சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

கின்னஸ் விருது பெற்றுள்ள அவதூத பகவான் ராம்ஜி குஷ்ட சேவா ஆஸ்ரமம்… பற்றி நமக்கு ஏன் தெரியவில்லை!!!

1962-1990 ஆண்டுவரை சுமார் 3 லட்சம் தொழு நோயாளிகளை முழுமையாக குணமாக்கிய மாபெரும் சேவையை! மருத்துவ சாதனையை! புரிந்ததற்காக, வாரானாசியில் உள்ள அவதூத பகவான் ராம்ஜி சேவா ஆஸ்ரமம் கின்னஸ் ரிகார்டில் பதிய பட்டுள்ளது.
அடுத்த பத்து வருடத்திற்குள் இன்னுமொரு ஒரு லட்சம் நோயாளிகள் மருத்துவம் செய்து கொண்டு வருகிறார்கள் என்றும் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.
இன்றுவரை இந்தியாவின் பல கோடிகளில் இருந்தும், இந்த கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த அவதூத பகவான் ராம் சேவா மையத்திற்கு எப்படியோ வந்து குவிந்தவண்ம் இருக்கிறார்கள். நோய் நீங்கி, புதுவாழ்வு தொடங்குகிறார்கள்.

மருத்துவம்

இந்த ஆஸ்ரமத்தில், தொழுநோய் என்பது ‘கடவுளின் கணக்கு’ என்ற பேச்சிற்கு இடமில்லை. ஆயுர்வேதம் சித்தா மற்றும் ஃபக்கிரி மருந்துகள் கொண்டு தயாரிக்கப்பட்ட சிறப்பு மருத்துவம் இந்த நோயாளிகளுக்கு அளிக்கப்படுகிறது. மிகவும் சிரமத்துடன் எடுக்கப்படும் ஒரு வகை எண்ணெய் இந்த நோயாளிகளுக்கு தடவப்பட்டு வருகிறது.
நோய் அதிகம் பரவாமல் இருப்பவர்களுக்கு முழு நிவாரணம் கிடைப்பது தான் அதிசயம்!!

மருந்து மட்டும் அல்ல

இந்த கொடிய நோயால் தாக்கப்படுபவர்கள், சமுதாயத்தால், தங்கள் சொந்தங்களால், ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். அவர்கள் வாழ்வதற்கு வாய்ப்பு இல்லாமல் போவதால், அவர்கள் பிச்சை எடுத்து தான் உண்ண வேண்டிய சூழ்நிலை வருகிறது. இந்த நிலையில் இந்த கொடிய வியாதிக்கான மருத்துவத்திற்கு அவர்கள் எங்கே செல்வார்கள் என்று எண்ணியே, அகோரேஸ்வரா பகவான் ராம்ஜி இந்த குஷ்ட சேவா ஆஸ்ரமத்தை தொடங்கினார்.
மருத்துவம் மட்டும் அல்லாமல், அங்கே எல்லோரும் ஒன்றாக சமைப்பது ஒரு குடும்பமாக வாழ்வது, தங்களுக்கான காய்கறிகளை வளர்ப்பது, தங்களது கடவுள்களை ஜபிப்பது, யோகா மற்றும் தியானம் என மனதை ஒரு நிலை படுத்தும் பயிற்சிகள் என இருப்பதால், இந்த சூழ்நிலையில் இந்த நோயாளிகள், முறையான மருத்துவத்துடன் முழுவதும் குணமாகி விடுகிறார்கள் இவர்களது வாழ்கை முறையினை பார்க்கும் அவர்களது குடும்பங்களும் அவர்களை ஏற்றுக் கொள்கின்றன!!

பாபா பகவான் ராம்ஜி

1937ம் ஆண்டில் செப் 12ந் தேதி பிகாரில் உள்ள கண்டி என்ற கிராமத்தில் முதல் மகனாக அவரது பெற்றோருக்கு, வெகு நாள் கழித்து பிறந்தார். தவம் பெற்று பிறந்த குழந்தை பிறப்பதற்கு முன் தாயின் கனவில் இது தெய்வ குழந்தை என்ற செய்தி வந்தது. அதனால் குழந்தைக்கு பகவான் என்றே பெயர் சூட்டினர்.
பகவான் 5 வயது இருக்கும் போதே, தந்தை இறந்து விட்டார். சிறுவயது முதலே குழந்தை பகவானுக்கு, பக்தி அதிகம். தெய்வ சிந்தனையுடன் எப்போதும் தனிமையை நாடினார். காடுகள், நதிகள் என்றே சுற்றி வந்தார். தனது 9 வது வயதில் காசி விஸ்வநாதரை காண புறப்பட்டு விட்டார். காசிக்கு சென்று விட்டாலும் எந்த பக்கம் போக வேண்டும் என்று அறியாது திகைத்து நின்ற போது, புன் சிரிப்புடன், வண்ண சேலை உடுத்திய ஒரு தாய், காசி விஸ்வநாதரை தானே பார்க்க வேண்டும்! இதோ நான் கூட்டி போகிறேன் என்று அழைத்துச் சென்று தரிசனம் செய்து வைத்தார்.
பகவான் அந்த அன்னையைத் தேடி வந்து போது அந்த அம்மாவை காணவில்லை. ஆனால் அங்கு ஒரு அகோரேஸ்வர ஞானி இருந்தார். பகவான் அவரது சீடரானார். அவரிடம் தீட்சை பெற்று 12 வது அகோரேஸ்வரராக உருவெடுத்தார். அவரது பெயர் ராம் என சூட்டப்பட்டது.

அவதூதர்!

அகோரி என்று நாம் இன்று தெரிந்து கொள்ளும், பழக்கங்கள் எல்லாம் ஒரு சில அகோரிகளின் விநோத போக்கால் மட்டுமே ஆகும்.
உண்மையில் அகோரி தத்துவம் என்பது மிகவும் உயர்ந்தது. எதுவும் அருவருப்பானது அல்ல! எதுவும் பயங்கரமானது அல்ல!! எல்லோரும் ஒரே மக்கள்! எதிலும் எவரிலும் பேதம் கிடையாது என்பதே!! துன்பம்! இன்பம்! பயம்! மரணம்! என்பதிலும் பேதம் இல்லை.

அவதூதராக மாறும் வாய்ப்பு உண்டு

அகோரேஸ்வரர் என்பவர்கள், பல வருட கடின ஆன்ம முயற்சிக்கு பின்னர் பிரம்மத்தை உணர்ந்து, இனி தவ வாழ்கை போதும் தமது தவம், ஞானம் இவற்றால் சமுதாயத்திற்கு உதவ வேண்டும் என்று திரும்பி வரும் அகோரிகள் தான் அவதூதராக கருதப்படுகின்றனர்.

முதல் அகோரேஸ்வரர்

காசியில் உள்ள அவதூத சித்தர்களின் சரித்திரம், ஆதி குருவான சிவனை முதல் அவதூத சித்தராகவே கொண்டு ஆரம்பிக்கிறது. 6ம் நூற்றாண்டு அகோரேஸ்வரர் பைரவாச்சர்யாவிக்கு பின்னர், ஒரு பெரும் வெறுமை நிலவியது.
16ம் நூற்றாண்டில் பாபா கினா ராம் என்ற ஞானி, தத்தாத்ரேய பகவானின் தரிசனம் பெற்று அவதூதரானார். அவர் ஏழைகளுக்கும் எளியவர்களுக்கும் தொடர்ந்து பல ஆன்ம சேவைகள், நல்வாழ்வு சேவைகள் செய்து வந்தார். கங்கையின் கரையில் ‘கிரிம் குண்ட்’ என்ற ‘எப்போதும் எரியும் விளக்கை’ ஏற்றி வைத்து ஒரு ஆசிரமத்தை அமைத்தார்.
400 ஆண்டுகளாக இந்த விளக்கு அணையாமல் எரிந்து வருகிறது. இந்த 12 வது அவதூத சித்தர் தான் பகவான் ராம்ஜி!!

அகோரேஸ்வரர் பகவான் ராம்ஜி

சமூகத்தால் ஒதுக்கப்பட்ட உடல் குறைபாடு மற்றும் தொழுநோயாளிகளை குணப்படுத்துதல், அவர்களுக்கு எல்லா வகையிலும் உதவுதல், ஒரே தாய்! நாம் அனைவரும் ஒரே மக்கள்! நமக்குள் எந்த இனம், மதம் மொழி, பிரிவினை கூடாது என்று கொள்கையுடையவர் பகவான் ராம்ஜி!!
குழந்தைகளுக்கான கல்வி சாலையை தோற்றுவித்தார். கல்யாணமண்டபங்கள் கட்டுவதால், ஆடம்பர திருமணங்களை கட்டுப்படுத்தினார். இவர் செல்லாத நாடில்லை. எங்கும் அன்பையும் சேவை யையும் விதைத்தார்.
1992ம் ஆண்டு சமாதி அடைந்த இவர், உலக மக்களுக்கு ஒற்றுமை, நேயம், சேவை என்று பல அரிய மாணிக்கங்களை கொடுத்துள்ளார்.

சேவை மையங்கள்

அகோரேஸ்வர் பகவான் ராம்ஜியின் சீடர்கள், அவரது தத்துவங்களாலும், சமூக சேவையாலும், ஈர்க்கப்பட்டு உலகெங்கும் 150 இடங்களில் இந்த ஆஸ்ரமங்களை தொடங்கி நடத்தி வருகின்றனர்.
வாரணாசியில் உள்ள ‘கிரிம் குண்ட்’ ஆஸ்ரமத்தின் தலைமை ஸ்ரீ சர்வேஸ்வரி சாமூக் பீடத்தில் பாபா சித்தார்த்த கவுதம ராம் இப்போது உள்ளார்.
சமூக சேவைக்காக பகவான் ராம்ஜி துவங்கிய அறக்கட்டளை தான் ஸ்ரீசர்வேஸ்வரி சாமூக் என்பது. இந்த சர்வேஸ்வரி சாமூக் தான் தொழு நோயாளிகளுக்கான மருத்துவமனையை கட்டி அவர்களுக்கு மறுவாழ்வு அளித்து வருகிறது.

அகோரி ஆராய்ச்சி மையம்

மேலும் பகவான் ராம்ஜி, அகோரி ஆராய்ச்சி மற்றும் அவதூதர் அறக்கட்டளை ஒன்றும் தொடங்கி உள்ளார். இதனால் வாரணாசி வந்து, அகோரிகளை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்களுக்கு இது ஒரு பெரும் களஞ்சியமாக இருக்கும் என்றே இதை அவர் செய்தார்.

என்ன உலகம் இது?

அகோரேஸ்வரர் பகவான் ராம்ஜி, தன்னலம் கருதாமல் கடுந்தவம் புரிந்து, ஞானம் பெற்று, தனக்கென்று மோட்சம் தேடாமல் அவதூதராக, மக்களுக்கு சேவை செய்ய வந்தவர்.
கடவுள் இந்த தொழுநோயாளிகளுக்கு துன்பம் கொடுத்து அவர்களை நெருங்குகிறான். அதனால் அவர்களுக்கு மருந்து அல்லது வைத்தியம் தேவை இல்லை என்று நினைக்கவில்லை.
அவர்களுக்கு ஒரு வியாதி வந்துள்ளது. சித்த வைத்தியத்திலும், ஃபக்ரி மருந்தையும் கொண்டு, அரிய மருந்தை கண்டு பிடித்து அவர்களை குணப்படுத்தி மறுவாழ்வு கொடுத்த அவதார புருஷர் அவர். இனி அவர்கள் சமூகத்தில் ஒரு அங்கமாக வாழவேண்டும் என்றே நினைத்தார்.
இன்றுவரை பல லட்சம் தொழுநோயாளிகள் அவரது ஆஸ்ரமம் மூலமாக மறுவாழ்வு பெற்றுள்ளனர். ஆனால் ஏனோ நமக்குத் தான் இந்த உன்னதத்தை பற்றி தெரிந்து கொள்ள முடிவதில்லை.
கல்கத்தாவில் வந்து ஒரு கோடி மக்களை மதம் மாற்றுவேன் என்று கூறிய, அன்னை தெரசாவை தெரியாதவர் ஒருவர் இந்த உலகில் உள்ளனரா?
அவரது கொள்கைகள் பற்றி எவரேனும் படித்திருக்கோமா? ஆனால் அன்னை தெரசா என்றால் தொழுநோயாளிக்கான சேவையாளர் என்று உலகெங்கும் பேச்சாகி உள்ளது.

நோயாளிகளுக்கான காப்பகங்கள்

அன்னை தெரசா தொடங்கிய home for the Dying அதாவது சாவதற்கான இல்லங்கள் என்றே தொடங்கப்பட்டன.
தொழுநோயாளிகள், டி.பி. நோயாளிகள், போதைக்கு அடிமையானவர்கள், வேறு சில வியாதிகாரர்கள் என பலரும் இந்த காப்பகங்களுக்கு வந்து சேர்ந்தனர்.
அவர்கள் வந்தது, மருத்துவ வசதிகளை எதிர்பார்த்து தான்.
ஆனால் அன்னை தெரசாவின் மனதில் மருத்துவம் இல்லை. கர்த்தா எப்படி துன்பப்பட்டரோ அதே துன்பத்தை இவர்களும் அனுபவிக்கிறார்கள். கர்த்தருக்கு அருகில் செல்கிறார்கள் என்றே நம்பினர். இந்த நோயாளிகள் துன்பப்படுகின்றனர் என்பதே தெரசாவின் மனதை தொடவில்லை. அவர்களின் இந்த துன்பத்தை, வலியை ஒரு வாழ்வின் சாதனையாகவே கண்டார். அதனை தடுப்பது தவறு என்று நம்பினார்.
அவரது இல்லங்களில் இருந்த மருத்துவர்களை பேட்டி எடுத்த போது அவர்கள் கூறியது மேலும் வேதனை தருகிறது. மருத்துவம், ஊட்டமான உணவு, ஆரோக்கியமான சூழ்நிலை, வலியை போக்கும் மருந்துகள் என பல குறைபாடுகள் நிலவின.
நிச்சயமாக பணம் இல்லை என்பதல்ல காரணம் அன்னை தெரசாவின் நம்பிக்கை அப்படி!!
டி.பி, தொழுநோயாளி, வேறெந்த வியாதியாக இருந்தாலும் சரி, ஒன்றாக படுத்து, வலியில் துடித்து, மரணத்தை எதிர்நோக்கிய அந்த ஏழை நோயாளிகளுக்கு கிடைத்தது ஒன்று தான். ஞானஸ்தானம், பைபிள், புதுபெயர், அவ்வளவு தான்.
ஏனென்றால் ஏழைகளின், நோயாளிகளின் துன்பத்தில் கர்த்தர் வாழ்கிறார் என்றே தெரசா அம்மையார் நம்பினார். ஆனால் தனக்கென்று நெஞ்சுவலி வந்த போது இரண்டு முறையும் வெளி நாட்டிற்கு சென்று சிகிச்சை மேற்கொண்டார்.
28 வருடம் அவருடன் பணியாற்றிய அவருடைய ஆஸ்திரேலிய காரியதரிசி, அன்னை தெரசா தனக்கு வந்த தொண்டு நிறுவன நன் கொடைகளை அமெரிக்காவில் தான் வைத்துள்ளார். அவர் இந்தியர்களை நம்பவில்லை. எங்கே அந்த லட்சக்கணக்கான கோடிகள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்!!
வெகு விரைவில் ‘ஒரு அதிசயத்திற்காக’ அன்னை தெரசாவிற்கு, வேடிகன் புனிதர் பட்டம் சூட்ட உள்ளது.
அகோரேஸ்வரர் அவதூத பகவான் ராம்ஜி அவர்கள் இதுவரை 5 லட்சம் தொழுநோயாளிகளுக்கு, பூரணமாக குணப்படுத்தி நல்வாழ்வு அளித்துள்ளார். இவரது ஆஸ்ரமம் வாரனாசியில் இன்றும் தனது புனித சேவையை தொடர்ந்து செய்து வருகிறது. அவரைப் பற்றி தெரிந்தாவது வைத்துக் கொள்வோம்!! இது தான் நாம் மனிதத்திற்கு செய்யும் உண்மையான காணிக்கை.

                                                                                                                                                           

                                                                                                                            www.shriaghoreshwar.org

(Visited 50 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *