
என்ன ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாங்க…
என்ன ஆச்சுண்ணே..
அதை ஏம்மா கேக்குற?
நான் பாட்டு சிவனேன்னு தானே போய்கிட்டு இருந்தேன்.
அர்னால்டு குப்புசாமி அர்னால்டு குப்புசாமினு ஒருத்தன்.. ஒன்பது மணிக்கு டிவில தினம் வந்து கத்துவானே..
அர்னாப் கோஸ்வாமிண்ணே..
ஏதோ ஒண்ணு..
தேசிய ஊடகம், வறீங்களான்னு கூப்பிட்டாம்மா!! ரொம்ப மரியாதையாதான் கூப்பிட்டாம்மா. யாரோ சுருதி ராணின்னு ஒரு அம்மா கூட பேசணும். போட்டிக்கு வாரியான்னு கேட்டாம்மா..
சினிமாவுலேயும், டி வியிலயும் நடிச்சிருக்குதாம்..
சரி, நமக்கு தெரியாத நடிப்பான்னு போயிட்டேம்மா.
அப்புறம்?
ஆரம்பிக்கும்போதெல்லாம் நல்லாத்தான் போயிட்டுருந்துச்சும்மா.
அந்த குப்புசாமி “நான் உங்கள் ரசிகன். பதினோரு வயசா இருக்கும்போது எங்க அப்பா முதன் முதலா உங்க படத்துக்குதான் கூட்டிபோனாருன்னான்.
நான் அப்டியே சாக் ஆயிட்டேன்.
அப்புறம்?
அதை எப்படி என் வாயாலே சொல்லுவேன்?
ஸ்.. ஸ்.. ய..ம்.. மா.. ய..ம்..மா.
பார்த்து மெதுவாண்னே..
இப்ப மதுரைல போய் வம்பிழுத் தேன்னு வச்சுக்க. நடு வயித்திலேயே நங்கு நங்குன்னு நொங்கி புணம் புரட்டுவாங்க இல்லே. அது மாதிரிதாம்மா,போக போக புரட்டி புரட்டி எடுத்துருச்சும்மா.. மனுசன் மேட்டரையும் மாடு மேட்டரையும் மிக்ஸ் பண்ணி அடிச்சிருச்சும்மா. என்னா அடி!!. கராத்தே பழகியிருக்கும்போல..
ஏன்னே, நீங்க சும்மாவா இருந்தீங்க?
ரெண்டு தடவை எந்திரிச்சேம்மா. ரொம்ப குளிருச்சா, கொண்டு போன கோட்டை மாட்டிகிட்டு உட்காந்திட்டேன்.
நானும் நம்மூர் மீடியக்காரன்மாதிரி இருப்பானோன்னு நினைச்சி தூத்துக்குடி தூத்துக்குடின்னு சொல்லிப்பார்த் தேம்மா. மோடி தான் காரணம்னு சொல்ல ஆரம்பிச்சேம்மா. எவன் கேட்குறான்!!. நான் பேசினது எனக்கே காதில விழலைம்மா..
என்னண்ணே, ஒரு தமிழனை இப்படி பிரிச்சு மேஞ்சிருக்காங்க. சும்மாவா வந்தீங்க?
நானும் திருப்பி கொடுக்கணும்னு தாம்மா எந்திரிச்சேன்.. அப்ப அந்த குப்புசாமி சொன்னான்
“இவரோட கடைசி பட ஷூட்டிங்கை கூட தள்ளி வச்சிட்டு இந்த ப்ரோக்ராமுக்காக வந்துட்டாரு, ரொம்ப நல்லவருன்னு சொன்னாரும்மா … வ்.. வ் ..