சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

எருக்கஞ்சேரி நீலகண்ட பிரம்மச்சாரி!

தமிழகத்தில் பிராமனர்களை எதிர்த்து கோஷம் போட்டு பழகி விட்டதால் இம்மாதிரியான தேசபக்தர்களை யாருக்கும் தெரியாமல் செய்து விட்டனர்.
   இவர் தேசத்திற்காக தன் வாழ்நாளில் பெரும் பகுதியை சிறையில் கழித்தவர்.
தஞ்சை, சீர்காழியில் உள்ள எருக்கஞ்சேரி நீலகண்ட பிரம்மச்சாரி.
நெல்லை கலெக்டர் ஆஷ் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாகி ஏழரை வருடம் தண்டனை பெற்ற போது தான் இவர் பெயர் பிரபலமானது.
இந்திய விடுதலை இயக்கப் போராட்டத்தில் இளம் வயதில், 20,000 போராளிகளை ஒன்று திரட்டி பாரத மாதா சங்கம் என்ற புரட்சி இயக்கம் ஒன்றை தோற்றுவித்துப் போராடியவர். வாழ்வின் பெரும்பகுதியை இந்தியா, பாகிஸ்தான், மியான்மர் நாட்டுச் சிறைகளில் கழித்தவர்.
வாஞ்சிநாதன் கலெக்டர் ஆஷை சுட்டுக் கொன்ற வழக்கில் கைதான 14 பேரில் முதல் குற்றவாளி நீலகண்ட பிரம்மச்சாரி தான்.
வழக்கின் தீர்ப்பில் நீலகண்ட பிரம்மச்சாரிக்கு 71/2 ஆண்டு காலம் தண்டனை. சிறைசெல்லும்போது அவருக்கு வயது 21 தான்.
சிறைவாசம் முடித்து வெளியே வருகிறார். நாள் முழுவதும் சுதேசி பிரச்சாரம். அதற்குக் கிடைத்ததோ பசியும், பட்டினியும் தான். பசி தாங்க முடியாமல் இரவு நேரத்தில் முகத்தை மறைத்துக் கொண்டு ‘இராப்பிச்சை’ எடுக்க ஆரம்பிக்கிறார்,பிச்சை எடுத்து சாப்பிட வேண்டிய நிலை தனக்கு வந்து விட்டதே என்று நினைத்த அவர், அதையும் நிறுத்தி விட்டார்.விளைவு பல நாள் பட்டினி.
ஒரு நாள் பசி பொறுக்கமுடியாமல். திருவல்லிக்கேணியில் தங்கியிருந்த தனது நண்பர் பாரதியாரைப் பார்க்க வருகிறார்.
பசியால் வாடிப்போன நீலகண்டனை பாரதியாருக்கு அடையாளமே தெரியவில்லை.
“பாரதி நான்தான் நீலகண்ட பிரம்மச்சாரி” என்று சொன்னவுடன், டேய், நீலகண்டா என்னடா, இது கோலம்” என்று அவரை கட்டி அனைத்துக் கொண்டார்.
“பாரதி, எனக்கு ஒரு நாலணா (25 பைசா) கொடேன். சாப்பிட்டு நன்கு நாளாச்சு” என்றார்.
இதைக் கேட்டவுடன் கண்கலங்கிய பாரதி அவருக்கு உணவு ஏற்பாடு செய்து கொடுக்கிறார்.
அப்போது பாரதியின் உள்ளத்தில் இருந்து வந்த உணர்ச்சிகரமான பாடல்தான்
“தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில்
ஜகத்தினை அழித்திடுவோம்” என்பதாகும்.
பாரதி இறக்கும் தருவாயில் தனக்கு கொள்ளி போட சொன்னது இவரை தானாம் இவர் மறுத்ததால் ஹரிஹர சர்மா கொள்ளியிட்டார்.
விடுதலையான பிறகும் கூட, அவர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக தன்னுடைய நடவடிக்கைகளை தொடர்ந்தார். இதன் பொருட்டு, நீலகண்ட பிரம்மச்சாரி 1922 ஆம் ஆண்டு மறுபடியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 8 ஆண்டுகள் கழிந்து 1930 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.
நீலகண்டர் சிறை வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டு 1931ஆம் ஆண்டில் துறவறம் பூண்டு, டிசம்பர் 1933இல் மைசூர் சமஸ்தானத்தில் நந்தி கிராமம் அருகே சென்னகிரியில் ஓம்கார் எனும் பெயரில் ஆசிரமம் அமைத்தார்.
1936 ல் மைசூர் வந்த காந்திஜி அவர்கள் இவரைக் காண நீலகண்டர் இருந்த மலைக்கே சென்றார்.
தனது 88வது வயதில் 1978ஆம் ஆண்டில் உடல்நலக் குறைவால் காலமானார்.
அவர் தான் தேச பக்தியை நினைத்து பரவசபடுவோம்.

(Visited 24 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *