஷினரிகளின் ஆதரவுடன் காலம் காலமாக நடைபெறும் ஒரு மத வன்முறையாகும். உதாரணமாக, கேரளாவில் இந்துக்களின் புனித தலமாக இருக்கும் சபரிமலையைக் குறிப்பிடலாம்.

கோர்ட்டில் சபரிமலை!

இப்போது, சுப்ரீம்கோர்ட் படியேறி இருக்கிறது சபரி மலைப் பிரச்னை. சபரி மலை வழிப்பாட்டில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சரி, இந்த மனுவை தாக்கல் செய்தது பெண்களா அல்லது பெண்கள் அமைப்புகளா? என்று ஆராய்ந்து பார்த்தால் இவர்கள் யாரும் இதைச் செய்யவில்லை. காரணம், இந்து பெண்களுக்கு சபரி மலையின் புனிதத்துவமும், அதில் உள்ள ஆன்மிக ரகசியமும் தெரியும்.

யார் போட்ட வழக்கு!

சுப்ரீம் கோர்ட்டில் இந்த மனுக்களைத் தாக்கல் செய்திருப்பது இந்திய இளம் வக்கீல்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் நவ்சாத் அகமது கான் மற்றும் இப்போதைய தலைவர் கரன்சிங் சந்தோக். இவர்களுக்கு குருநாதர் இந்திரா ஜெய்சிங் என்ற வக்கீல். இவர்தான் கத்வா வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்காக வாதாடுகிறார்.
மற்றொன்று கரன்சிங் சந்தோக்கின் தந்தை, ஐக்கிய முன்னணி ஆட்சிக் காலத்தில் 2009ம் ஆண்டு மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். இதில், பெயர் குறிப்பிடப்படாத பல என்ஜிஓக்களுக்கு வெளிநாடுகளில் இருந்து கிறிஸ்தவ மிஷனரிகளால் கொட்டப்பட்ட பலநூறு கோடி ரூபாயை பிரதமர் மோடி தலைமையிலான அரசு களையெடுத்தது.

அதில் இந்திரா ஜெயின் சிங்கின் என்.ஜி.ஓ-வும் ஒன்று!

இந்த 2 விஷயங்களும் போதும், இவர்கள் இந்து மதத்தின் மீதான ஆத்திரத்துக்கு.

இரண்டாவது தாக்குதல்!

கேரளாவின் சபரிமலை மீதான இந்தத் தாக்குதல் 2வது முறையாக நடைபெறும் மிகப் பெரிய தாக்குதல் என்று சொல்லலாம். அப்படியானால், முதல் தாக்குதல் நடந்ததா? என்று நீங்கள் கேட்கலாம். கேரளாவில் கோழிக்கோடு பகுதிக்கு வந்திறங்கிய கிறிஸ்தவர் கள், அந்தப் பகுதியில் தங்கள் மதத்தை அதிகளவு பிரசாரம் செய்தனர். ஆனால், அதில் எந்த ஒரு சூழ்நிலையிலும் முஸ்லிம்களுடன் அதிகளவில் மோதல் இல்லாமல் பார்த்துக் கொண்டனர்.

வேகம்!

எனினும், சுதந்திரத்துக்குப் பின்னர் அவர்களது மதப்பிரச்சார வேகம் அதிகரித்தது. இதில் கேரளாவில் மிஷினரி குழுக்களின் பிரதான இலக்காக சபரி மலை இருந்தது. இப்போதைக்கு ஆண்டுக்கு 5 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வந்து செல்லும் இடமாக சபரிமலை இருந்தாலும், 1949களில் போதிய கட்டமைப்புடன் இல்லை. அதேநேரத்தில், சபரிமலைப் பகுதியில் இருந்த அடர்ந்த வனங்கள், கஞ்சா விளைவிப்பதற்கு ஏதுவாக இருந்தது. சபரிமலையில் பக்தர்கள் செல்லாத காலகட்டங்களில், வனங்களை அழித்த கிறிஸ்த அமைப்புகள் அங்கே கஞ்சா சாகுபடி செய்தனர்.

தீ வைப்பு!

இது, சீசன் நாட்களில் வந்த பக்தர்களுக்கு தொல்லை கொடுப்பதாக இருந்தது. அத்துடன், புண்ணிய பூமியான சபரியில் இதுபோன்ற இழி செயல்கள் செய்யக்கூடாது என்று பக்தர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால், 1950ம் ஆண்டில் சபரிமலைக் கோயிலுக்கு தீ வைத்து
எரிக்கும் முயற்சியில் கிறிஸ்தவர்கள் களம் இறங்கினர். பக்தர்கள் மீதும் கடும் தாக்குதல் நடந்தது.
ஒருமுறை 2 முறை அல்ல, 1950 முதல் 1955ம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 3 முறை கோயிலுக்குத் தீ வைக்கும் சம்பவமும், பக்தர்கள் மீதான தாக்குதலும் நடந்தது.

சர்ச் கட்டும் முயற்சி!

கோயிலுக்கு வரும் பக்தர்களை தடுக்க முடியாது என்றுணர்ந்த கிறிஸ்தவ அமைப்புகள், சபரி மலைப் பகுதியில் சர்ச் கட்டும் முயற்சியில் களம் இறங்கினர்.
இதற்காக 1980ம் ஆண்டில் நிலக்கல் பகுதியில் சர்ச் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. 1983ம் ஆண்டு சில சர்ச் அமைப்புகள், நிலக்கல் பகுதியில் உள்ள அய்யப்பன் தோட்டம் பகுதியில் சிலுவை அமைக்க முயன்றனர். அத்துடன், பூங்காவனம் பகுதியில் ஒரு பிரமாண்ட அணைகட்டி அய்யப்பன் கோயிலை மூழ்கடிக்கும் சதியை, கேரள அரசு ஆசியுடன் நிறைவேற்றவும் முயன்றனர். இதையும் பக்தர்கள் முறியடித்தனர். கோயிலை மேம்படுத்தி, வரும் பக்தர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று வனத்துறையிடம் பேசியபோது, ஒரு பிடி நிலம் கூட வழங்க முடியாது என்று மறுத்தது கேரள கம்யூனிஸ்ட் அரசு.

வாடிகனிலிருந்து கடிதம்!

அதேநேரத்தில், புனிததாமஸ் கட்டுக்கதையை அவிழ்த்துவிட்ட கிறிஸ்தவர்கள், ‘புனித தாமஸ் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா வந்ததாகவும், அவர் நிறுவிய சிலுவை சபரி மலையில் உள்ளது’ என்று கூறி, தாமஸ் சர்ச் கட்டுவதற்கு கிறிஸ்தவர்கள் முயன்றனர். ஆனால், 1952ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதி வாடிகனின் நிர்வாகத் தலைவரான போப், கேரளாவில் உள்ள கிறிஸ்தவ அமைப்புகளுக்கு ஒரு பகிரங்க கடிதம் எழுதினார். ‘‘கேரளாவின் கொடுங்கல்லூர் பகுதியில் புனித தாமஸ் வந்திறங்கினார், அவரை பிராமணர் ஒருவர் கொலை செய்தார் என்பது அடிப்படை ஆதாரம் இல்லாதது’’ என்று கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

மகாதேவர் கோயிலுக்கு குறி!

மூக்கறுபட்டாலும், கிறிஸ்தவ மிஷினரிகளின் செயின்ட் தாமஸ் வெறி அடங்கவில்லை. சபரிமலையைவிட்டு வெளியேறிய அவர்கள், அங்கிருந்து 20 கி.மீட்டர் தூரத்தில் மகாதேவர் கோயிலுக்கு அருகில் 1983ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி சர்ச் கட்டும் பணியை முன்வைத்தனர். அங்கேயும் தாமஸ் சிலுவை என்ற ஒரு சிலுவையை முன்வைத்தனர்.

கும்மன்னோன் ராஜசேகரன்!

சபரிமலைக்கு நிலம் வழங்க மறுத்த கேரள அரசு, கிறிஸ்தவர்களின் பொய் பிரசாரத்தை உண்மையாக்குவதற்காக அங்கே வனத்துறை நிலத்தை அள்ளி வழங்கியது. இதை எதிர்த்து கும்மன்னோன் ராஜசேகரன் கடும் போராட்டம் நடத்த, கேரள அரசு நிலம் வழங்குவதை கைவிட்டது. அதே நேரத்தில் சிவன்கோயிலில் இருந்து 4 கி.மீட்டர் தூரத்தில் காப்பு காடு பகுதியில் கிறிஸ்தவர்களுக்கு கேரள அரசு மீண்டும் நிலம் ஒதுக்கியது.
சரி, தாமஸ் சிலுவை எப்படி வந்தது என்று விசாரித்தால், மிஷனரிகள் செய்த சதி வெளியானது. கிறிஸ்தவர்கள் பழைய மரத்தில் சிலுவையை செய்து காட்டுக்குள் வைத்துவிட்டு, பின்னர் அதை கண்டு பிடித்ததாக கூறி, விளம்பரம் செய்தனர். ஆனால், கேரளா போன்ற அடர்ந்த வனப்பகுதியில் இப்படியொரு சிலுவைக்கு வாய்ப்பே இல்லை என்று அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டது .

தேவசம் போர்டு நிர்வாகிகள் யார்!

சபரி மலை அய்யப்பன் கோயிலை நிர்வாகம் செய்யும் தேவசம் போர்டு நிர்வாகிகள் யார்? அரசியல்வாதிகள் (நிச்சயமாக இவர்களுக்கு இந்து மதம் மீது பற்று இருக்காது). கான்ட்ராக்டர்கள் (பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாக கொண்டவர்கள்) மற்றும் இந்து மதத்தின் மீதான மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள். இவர்கள்தான், தேவசம்போர்டு என்ற பெயரில் சபரி மலையை நிர்வககிக்கின்றனர்.

300 கோடி வருமானம்!

ஆண்டுக்கு 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான வரும் சபரிமலையில், பக்தர்கள் வசதிக்காக செலவிடும் தொகை சொற்பம். இதனால், சபரிமலைக்கு வரும் பக்தர்கள் சந்திக்கும் இம்சைகள் அதிகம்.

வதந்திகள்!

அரவணை பிரசாத்தில் பல்லி இருப்பதாக புரளியைப் பரப்பினார்கள். ஷோபா ஜான் என்ற பெண் பாலியல் தொழிலாளியை வைத்து, சபரிமலை பூசாரிகள் மீது சேற்றை வாரி இறைக்கும் பணியில் கிறிஸ்தவர்கள் ஈடுபட்டனர். இதை ராகுல் ஈஸ்வர் என்பவர் கண்டு பிடித்து, போலீஸ் உதவியுடன் வெளிக் கொண்டு வந்தார்.

வெடி மருந்து!

இதன் பின்னணியில் தாவூத் இப்ராஹிமின் கூட்டாளி பிச்சு ரஹ்மான், பிஜூ பீட்டர் ஆகியோர் இருந்தது தெரியவந்தது. இவர்கள் சபரி மலை கோயில் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டது தெரியவந்தது. கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 3 மற்றும் 4ம் தேதிகளில் சபரிமலை வனப் பகுதியில், வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அயோத்தியில் சர்ச்சைக்குரிய கட்டிடம் இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் 6ம் தேதியன்று சபரிமலையை தகர்ப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 360கிலோ வெடி மருந்தை கைப்பற்றி அழித்தனர். வனத்துறையினர் சரியான நேரத்தில் செயல்பட்டு இருக்காவிட்டால், இன்று சபரிமலையின் ஒரு பகுதி இருந்திருக்குமா என்பது சந்தேகமே?
இவை, நேரடியான தாக்குதல் என்றால், சபரி மலைக்கு வரும் பக்தர்களை இம்சிக்க கேரள அரசும், தேவசம் போர்டும் இணைந்து செய்யும் சதிகள் அதிகம். கேரளாவின் பெருவழிப் பாதையில் 1999ம் ஆண்டும், 2011ம் ஆண்டும் ஏற்பட்ட விபத்துக்கள் இதற்கு மிகப் பெரிய உதாரணங்கள். 1999ம் ஆண்டில் 40க்கும் அதிகமான பக்தர்களும், 2011ம் ஆண்டு திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட விபத்தில் நூற்றுக்கும் அதிகமான பக்தர்களும் உயிரிழந்தனர்.
இதுகுறித்து தேவ பிரசன்னம் பார்த்தபோது, சபரிமலையில் நாத்திகர்களும், போதைப் பொருள்களும், பெண்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதாகவும், கோயில் நடைமுறைகளில் சம்பந்தம் இல்லாதவர்கள் அதிகம் தலையிடுவதும் தெரியவந்தது. ஆனாலும், என்ன பயன்? கேரளாவை ஆளும் கம்யூனிச/காங்கிரஸ் கிறிஸ்தவ அரசுகள், எப்போதும் முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

தொடரும் தாக்குதல்கள்!

இதனால், சபரிமலை மெல்ல அழிந்து கொண்டிருக்கிறது. சபரிமலையைக் குறிவைத்து பல நூறு ஆண்டுகளாக முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களால் நடத்தப்படும் இந்தத் தாக்குதல்களையும், வழிபாட்டு முறைகள் மீதான நம்பிக்கையையும் மீட்டெடுக்க வேண்டிய காலகட்டத்தில் உள்ளோம். ராமர்பாலம் என்பது எப்படி இந்துக்கள் நம்பிக்கை என்றும், அதன் மீது கைவைப்பது அக்னீப் பரிட்சையைப் போன்றது என்று சுப்ரீம் கோர்ட் கூறியதோ, அதேபோல் சபரிமலை உட்பட இந்துக்களின் வழிபாடுகளின் மீது கைவைப்பதும், அவர்கள் நம்பிக்கையில் சட்டத்தை நுழைப்பதும் அக்னிப் பரிட்சை என்பதை சுப்ரீம் கோர்ட் உணர வேண்டும்.
நாடு முழுவதும் உள்ள இந்துக்கள் இதை ஒரே அணியாக உணர்த்த வேண்டும். இல்லாவிட்டால் சபரிமலை மட்டுமல்ல, நாளை நமது கண்முன்னே பல பிரபலமான கோயில்கள் உங்கள் கண்முன்னே காணாமல் போய்க் கொண்டிருப்பதை கண்கூடாக பார்க்க மட்டுமே முடியும்.

(Visited 34 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *