சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

உடல் எடையை குறைக்கும் மஞ்சள் தேநீர்!

பல விதமான சத்துக்கள் நிறைந்தது மஞ்சள். இதில் உள்ள ‘கர்க்யூமன்’ எனும் தாது பொருள் உலக மக்களுக்கு புத்துயிர் ஊட்டியுள்ளது.

கோல்டன் தூத்

தங்க நிற பால் என்று உலகெங்கும் இன்று மஞ்சள் கலந்த பால் குடிப்பது பேஷனாகி விட்டது மேலும் பொட்டாசியம், ஒமேகா-3, புரதம், நார்சத்து, லினோலெனிக் அமிலம் போன்ற பிற சத்துகளையும் கொண்டது மஞ்சள்.

மஞ்சள் தேநீர்

மஞ்சள் கலந்த தேநீர் குடிப்பதால் நமது செரிமான சக்தி நலமடைகிறது. இதுவே உடல் எடையை குறைக்க உதவுகிறது.
கொழுப்பு திசுக்களை மேலும் பெருகவிடாமல் தடுக்கும் கர்கியுமினில் கொழுப்பை கரைக்கும் சக்தி உள்ளது. இதனால் மஞ்சள் தேநீரை தினசரி குடித்துவர உங்கள் எடை குறையும்.

மஞ்சளும், இஞ்சியும்

நீரில் மஞ்சளும், கொஞ்சம் இஞ்சியும் போட்டு கொதிக்க வையுங்கள்! பின்னர் ஆற வையுங்கள்! இதனை நிதமும் குடித்து வர, கொழுப்பு கரையும். எடை குறையும்! இஞ்சி பசியை குறைக்கும். ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும்.

மஞ்சளும் புதினாவும்

இஞ்சி பிடிக்காதவர்கள் புதினா இலைகளை சேர்த்து கொள்ளலாம். புதினா கலோரியில் மிக குறைவு. நார்சத்து மிகுந்தது. செரிமானத்தை தூண்டி, கொழுப்பை கூட ஆற்றலாக மாற்றும் சக்தி கொண்டது.

மஞ்சளும் லவங்கமும்

லவங்கத்தின் நன்மைகள் ஏராளம். மூட்டு வலிகளுக்கு சிறந்தது. சர்க்கரை நோயிற்க்கு சிறந்த நிவாரணி. ஆண்டி ஆக்சிடண்ட சத்து நிறைந்தது. பொடி அல்லது லவங்க பட்டையை கொதிக்க விட்டு மஞ்சளோடு குடிக்க எடை குறையும். நலம் பயக்கும்.

மஞ்சளும் தேனும்

தேன் பசியை குறைக்கும். நிறைவை தரும். சுவை கூட்டும். தேனும் உடல் எடையை குறைக்க உதவும். சர்க்கரை கூடவே கூடாது.
மஞ்சள் பருகி வர உடல் எடை குறையும் என்பது நிச்சயம். அதோடு முறையான உணவு கட்டுபாட்டையும் கவனத்தில் கொள்க!!!

(Visited 29 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *