சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

உன் பகவான் உன்னுடன் இருக்கின்றான்…

தகப்பனே கொலை செய்ய முயற்சித்த போதும்
ப்ரஹ்லாதன் சந்தோஷமாக இருந்தான்…

சுடுகாட்டு வெட்டியானுக்கு அடிமையாக்கிய போதும்
ராஜா அரிச்சந்திரன் சந்தோஷமாக இருந்தான்…

பெற்ற பிள்ளையே கேவலப்படுத்திய போதிலும்
கைகேயி சந்தோஷமாக இருந்தாள்…

உறவினர்களே சபை நடுவே அசிங்கப்படுத்திய போதும் விதுரர் சந்தோஷமாக இருந்தார்…

அம்புப்படுக்கையில் வீழ்ந்த போதிலும்
பீஷ்மர் சந்தோஷமாக இருந்தார்…

தரித்ரனாக வாழ்ந்த சமயத்திலும் குசேலர்
சந்தோஷமாக இருந்தார்…

ஊனமாகப் பிறந்து ஊர்ந்த போதிலும் கூர்மதாஸர்
சந்தோஷமாக இருந்தார்…

பிறவிக் குருடனாக இருந்தபோதிலும் சூர்தாஸர்
சந்தோஷமாக இருந்தார்…

மனைவி அவமானப்படுத்திய போதிலும் சந்த் துகாராம்
சந்தோஷமாக இருந்தார்…

கணவன் கஷ்டப்படுத்திய போதும் குணவதிபாய்
சந்தோஷமாக இருந்தாள்…

இருகைகளையும் வெட்டிய நிலையிலும் சாருகாதாஸர்
சந்தோஷமாக இருந்தார்…

கைகால்களை வெட்டிப் பாழுங்கிணற்றில் தள்ளியபோதும்
ஜயதேவர் சந்தோஷமாக இருந்தார்…

மஹாபாபியினிடத்தில் வேலை செய்த போதும்
சஞ்சயன்சந்தோஷமாக இருந்தார்…

பெற்ற பிள்ளையை பறிகொடுத்த போதும் பூந்தானம்
சந்தோஷமாக இருந்தார்…

கூடப்பிறந்த சகோதரனே படாதபாடு படுத்தியபோதும்
தியாகராஜர் சந்தோஷமாக இருந்தார்…

நரசிம்மர் சன்னிதியில் விஷ தீர்த்தம் தந்த போதும்
மஹாராஜா ஸ்வாதித் திருநாள் சந்தோஷமாக இருந்தார்…

சோழ ராஜனின் சபையில் கண்ணை இழந்த பின்பும்
கூரத்தாழ்வான் சந்தோஷமாக இருந்தார்…

எப்படி முடிந்தது இவர்களால்?

ரகசியம்…

அவர்களோடு பகவான் எப்பொழுதும்
இருக்கின்றான் என்று உணர்ந்ததால்!

அதனால் இனிமேல் அல்ப விஷயங்களுக்காக அழாதே!

எது எப்படி இருந்தாலும், யார் எப்படி நடத்தினாலும்,

எவர் மாறினாலும், எதை இழந்தாலும், யாரை இழந்தாலும்,

உன் க்ருஷ்ணன் உன்னுடன் இருக்கின்றான்….

ஆதலால் விடாது…

திடமாக பகவானை நம்பு…

நீயும் சந்தோஷமாக இரு…

(Visited 42 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *