சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

கர்நாடக சங்கீதமும் நம் இறைவழிபாடும்!

கர்நாடக சங்கீதம் இந்துக்களுக்கு மட்டுமே சொந்தம் – ஏனென்றால் இது இந்துக்களின் வழிபாட்டில் ஒரு அங்கம்.
ஆலயம், ஆலய வழிபாடு, ஆலயத்தில் நடைபெறும் பல்வேறு பூஜைகள், வழங்கப்படும் பிரசாதம், நடக்கும் உபன்யாசங்கள், திருவிழாக்கள் இப்படி ஒவ்வொன்றிலும் நம்மவர்கள் பக்தியை வளர்த்தார்கள்.
ஆலய வழிபாட்டில் ஒவ்வொரு காலத்திற்கும் ஒரு குறிப்பிட்ட சில ராகங்களை வாஸிப்பது வழக்கம். இன்று வரை தொன்றுதொட்டு வருகிறது இந்த வழக்கம்…

உதய காலத்தில்
பூபாளம், பௌளி, கோபிகா வசந்தம்.
காலை நேரத்தில்:
பிலஹரி, கேதாரம், ஆரபி, தன்யாசி.
நடுப்பகலில்:
ஸ்‌ரீ ராகம், சாவேரி, மத்யமாவதி, மணிரங்கு, மோகனம்.
சந்தியா காலத்தில் :
சங்கராபரணம், கல்யாணி, நாட்டைக்குறிஞ்சி, பூர்வ கல்யாணி.
இரவு நடை சாற்று முன்:
காம்போதி, தோடி, பைரவி, நீலாம்பரி.
தீபாராதனை சமயங்களில்
மிஸ்ர மல்லாரி,
யாகசாலை வரை ஸ்வாமி புறப்பாட்டின் போது
மல்லாரி
யாகசாலை முதல் ராஜகோபுரம் வரை
திரிபுடை தாள மல்லாரி
கோபுர வாசல் வரை
தோடி நாட்டை வர்ணங்கள்.
ஸ்வாமி திருவீதிகளில் உலா வரும்பொழுது
ராகம், பல்லவி, கீர்த்தனைகள்
கோவிலுக்குள்
துரிதகால த்ரிபுடை மல்லாரி.
பள்ளியறைக்கு ஸ்வாமி எழுந்தருளும் போது
ஆனந்த பைரவி, கேதார கௌளை,
ஸ்வாமி பள்ளியறை சேர்ந்த பிறகு
நீலாம்பரி….
அத்துடன் நம் தினப்படி வாழ்விலும் நாம் பாட வேண்டிய, கேட்க வேண்டிய ராகங்களும் இப்படி பட்டியலிப்பட்டுள்ளன.
விடியற்காலை பொழுது புலரும் முன்….
பூபாளம், பௌளி, மலயமாருதம், வலஜி, நாத நாமக்ரியை, மாயா மாளவ கௌளை, கோபிகா வஸந்தம் போன்றவை.
காலைப் பொழுதில் அதாவது காலை 8 மணி வரை
பிலஹரி, கேதாரம், கொளிபந்து, ஜகன்மோகினி, சுத்த தன்யாசி, …
காலை பத்து மணிக்கு மேல் மணி வரை
சுருட்டி, மணிரங்கு, ஸ்‌ரீ ராகம், பிருந்தாவன சாரங்கா, மத்யமாவதி, தர்பார்.
பகல் 12 மணி முதல் மதியம் 2 மணி வரை
சுத்த பங்களா, பூரண சந்திரிகா, கோசலை, திலகம், முகாரி, கௌட மல்லார்…
பகல் 2 மணிக்கு மேல் மாலை 4 மணி வரை
நாட்டைக் குறிஞ்சி, உசேனி, ரவி சந்திரிகா, வர்த்தனி, ஹம்சா நந்தி, மந்தாரி..
மாலை 4 மணி முதல் 6 மணி வரை
பூர்வி கல்யாணி, பந்துவராளி, வசந்தா, லலிதா, சரஸ்வதி, சிலாங்கி,கல்யாணி.
மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை
சங்கராபரணம், பைரவி, கரகரப்ரியா, பைரவம், நாராயணி, ஹம்ஸத்வனி, கௌளை.


இரவு 8 மணிக்கு மேல் 10 மணி வரை
காம்போதி, ஹரிகாம்போதி, ஷண்முகப்ரியா, கமாஸ், தோடி, ரஞ்சனி, நடபைரவி,
இரவு 10 மணி முதல் 12 மணி வரை
சிம்மேந்திர மத்யமம், ஆனந்த பைரவி, சாருகேசி, கீரவாணி, ரீதி கௌளை, யதுகுல காம்போதி, நீலாம்பரி,
இரவு 12 மணி முதல் இரவு 2 மணி வரை
அடாணா, சாமா, சேதார கௌளை, பியாகடை, வராளி, தர்மாவதி,
இரவு 2 மணி முதல் அதிகாலை 4 மணி வரை
ஹேமாவதி, ரஸாவளி, இந்தோளம், பாகேஸ்வரி, கர் நாட தேவ காந்தாரி, மோகனம்.
இவற்றைத் தெளிவாக நம் ஆகமங்கள் கூறுகின்றன. நம் வழிபாட்டில் ஒரு அங்கம் சங்கீதம். இந்த கர்நாடக சங்கீதம். இப்படி வேறு எந்த ஒரு மதமும் பகுத்துச் சொன்னதில்லை. இப்படி ஒரு  syllabus வேறு எங்கும் இல்லை.
நீண்ட கால ஆராய்ச்சிக்குப் பிறகு இதை MUSIC IS A THERAPHY  அதாவது சங்கீதம் என்பது ஒரு மருத்துவ முறை என்று ஆராய்ச்சியாளர்களே ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், இப்போது சிலர் இந்த சாஸ்திரிய சங்கீதத்திற்கும் மதச்சார்பின்மை சாயம் பூச முயன்று கொண்டிருக்கிறார்கள்.
வேதத்தில் அசிஷ்யாயநதேயம் என்று மிக அழகாக சொல்லப்பட்டுள்ளது. அதாவது சிஷ்யர்களாக இருக்கத் தகுதி இல்லாதவர்களுக்கு இதை சொல்லிக் கொடுக்காதே. ஏனென்றால் அதன் பெருமையை உணராமல் அதை பாழாக்கி விடுவார்கள்.
நம் கர்நாடக சங்கீதத்தை சிரத்தை, பக்தியுடன் ஒரே ஒரு பாடகர் இருக்கும் வரை இது என்றும் நிலைத்து நிற்கும்.

திரு.L.முனீஸ்வர சாஸ்திரிகள்
ஸத் வித்யா ஸ்தானம் டிரஸ்ட்
வேளச்சேரி சென்னை.

CELL : 9382679290

(Visited 25 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *