சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

கர்நாடகாவில் லிங்காயத் எம்.எல்.ஏ க்கள் போர் கொடி!!

சனாதன தர்மத்தின் நெடும் பயணத்தில் பல தடைகளை வென்று தான் உலகை தனது ஆளுகைக்கு உட்படுத்தி கொண்டு வருகிறது.

கர்நாடகா

போன வருடம் கர்நாடகாவில் நடந்த தேர்தலில் இந்துக்களின் ஒட்டு வங்கியை பிரித்தால் மட்டுமே, பாஜகவை வீழ்த்த முடியும் என்று காங்கிரஸ் ஒரு விபரீத முயற்சியில் இறங்கியது.

லிங்காயத்துகளை பிரிக்க சதி??

கர்நாடகாவில் ஆளுமை மிக்க இந்து பிரிவுகள் லிங்காயத் மற்றும் ஹோக்கலிக்கர்கள். லிங்காயத்துக்களை அந்த வீரசைவர்களை இந்து மதத்திலிருந்து பிரித்து தனி மதமாக்குவோம் என்று காங்கிரஸ் ஆசை காட்டியது.

முடிவு

லிங்காயத்தினர் வீர சைவர்கள். எனவே காங்கிரஸ் கட்சிக்கு ஒரு ஒட்டு கூட விழவில்லை என்ற நிலையில், கூட்டணிகளுடன் அரியணை ஏறியுள்ளது காங்கிரஸ்.
தங்களை ஏமாற்றிய லிங்காயத்து காரர்களுக்கு பாடம் புகட்ட வேண்டி, பெரிய தலைவர்களுக்கும் கூட மந்திரி பதவி இல்லாமல் செய்துள்ளது காங்கிரஸ்.
ராமலிங்க ரெட்டி, தினேஷ் குண்டுராவ், ஷாமனூர் சிவசங்கரப்பா, சதிஷ் ஜர்கோலி போன்ற பெரும் தலைவர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.
கர்நாடகாவில் 17% லிங்காயத்துக்கள் உள்ளனர். பெரும்பாலும் இவர்கள் ஆட்சி பீடத்தில் இருந்தவர்கள்.
கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி வோக்கலீக சமூகத்தை சேர்ந்தவர். டி.கே. சிவகுமார் போல இன்னும் பல சக்தி வாய்ந்த மந்திகளும் வோக்கலிக் சமூகத்தை சேர்ந்தவர்கள்.
லிங்காயத்தினரின் இந்த கொந்தளிப்பு இப்போது அவர்களை பாஜகவில் இணைக்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அப்படி காங்கிரஸ் லிங்காயத் எம்.எல்.ஏக்கள் வெளியே வந்தால், கர்நாடக அரசு கவிழும் அபாயம் நிச்சயம் உள்ளது என்கிறார்கள் கர்நாடக அரசியல் விமர்சகர்கள்.

மருத்துவ உலகையே மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது லண்டன் பல்கலையின் மருத்துவ ஆய்வு.

பல கோடி மக்களை இன்று தாக்கி வரும் மூளை நோய் தான் அல்ஜீமர்ஸ், டிமென்ஷியா என்று பல பெயர்களில் அழைக்கப்பட்டு வருகிறது.
ஞாபக மறதியில் தொடங்கி, தொடர்புகள் அறுந்து, ஆயிரம் முகமற்ற கவலைகளால் சோர்ந்து, உற்றார் உறவினர் அன்பை கூட தெரிந்து கொள்ள முடியாமல் மூளை சுருங்கும் இந்த அபாயகரமான வியாதியை கண்டு பிடிப்பதே, காலம் கடந்து தான்.

புதிய ‘பெட்’ ஸ்கேன்

இந்த நோய் வரும், 15 வருடங்களுக்கு முன்னதாகவே இந்த நோயிற்கான அறிகுறிகளை கண்டறியும் ‘அமிலாயிட் பெட் ஸ்கேன்’ கருவியை லண்டன் பல்கலைகழக ஆய்வு கண்டு பிடித்துள்ளது.
இதனால் முன் எச்சரிக்கை மருந்துகள், வாழ்கை முறை, விசேஷ பயிற்சிகள் என பல முயற்சிகளால், நாம் நம்மை இந்த கொடிய நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என மருத்துவ உலகம் கூறியுள்ளது.

எப்படி??

நமது மூளை வயதாவதால், ‘அமிலாயிட்’ மற்றும் ‘டவ்’ எனும் ஒரு வகை ரசாயனங்கள் நமது மூளையில் அங்கங்கு தேக்கப்பட்டு விடுகிறது. பற்களில் வரும் ‘பிளேக்’ போல.
இந்த குப்பைகள் ஒருவித அளவை ஒரு சேர அடையும் போது இந்த அல்சீமர்ஸ் நோய் உண்டாகிறதாம்.
இந்த புதிய ஸ்கேனை தொடந்து நடந்த ஆராய்ச்சியில், ‘அடுகானுமாப்’ எனும் புதிய மருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது இது ‘அமிலா’ குவிப்பை தடுக்கும் ஆற்றல் கொண்டது. மிகவிரைவில்.

அல்சீமர்ஸ் நோய் இனி மியூசியத்தில் தான் இருக்கும் என மகிழ்ச்சியுடன் மருத்துவ உலகம் கூறுகிறது. மிக்க நன்றி மருத்துவர்களே…

(Visited 7 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *