சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

உலக மக்களுக்கு உதவும் 10 புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள்…!

உலகெங்கும் உள்ள விஞ்ஞானிகள் பல சுகங்களை துறந்து, உலக மக்களின் நன்மைக்காக அல்லும் பகலும் அயராது, உற்சாகத்தோடு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் இந்த அபார முயற்சியால் நமக்கு கிடைத்துள்ள சில அரிய கண்டுபிடிப்புகளை பார்ப்போம்.

முடக்கு வாதம் எனப்படும் பெராலிஸிஸ் நோயால் பாதிக்கபட்டு நடக்க முடியாதவர்கள் நடக்கலாம்!

அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் நரம்பியல் வல்லுநர்கள் ஒன்றிணைந்து, அரும்பாடுபட்டு இந்த அதி அற்புதத்தை நடத்தி காட்டியுள்ளனர்.

இடுப்பிலிருந்து கீழே முற்றிலும் செயல் இழந்து விட்டவர்களின் வாழ்வில் ஒரு அதிசய நிகழ்வு!!!

44 வார பயிற்சியுடன் அவர்கள் நடக்க போகிறார்கள். எலக்டிரானிக் கருவி பொருத்திக் கொள்வதால், அவர்களது கால்களில் நரம்புகள் முழுவதும் செயலிழந்து விட்டாலும் நடக்கின்றனர்!!

முதல் முழு கலர் எக்ஸ்ரே!

நியுசிலாந்து நாட்டு விஞ்ஞானிகள் உலகின் முதல் 34 கலர் எக்ஸ்ரே கண்டு பிடித்துள்ளனர். இது பழைய கலர் எக்ஸ்ரேயை பின் பற்றித்தான் ஆராய்ச்சி செய்யப்பட்டது. ஆனால் இந்த புதிய 34 எக்ஸ்ரே கருவி ‘மெடிபிக்ஸ்’ எனும் துகளை துருவி ஆராயும் தொழில் நுட்பம் கொண்டது.

இந்த மெடிபிக்ஸ் கருவி உயர்ரக நவீன காமரா போலவே செயல்பட்டு, நமது உடலில் உள்ள வெவ்வேறு பகுதிகளை, வெவ்வேறு நிறங்களால் காட்டி கொடுக்கிறது! தசை, எலும்பு, நரம்பு என பிரித்துக் காட்டுவதால், புற்றுநோயை இந்த எக்ஸ்ரே மூலமாகவே காணலாம். எங்கெல்லாம் பரவியுள்ளது என்று கண்டு பிடித்து விடலாம்.

மாரடைப்பை முன்கூட்டியே சொல்லும் சிறிய ஜாக்கெட்

இது பார்ப்பதற்கு சாதாரண ஜாக்கெட் போல இருந்தாலும், உண்மையில் இது ஒரு சூப்பர் பாதுகாவலன். டாக்டர் தேவை இல்லை. இந்த ஜாக் கெட்டை மாட்டிக் கொண்டால் 24 மணி நேரமும் ஈ.ஸி.ஜி, ரத்த அழுத்தம், நாடி என செக் பண்ணிக் கொண்டே இருக்கும். இதன் ரிப்போர்ட் எல்லாம் நமது ஸ்மார்ட்போனில் உள்ள ஒரு செயலி மூலம் பாதுகாக்கப்படும்.

மாரடைப்பு வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே இந்த செயலி மூலம் நமக்கு ஒரு எச்சரிக்கை வந்து விடும். தற்போது பரிசோதனையில் இறுதி கட்டத்தில் உள்ள இந்த ஜாக்கெட் வெகு விரைவில் பலரை பாதுகாக்க வந்துவிடுமாம்.

சொட்டு மருந்து போதும் – கண்ணாடி தேவை இல்லை!!!

இஸ்ரேலின் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஒரு
புதிய சொட்டு மருந்தை கண்டு பிடித்துள்ளனர். இந்த சொட்டு மருந்தை கண்ணில் போட்டுக் கொண்டால், இது கார்னீயா எனப்படும் நமது விழித்திரையினை திருத்தும் சக்தி கொண்டது, எனவே தூரப்பார்வை, கிட்டப்பார்வை என எது இருந்தாலும் இந்த சொட்டு மருந்து போதும்! கண்ணாடி தேவையே இல்லை. டேவிட் ஸ்மட்ஜா எனும் ஆராய்ச்சியாளர் ஒரு படி மேலே போய், இந்த சொட்டு மருந்து காட்டிராக்ட் வராமல் தடுப்பதோடல்லாமல், நமது பார்வையை முன்னை விட சிறப்பாகவும் ஆக்கும் என்கிறார்.

முதல் பறக்கும் டாக்ஸி

ஏரோகார் ஈஹேங் 184 எனும் இந்த குட்டி விமானம் பார்ப்பதற்கு ‘டிரோன்’ போல இருந்தாலும், 130 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்க கூடியது. சீனாவின் இந்த பறக்கும் டாக்ஸியின் இன்னொரு சிறப்பம்சம், டிரைவர் அல்லது ஒட்டுநரே தேவையில்லை. இருவர் அமர்ந்து கொண்டு, பின் செல்ல வேண்டிய இடத்தின் முகவரியை டைப் அடிக்க வேண்டியது தான். டாக்ஸி நிமிடங்களில் பறந்து சென்று உங்களை இறக்கி விட்டு விடும்.

எண்ணங்களால் இயக்கப்படும் ரோபோ கை..

முதுகு தண்டு பிரச்சினையால் கை, கால்களின் செயல்பாடுகளை இழந்து விட்டவர்கள், வாத நோய் வந்தவர்களுக்கு இந்த ரோபோ கை ஒரு வரபிரசாதம். சுவிஸர்லாந்தின் ஆய்வாளர்களின் அருமுயற்சியால், எண்ணத்தால் இயக்கப்படும் ‘கை’ உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ‘ரோபோ கையின்’ எலக்ட்ரோட்ஸ், தலை கவசத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோ கையினை இயக்குபவர்கள் இந்த ஹெல்மெட்டை போட்டுக் கொண்டு, மிக எளிய பயிற்சியோடு இந்த ‘ரோபோ கையை’ தமது எண்ணங்களால் இயக்கலாம். நினைத்து பார்க்கவே மனம் நெகிழ்கிறது. தமது வேலைகளை செய்து கொள்ளும் வாய்ப்பு ஒன்றே இவர்கள் அன்றாடம் தெய்வத்திடம் வேண்டிக் கொள்வது!!!

மரபணுக்களை சீர் செய்வதன் மூலம் வியாதிகளை தடுப்பது…

அமெரிக்காவின் ஒரேகன் பல்கலைகழகத்தில் ஆகஸ்ட் 2017ம் ஆண்டு ஒரு மருத்துவ புரட்சி சத்தமில்லாமல் நடந்துள்ளது.

இதய நோய்களை தரும் மரபணுக்களை சீர் செய்யும் ஆராய்ச்சி வெற்றி பெற்றது.

44 வயது ஆடவருக்கும் கூட இந்த மரபணுவால் ஏற்பட்டுள்ள ஒரு வித அரிய மரபணு நோய் குணமாகுமா என்பது இன்னும் சில காலம் பொறுத்தே ஆராய்ச்சி பதில் தரும். ஆனாலும் இன்னும் சில ஆண்டுகளில் மரபணு மாற்றங்கள் மூலமாக பல விதமான வியாதிகளை தடுக்கவும், தீர்க்கவும் முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கான்சர் எனும் கொடிய நோய்க்கு மருந்து கிடைக்க போகிறது..

கான்சர் எனும் நோயை கண்டு இனி அவ்வளவு பயம் தேவை இல்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள். முற்றிலும் வியாதியினை குணப்படுத்துவது தற்போது கடினம் என்றாலும் கூட, மிக விரைவில் குணமாக்குவோம் என்று நம்பிக்கை தருகிறார்கள். சர்வைகல் கான்சர் வந்த பெண்களுக்கு, ஆண் விந்தோடு, கான்சர் மருந்தை கருப்பைக்குள் செலுத்தி விட 90% கான்சர் செல்கள் காணாமல் போய்விட்டனவாம்!!!

கீமோ தெரபியை விட இந்த முறையில் அதிக சக்ஸஸ் இருப்பதால் இனி கீமோதெரபிக்கு பதில் இந்த மருந்தையே உபயோக படுத்தலாம் என்கிறது மருத்துவ உலகம்.

செவ்வாயில் நீர் உள்ளது

செவ்வாயில் நீர் உள்ளது என்று அறிவியல் அறிந்திருந்தாலும், ஜூலை 2018ம் ஆண்டில் தான் இத்தாலியின் வானியல் ஆராய்ச்சியாளர்கள் 20கி.மி அகலமும், 90 செ ஆழமும் கொண்ட ஒரு நதியை கண்டு பிடித்துள்ளனர். அப்புறம் என்ன?? பூமியில் தான் இடப்பற்றாக்குறை…

2022 முதல் செவ்வாய் கிரகத்தில் குடி அமர்த்த போகிறார்களாம்.

ஆண்களுக்கு கருத்தடை மாத்திரை ரெடி!

பல ஆண்டுகளாக முயற்சித்து வரும் ஆராய்ச்சி யாளர்களுக்கு இறுதியில் வெற்றி கிட்டியுள்ளது. ஆண்களுக்கு பக்க விளைவு இல்லாத கருத்தடை மாத்திரைகள் வெகு விரைவில் மார்கெட்டில் கிடைக்க உள்ளது.

இந்த புதிய கருத்தடை மாத்திரைகளை சாப்பிட்டு வந்தால் விந்து உருவாவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். முதலில் வந்த ஆண்களின் கருத்தடை மாத்திரைகள் பல பாதிப்புகளை உருவாக்கியதால் தோல்வி அடைந்தது.

ஆனால் வாஷிங்டனில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், முயற்சியை விடாமல், தொடர்ந்து செய்து வந்தார்கள்.

இனி எல்லாம் சுபம் தான். ஆண்களுக்கான பாதிப்பில்லா கருத்தடை மாத்திரைகள் விரைவில்…

பொது நன்மை கருதி, அயராது பாடுபடும் இந்த விஞ்ஞானிகளுக்கு உலக மக்கள் சார்பில் கோடானு கோடி நன்றிகள்.

(Visited 85 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *