சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

இவரல்லவோ பிரதமர்!

மோடிஜியின் சமீபத்திய ஜப்பான் விஜயத்தால் ஏற்பட்டுள்ளப் பலன்கள் அதிகம் பேசப்படவில்லை. இது நாட்டுக்கு ஊடகங்கள் செய்யும் பச்சைத் துரோகம்.

இப்போது ஜப்பானுடன் நாம் போட்டிருக்கும் ஒப்பந்தப்படி, இனி நாம் அவர்களோடு அமெரிக்க டாலரில் வியாபாரம் செய்ய வேண்டியதில்லை. இந்திய ரூபாயிலும், ஜப்பானிய “என்”னிலும் இனி தொழில் நடத்தலாம். அமெரிக்க டாலரின் ஏற்றம், இறக்கம், நமது தொழிலதிபர்களையோ, நம் பொருளாதாரத்தையோ, பாதிக்கவே பாதிக்காது.

இதனால், திருப்பூர் பின்னலாடை வியாபாரிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் ஜப்பானில் இருந்து தருவிக்கும் தையல் மெஷினுக்கும் சரி, இங்கிருந்து ஏற்றுமதி செய்யும் ஆடைகளுக்கும் சரி, நம் நாட்டு நாணயத்திலேயே விலை பேசிக் கொள்ளலாம். இது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் தெரியுமா? ஜப்பானுடன் நாம் நடத்தும் வியாபாரம் கொஞ்சம் நஞ்சம் ரூபாய்க்கு அல்ல! 5.48 லட்சம் கோடி ரூபாய்க்கு செய்கிறோம். ஒவ்வொரு தடவையும் டாலர் மதிப்பின் ஏற்ற, இறக்கத்தால், நம் வியாபாரிகள் பெரு நஷ்டம் அடைந்து வ்ந்தனர். அது இப்போது அறவே போய் விட்டது.

திருப்பூர் மாதிரியே, நம் நாடு முழுதும் உள்ள வியாபாரிகள், தொழிலதிபர்கள் எல்லோரும், மோடியின் இந்த ஒப்பந்தத்தை மிகவும் வரவேற்கிறார்கள். மற்ற நாடுகளோடும் இது மாதிரியே ஒப்பந்தங்களைப் போட்டு, அமெரிக்க டாலரின் உலக மதிப்பைக் குறைக்க வேண்டும் என்று சொல்லுகின்றனர். இதனை ஆரம்பித்து வைத்த மோடியையும் ஜப்பானையும், உலக நாடுகள் பலவும் பாராட்டுகின்றன.

இந்த போக்கு நீடித்தால் இந்தியாவுக்கு நல்லது.

(Visited 8 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *