சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

எம் தேசமே பெரிது… பதிலடி கொடுப்போம்

புல்வாமாவில் ஓடிய ரத்த ஆறுக்கு ராணுவம் பதிலடி!

தன் நாட்டில் நிம்மதி, வளர்ச்சி இல்லை என்பதற்காக, அண்டை நாடான நம் இந்தியாவை சீர் குலைப்பது என்ற ஒரே ஒரு கோட்பாட்டை தான் சுதந்திரம் பெற்ற 1947ம் ஆண்டு முதல் எழுதப்படாத அரசியல் அமைப்பு சாசனமாக பாகிஸ்தான் பின்பற்றிக் கொண்டிருப்பது. எல்லைப் போர்களால் வாங்கிக் கட்டிக் கொண்ட பாகிஸ்தான், போர் மூலம் பாரதத்தை பணிய வைக்க முடியாது என்பதை உணர்ந்து, கொல்லைப்புற வாசல் வழியாக தீவிரவாதத்தை அரங்கேற்றிக் கொண்டே இருக்கிறது.

1996ம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்புத் தொடங்கி, கார்கில்போர், பாராளுமன்றத் தாக்குதல், 2008 மும்பை தாக்குதல், யூரி மற்றும் பதான்கோட் ராணுவ முகாம்கள் மீது தாக்குதல் என்று பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற லஸ்கர் இ தொய்பா மற்றும் அதன் நவீன வடிவமான ஜெய்ஸ் இ முகமது ஆகிய தீவிரவாத அமைப்புகளின் இன்னும் இந்தியாவில் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.

சிஆர்பிஎப் மீது தாக்குதல்!

இந்த வரிசையில், கடந்த 14ம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபுரா நகரத்துக்கு அருகாமையில் உள்ள லெதிபுரா என்ற இடத்தில், தேசிய நெடுஞ்சாலை எண் 44 வழியாக, துணை ராணுவப்படையான சிஆர்பிஎப் படையினர் சென்று கொண்டிருந்தனர். மொத்தம் 2 ஆயிரத்து 500 வீரர்கள் 78 வாகனங்களில் ஜம்மு முகாமில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இவர்களில் பெரும்பாலான வீரர்கள் விடுமுறை முடிந்து பணிக்குத் திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

பிற்பகல் 3.30 மணியவளில், தேசிய நெடுஞ்சாலையையொட்டிய சர்வீஸ் சாலையில் இருந்து, சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பஸ் நோக்கி பாய்ந்து வந்த மஹிந்திரா சொகுசுக் கார் ஒன்று, கண் இமைக்கும் நேரத்தில் பஸ் மீது மோதியது. இதில் காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி பொருள் வெடித்து சிதறியது. இதில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பஸ் உருக்குலைந்தது. அந்த வாகனத்தில் பயணம் செய்த 44 வீரர்களும் சம்பவ இடத்திலும், ஸ்ரீநகரில் உள்ள ராணுவ மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். பலர் பலத்த காயமடைந்து, உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

பாகிஸ்தான் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்பு!

புல்வாமாவில் சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் மீது நடத்தியத் தாக்குதலுக்கு, பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஸ் இ முகமது என்ற தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. இதன் தலைவனாக இருக்கும் மசூத் அசார், இந்தியாவின் மீது நடைபெற்ற பல தீவிரவாதத் தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டவன், இப்போதும் செயல்பட்டுக் கொண்டிருப்பவன். இந்த சம்பவம் குறித்து, இந்த தீவிரவாத இணையதளத்தின் வாயிலாக வெளியிடப்பட்ட வீடியோ செய்தியில், பயங்கரவாதி அடில் அஹமத் தார் என்பவன், ஜெய்ஸ் இ முகமது இயக்கத்துக்காக இந்தத் தாக்குதலில் ஈடுபட்டு, சொர்க்கம் செல்லவுள்ளதாகவும், இறந்து சொர்க்கம் செல்லும் அவனுக்கு அங்கே அழகிகளும், ஒயினும் வழங்கப்படும் என்றும் வீடியோ செய்தியில் கூறியுள்ளான்.

கொந்தளித்த தேசம்!

புல்வாமா பகுதியில் நடைபெற்ற தாக்குதல், யூரி மற்றும் பதான்கோட் தாக்குதல்களைவிட 2 மடங்கு உயிர் சேதத்தை ஏற்படுத்திய நிலையில், தேசம் முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் தீவிவாதத் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியாவும் பதிலுக்கு பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று பாரபட்சம் இல்லாமல் அனைத்துத் தரப்பில் இருந்தும், மத்திய அரசுக்கு நெருக்கடியும் வேண்டுகோளும் விடுக்கப்பட்டது.
‘இந்தத் தீவிரவாதத் தாக்குதல் மூலம், பாகிஸ்தான் மன்னிக்க முடியாத குற்றத்தை செய்துவிட்டது. நினைத்துப் பார்க்க முடியாத வகையில், பதிலடி இருக்கும். இனி நடக்கும் எதிர்மறை விளைவுகளுக்கு இந்தியா பொறுப்பாகாது. ராணுவத்தின் கை கட்டுகள் நீக்கப்பட்டுவிட்டன’ என்ற பிரதமர் மோடியின் எச்சரிக்கை, உண்மையில் பாகிஸ்தானைவிட, ஐரோப்பிய நாடுகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளன.

பாகிஸ்தானில் சுற்றுப் பயணத்தில் உள்ள தங்கள் நாட்டவர்கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என்று அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

முட்டாள்தனமான வாதங்கள்…

உயர் பாதுகாப்பு நிறைந்த காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலைகளில், தீவிரவாதிகளின் தாக்குதல் என்பது சாத்தியம் இல்லாத ஒன்றாகும். தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட 350 கிலோ வெடி பொருள் எப்படி வந்தது? ராணுவ வீரர்கள் எப்படி சாதாரண வாகனங்களில் அழைத்துச் செல்லப்பட்டனர். இது தேர்தல் நெருங்கும் நேரத்தில், ஓட்டுக்காக செய்யப்பட்ட நாடகமாக இருக்கலாம் என்று தமிழகத்தைச் சேர்ந்த சில முட்டாள்கள் மிகக் கேவலமான விமர்சனங்களை முன் வைத்துக் கொண்டிருந்தனர்.

உண்மையில் காஷ்மீர் மாநிலத்தின், எல்லையைக் கூட பார்த்திராத இவர்கள்தான் இப்படிப்பட்ட அதி புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்துக் கொண்டு, அரைகுறை விபரங்களுடன் விமர்சனத்தை முன் வைக்கின்றனர்.

உண்மையில் காஷ்மீரில் நடப்பது என்ன?

சில மாதங்களுக்கு முன்னர் தமிழின் முன்னணி வார இதழ் ஒன்று காஷ்மீருக்கு தன் நிருபர்களை அனுப்பியதாக கூறிக் கொண்டு, ‘காஷ்மீர் பிரச்னையைப் பேசித் தீர்க்கணும்’ என்று கட்டுரை பதிப்பித்தது. உண்மையில், நீண்ட பாரம்பரியம் கொண்ட பத்திரிகை எப்படி ஒரு அரைகுறை கட்டுரை வெளியிட்டது என்பது பலருக்கும் வியப்பான ஒரு விஷயமாக இருந்தது. ஆனால், இதுதான் காஷ்மீரின் உண்மையான நிலரவம். காஷ்மீரில் உள்ள மாவட்டங்கள் 22. மொத்த நிலப்பரப்பு ஒரு லட்சத்து ஆயிரத்து 380 சதுர கி.மீட்டர். இதில் காஷ்மீர் 15 சதவீம், ஜம்மு 26 சதவீதம் மற்றும் லடாக் 59 சதவீத நிலப்பரப்பைக் கொண்டது. மொத்த நிலப்பரப்பில் 85 ஆயிரம் சதுர கி.மீட்டர் பரப்பளவில் முஸ்லீம்கள் பெரும்பான்மை மக்கள் அல்ல. காரணம், மொத்த மக்கள் தொகை ஒரு கோடியே 25 லட்சம் மட்டுமே.
மொத்தமாக காஷ்மீரில் ஏழரை லட்சம் பேர் குடியுரிமை இல்லாத மக்கள்.

இதில் காஷ்மீரில் 69 லட்சம் பேர் உள்ளனர். இவர்களில் 55 லட்சம் பேர் காஷ்மீரி மொழியையும், மற்ற 13 லட்சம் பேர் காஷ்மீரி அல்லாத மொழிகளையும் பேசுகின்றனர்.

ஜம்மு பகுதியில் 53 லட்சம் பேர் உள்ளவர். இவர்கள் டோக்ரி, பஞ்சாபி மற்றும் இந்தி பேசுகின்றனர். லடாக் பகுதியில் 3 லட்சம் பேர் லடாக்கி மொழி பேசுகின்றனர். மொத்தம் உள்ள 22 மாவட்டங்களில் 5 மாவட்டங்களில் மட்டுமே பிரிவினை வாதிகளின் அட்டகாசம் உள்ளது. குறிப்பாக, ஸ்ரீநகர், அனந்த்நாக், பாரமுல்லா, குல்காம் மற்றும் புல்வாமா மாவட்டங்களைத் தவிர, 17 மாவட்டங்கள் இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாடுள்ளவை. பிரிவினைவாதிகளும் யார் என்று பார்த்தால், 15 சதவீத சன்னி முஸ்லிம்கள்தான்.

காஷ்மீர் மாநிலத்தில் ஷியா முஸ்லிம்கள், டோக்ரா, காஷ்மீர் பண்டிட்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், குஜ்ஜார்கள் உட்பட பலரும் இந்தியாவின் பக்கம் உள்ளனர். காஷ்மீரி மொழி பேசும் 33 சதவீத மக்களை பிரிவினைவாத குழுக்கள், தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் தேசிய கட்சி ஆகியவை ஆட்டிப் படைக்கின்றன. இந்த சன்னி முஸ்லிம்களுக்கு நேர் எதிர்பாடு நிலை கொண்டு, மற்றவர்கள் உள்ளனர். ஆனால், ஒட்டு மொத்த காஷ்மீரும் இந்தியாவுக்கு எதிராக உள்ளதாக, இங்குள்ள சில தற்குறிகள் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கின்றனர்.

கல்லெறிந்தாலும், ராணுவம் வேடிக்கைப் பார்க்கணும்!

ஸ்ரீநகர், அனந்த்நாக், பாரமுல்லா, குல்காம் மற்றும் புல்வாமா மாவட்டங்களில் உள்ள பிரிவினைவாதிகளுக்கும், காஷ்மீர் அரசியல்வாதிகளுக்கும் நேரடி தொடர்புண்டு. காரணம், தங்களுக்கு விளம்பரம் தேவைப்படும்போது எல்லாம், ஸ்ரீநகர் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள் மீது கல்வீச்சை நடத்தி பதட்டத்தை உருவாக்கி, அதை பிரஸ் மீட் வைத்து தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வார்கள்.

புல்வாமாவில் பாதுகாப்புப் பணியில் உள்ள சிஆர்பிஎப் ஜவான் என்ன சொல்கிறார் என்று பாருங்களேன்…

‘‘காஷ்மீர் மாநிலத்துக்கு வளர்ச்சிக்கு என்று மத்திய அரசு கொடுக்கும் நிதியின் பெரும் பங்கு பிரிவினைவாதிகள் வழியாக, இந்தக் கல்லெறியும் கும்பல்களுக்கு அனுப்பப்படுகிறது. தமிழகத்தில் பொதுக் கூட்டத்துக்குச் சென்றால், குவார்ட்டர் கோழி பிரியாணி என்பதுபோல், இங்கே கல்லெறிந்தால் தினமும் 500 ரூபாய் சம்பளம் உறுதி. ஸ்ரீநகர் உட்பட முக்கிய நகரங்களில் இயல்பு நிலை இருப்பதாக நாங்கள் நினைத்து, ரோந்து வாகனங்களில் செல்வோம்.
வழக்கமாக கடை திறந்திருக்கும் வியாபாரி, எங்கள் ரோந்து வாகனங்களைப் பார்த்ததும், தன் கடையை மூடிவிட்டு முழுவீச்சில் கற்களை எறியத் தொடங்கிவிடுவார். இதில் எதிர்பாராதவிதமாக காயம் ஏற்படுவதும் உண்டு. ஆனால், நாங்கள் துப்பாக்கி சூடு நடத்தக்கூடாது. பெல்லட் குண்டுகளைப் பயன்படுத்தினால், இங்கே மனித உரிமை கோமாளிகள், முஸ்லிம் பிரிவினைவாதிகள போஸ்டர் அடித்து, ஒப்பாரி வைத்துவிடுவார்கள்’’ என்று கொந்தளிக்கிறார். எல்லா மாநில நிதியையும் ஆடிட் செய்யும் பொது தணிக்கைக் குழு, காஷ்மீருக்கான நிதியை மட்டும் ஏன் ஆடிட் செய்ய மறுக்கிறது என்பது அவரது கேள்வியாக உள்ளது.

புல்வாமா தாக்குதல் எப்படி நடந்தது?

புல்வாமா தாக்குதல் பிப்ரவரி 14ம் தேதி நடந்தது. அதற்கு 2 நாட்களுக்கு முன்னர், பாகிஸ்தானின் பலுசிஸ்தான் எல்லையில் உள்ள ஈரான் நாட்டின் சிஸ்டான் பகுதியில், ரோந்துப் பணியில் இருந்த ஈரான் ராணுவத்தினர் மீது, பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஸ் அல் அடில் என்ற தீவிரவாத இயக்கம் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 27 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், விடுமுறை முடிந்து ஜம்மு முகாமுக்குத் திரும்பிய சிஆர்பிஎப் வீரர்கள், சில நாட்கள் நடைபெற்ற பணி ஒதுக்கீடு ஆலோசனைகளுக்குப் பின்னர் ஸ்ரீநகர் முகாம் நோக்கி பயணம் செய்தனர். பிப்ரவரி 14ம் தேதி தனித்தனி வாகனங்களில் சீரான இடைவெளியில் சென்ற வாகனங்களில் ஒன்றின் மீது, தீவிரவாதி வெடிகுண்டு தாக்குதல் நடத்தினான்.

இந்தத் தாக்குதலில் 350 கிலோ வெடி மருந்து பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது. தீவிர விசாரணைக்குப் பின்னர் 80 கிலோ வெடி மருந்து பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. அதிலும், பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்தும் ஆர்டிஎக்ஸ் வெடி மருந்து, இந்தத் தாக்குதல்களை மனதில் கொண்டே 6 மாதங்களுக்கு முன்னர் சிறிது சிறிதாக சேகரிக்கப்பட்டு, புல்வாமா பகுதியில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, சன்னி பிரிவு முஸ்லிம் பெண்கள் மூலம் (கறுப்பு அங்கியை யாரும்

காஷ்மீரில் மொத்தம் உள்ள 22 மாவட்டங்களில் 5 மாவட்டங்களில் மட்டுமே பிரிவினை வாதிகளின் அட்டகாசம் உள்ளது. குறிப்பாக, ஸ்ரீநகர், அனந்த்நாக், பாரமுல்லா, குல்காம் மற்றும் புல்வாமா மாவட்டங்களைத் தவிர, 17 மாவட்டங்கள் இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாடுள்ளவை. பிரிவினைவாதிகளும் யார் என்று பார்த்தால், 15 சதவீத சன்னி முஸ்லிம்கள்தான்

சோதிக்க முடியாது) என்பதால், இந்தக் கடத்தல் சாத்தியமாகியுள்ளதாக உளவு அமைப்புகள் கூறுகின்றன.

எச்சரித்த உளவு அமைப்புகள்!

காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் மிகப் பெரிய அளவில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக, உளவு அமைப்புகள் ஏற்கனவே எச்சரித்து இருந்தன. யூரி மற்றும் பதான்கோட் ராணுவ முகாம்கள் மீது தீவிரவாதிகள் ஏற்கனவே நடத்திய தாக்குதல்களை மனதிற்கொண்ட ராணுவ அதிகாரிகள், ராணுவ முகாம்களின் பாதுகாப்பை பலப்படுத்தினர்.

தாக்குதல் நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்னர் புல்வாமா பகுதியில் வெடி பொருட்கள் இருப்பதாக, பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து 11ம் தேதி, அங்குள்ள ரட்னிபோரா என்ற இடத்துக்கு பாதுகாப்புப் படையினர் விரைந்து, தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால், பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகளை நெருங்கவிடாமல், அங்கிருந்த சன்னி பிரிவு முஸ்லிம்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.

அத்துடன், பாதுகாப்புப் படைய வாகனங்கள் மீதும் சரமாரியாக கல்மழை பொழிந்தது. துப்பாக்கி சூடு நடத்தினால், வழக்கம்போல் போஸ்டர் அடித்து ஒப்பாரி செய்வார்கள் என்ற சங்கடத்தால், பாதுகாப்புப் படையினர் பின்வாங்கினர்.

பிப்ரவரி 11 ஆம் தேதி புல்வாமா மாவட்டத்தில் இராணுவத்தினர் மீது நடைபெற்ற கல்வீச்சு, அனைத்து மீடியாக்ளகளிலும் வந்துள்ளது. அன்றே கல்வீசியவர்களை அடித்து நொறுக்கி, தேடுதல் வேட்டையை முடுக்கியிருந்தால், இத்தகைய தாக்குதல் நடந்திருக்காது. ஒட்டு மொதத்தில், தீவிரவாத தாக்குதல் பலவும், உள்ளூர் மக்கள் சிலரின் ஒத்துழைப்புடனே நடைபெறுகிறது.

ஈவு இரக்கமற்ற பிரிவினைவாதிகள்!

பிப்ரவரி 14ம் தேதி பிற்பகல் நடைபெற்றத் தாக்குதலில் சக வீரர்கள் சென்ற பஸ் சிதைந்து பலர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில், பின்னால் வாகனங்களில் வந்த சிஆர்பிஎப் வீரர்கள் அவர்களை மீட்கும் துடிப்புடன் கீழே இறங்கி, இறந்தவர்கள் உடலை மீட்டும், காயம்பட்டவர்களை ஸ்ரீநகர் மருத்துவமனைக்கும் அனுப்பும் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆனாலும், அப்போதும் ஆத்திரம் தீராத பிரிவினைவாதிகள் பலர் ஆண்,பெண் வேறுபாடு இல்லாமல் சிஆர்பிஎப் வீரர்கள் மீது சரமாரியான கல்லெறித் தாக்குதலில் ஈடுபட்டனர். கூடுதல் படைகள் அந்த இடத்துக்கு வந்தவுடன் ஓட்டம் பிடித்தனர் அந்த கொடூரர்கள்.

பிப்ரவரி 14ம் தேதி பிற்பகல் நடைபெற்றத் தாக்குதலில் சக வீரர்கள் சென்ற பஸ் சிதைந்து பலர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில், பின்னால் வாகனங்களில் வந்த சிஆர்பிஎப் வீரர்கள் அவர்களை மீட்கும் துடிப்புடன் கீழே இறங்கி, இறந்தவர்கள் உடலை மீட்டும், காயம்பட்டவர்களை ஸ்ரீநகர் மருத்துவமனைக்கும் அனுப்பும் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆனாலும், அப்போதும் ஆத்திரம் தீராத பிரிவினைவாதிகள் பலர் ஆண்,பெண் வேறுபாடு இல்லாமல் சிஆர்பிஎப் வீரர்கள் மீது சரமாரியான கல்லெறித் தாக்குதலில் ஈடுபட்டனர்.

பிச்சை எடுக்கும் பாகிஸ்தான்!

உள்நாட்டுக் குழப்பம், வணிக சரிவு, பொருளாதார வீழ்ச்சி ஆகியவை தொடர்ந்து தாக்கிவரும் நிலையில், பாகிஸ்தான் அரசு தன் அன்றாட செயல்பாடுக்குத் தேவையான நிதியைத் திரட்டவே தள்ளாடிக் கொண்டிருக்கிறது. அதேநேரத்தில் தன் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ வழியாக, லஸ்கர், ஜெய்ஸ் இ முகமது உட்பட பல்வேறு தீவிரவாத அமைப்புகளுக்கான நிதியை வழங்குவதை மட்டும் தொய்வில்லாமல் பார்த்துக் கொள்கிறது என்பதே உண்மை.

நிதிப்பிரச்னை காரணமாக சீனா, சவுதி ஆகிய நாடுகளிடம் பல ஆயிரம் கோடி டாலர் பாகிஸ்தான் கடன் கோரியிருந்தது. இதில் சவுதி அரேபியா 42 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. பாதி ரொக்கம், மீதி கடன் தள்ளுபடி. இதுபோது ஐஎம்எப் அமைப்பிடம் கடன் வாங்கவுள்ளது. இப்படி கடனால் அள்ளாடும் பாகிஸ்தானின் ஒரே நம்பிக்கை, இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களால் கிடைக்கும் வருமானம்தான். புல்வாமா தாக்குதலுக்குப் பின்னர் ஒரே நாளில் வர்த்தக உறவை முறித்துக் கொள்வதாக அறிவித்த மத்திய அரசு, பாகிஸ்தான் இறக்குமதி பொருட்கள் மீது 200 சதவீத வரி விதிப்பை அறிவித்தது. இதனால், பாகிஸ்தான் வியாபாரிகள் நொந்துபோய்விட்டனர். இது தொடக்கம்தான், இன்னும் போகப்போக பாகிஸ்தான் பொருளாதாரத்தின் முதுகெலும்பை முறிக்கும் வகையில் இந்தியாவின் நடவடிக்கை இருக்கும் என்கின்றது மத்திய அரசு.

சிறு யுத்தம் மூளுமா?

கார்கில் போர் போன்று, இப்போதைய சூழலில் சிறு அல்லது குறு யுத்தம் மூளும் வாய்ப்புள்ளதாக பலரும் கூறுகின்றனர். ஆனால், இந்த யுத்தத்துக்குப் பின்னணியில் சீனாவின் பங்களிப்பு அதிகம் இருக்கும். பொருளாதார மற்றும் ராணுவ ரீதியாக இந்தியாவை நேரடியாக எதிர்க்க முடியாத சீனா, தன் அதிநவீன ஆயுதங்களை, பாகிஸ்தானுக்கு வழங்கி, அவற்றின் தரத்தை பரிசோதிக்கும் களமாக இந்தியாவைப் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்புள்ளது.

காரணம், ராணுவ பலத்தில் சம நிலையில் இருந்தாலும், அதிநவீன ஆயுதங்களில் நம்மைவிட சீனா சற்று முன்னேயுள்ளது. அதேநேரத்தில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற போர்களில் ஏற்பட்ட தோல்விகள் (கார்கில் வரை), இதன் பின்னர் நடைபெற்ற சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதல் ஆகியவற்றால் பாகிஸ்தான் உஷாராகி இருக்கும். இப்போதைக்கு யுத்தம் மூளுமானால், அதை பாகிஸ்தான் மட்டும் நடத்தாது. இந்தியாவில் இருக்கும் பிரிவினைவாதிகள், சீனா மற்றும் பாகிஸ்தானுடன் சேர்ந்து இந்த யுத்தத்தை நடத்துவார்கள்.

முதலில் ஒடுக்க வேண்டியது இந்தியாவில் உள்ள பிரிவினைவாதிகளைத்தான். குறிப்பாக தமிழகத்தில் சீமான் என்ற நபர், இந்திய ராணுவத்தை விமர்சிக்கும் விதம், அவரை ஏன் நாடு கடத்தக்கூடாது என்ற கோபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. யுத்தத்தை தொடங்கும் முன்னர், இதுபோன்ற புல்லுருவிகளை சிறையில் அடைத்தால் மட்டுமே, வெற்றி சாத்தியமாகும்.

சீனாவை முறியடிக்க வேண்டும்!

இன்றைக்கு சீனாவின் ஒட்டு மொத்த சந்தையும் இந்தியாவை நம்பியே உள்ளது. சீனாவின் ஸ்மார்ட்போன்கள், டிவிக்கள் என்று இந்திய சந்தையின் ஒட்டு மொத்த ஆக்கிரமிப்பாளராக சீனா உள்ளது. இந்த வகையில் இந்தியர்களிடம் வணிகம் செய்து கொண்டு செல்லும் பணத்தின் ஒரு பகுதியை சீனா, தன் நட்பு நாடான பாகிஸ்தானுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது. இந்த வகையில் இந்தியக் குடிமகன்கள் ஒவ்வொருவரும் சீனப் பொருட்கள் வாங்குவதை புறக்கணித்தாலே போதும். இந்தியாவின் வர்த்தக சமநிலை பாதுகாக்கப்படுவதுடன், சீனா வழியாக பாகிஸ்தானுக்கு செல்லும் பொருளதார பலமும் முறியடிக்கப்படும்.

காஷ்மீர் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?

புல்வாமா, ஸ்ரீநகர் பகுதிகளில் பணிபுரிந்து திரும்பிய சிஆர்பிஎப் வீரர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், ‘‘காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து என்பதை நீக்க வேண்டும். அதாவது சட்டப்பிரிவு 370ஐ நீக்கிவிட்டால் போதும். இதன் பின்னர் காஷ்மீர் பகுதியை 3 யூனியன்களாக பிரிக்கலாம். இதில் பாதிப்பு இல்லாத 17 மாவட்டங்களை 2 பிரிவுகளாகவும், சர்ச்சைகள் நிறைந்த அனந்தநாக், புல்வாமா, ஸ்ரீநகர், பாரமுல்லா, குல்காம் ஆகிய 5 மாவட்டங்களைத் தனி யூனியன் ஆக்கிட வேண்டும். இந்த யூனியன் பகுதியை ராணுவத்தின் வசம் கொடுத்துவிட வேண்டும். இதன் முக்கிய வர்த்தகம் ஆப்பிள், பாதாம் ஆகியவை மட்டுமே. இவற்றின் சந்தையை தடுத்து நிறுத்தி, உணவுக் கட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டும். நிதி நிர்வாகத்தை யூனியன் துணைநிலை கவர்னர் மேற்கொள்ள வேண்டும். பாதுகாப்புப் படையினருக்குத் தேவையான உணவு, உடை ஆகியவற்றை ஹெலிகாப்டர்களில் கொண்டுவந்தால் போதும்… ஓராண்டு மட்டும் இதை செயல்படுத்திப் பாருங்கள்… எப்புறம் தீவிரவாதிகள் என்ன கதியாகிறார்கள் என்று தெரியும்’’ என்கிறார்.

பதிலடி உண்டா? இல்லையா?

பாகிஸ்தானுக்கு எந்த வகையில் பதிலடி கொடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் ராணுவத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இடம், நாள், எந்த மாதிரியான தாக்குதல் என்பதை அவர்களே முடிவு செய்து கொள்ளட்டும். ராணுவத்தின் எந்த ஒரு நடவடிக்கைக்கும் அரசு பக்கபலமாக இருக்கும் என்பது பிரதமர் மோடியின் திட்டவட்ட அறிவிப்பாகும். அடுத்து நடக்கப்போவது என்ன? இதுதான் ஒட்டு மொத்த தேசத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதன் ஒரு பகுதியாக, தாக்குதல் நடைபெற்ற முதல் 12 மணி நேரத்தில், புல்வாமா பகுதியில் ராணுவம் தேடுதல் பணியில் ஈடுபட்டது. இந்தத் தாக்குதலில் ஸ்ரீநகர் பகுதியில் செயல்பட்ட ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைமையகத்தை அடித்து நொறுக்கிய இந்திய ராணுவம், குறிப்பிட்ட மாவட்டங்களில் செயல்படும் தீவிரவாத இயக்கங்களில் உள்ளவர்களின் அன்னையர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளது.

‘தேசத்துக்கு எதிராகவும், பிரிவினை பேசியும் துப்பாக்கி எடுக்கும் பழக்கம் இருந்தால், உங்கள் மகனுக்கு அது வேண்டாம் என்று அறிவுரை சொல்லுங்கள். மீறி தேசத்துக்கு மற்றும் ராணுவத்துக்கு எதிராக துப்பாக்கி தூக்கும் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்படுவார்கள்’’ என்று ராணுவ அதிகாரி பகிரங்கமாக எச்சரிக்கப்படுவார்கள்.

 

 

(Visited 3 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *