சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

கோவை மக்களின் ‘சக்தி’யாக மாறிய பாஜக மாநில பொது எசயலாளர் வானதி சீனிவாசன்!

கோவை மக்கள் சக்தி மையம் எனும் அமைப்பை தொடங்கி கோவை மக்களின் இன்னல்கள் தீர பாடுபட்டு வருகிறார் பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன்.

இந்த மையம் தொடங்க காரணம்!

பாரத பிரதமர் மோடியின் மக்கள் நலனுக்கான நூற்றுக்கும் மேலான மக்கள் நலத்திட்டங்களை கோவை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகவே இந்த மையத்தை தொடங்கி உள்ளேன்.
இந்த மையம் உண்மையிலேயே ஒரு ஆக்கப் பூர்வமான சக்தி மையம் என்றே சொல்வேன். அதாவது உங்கள் முன்னேற்றத்திற்கான, வளத்திற்கான தேடல்களுக்கு இந்த ‘மக்கள் சேவை மையம்’ ஒரு மைய புள்ளியாக திகழ்கிறது.
‘One Stop Shop’ என்று சொல்லலாம் முத்ரா திட்டங்கள், உஜ்வாலா, தன் யோஜனா எனும் வங்கி சேவை திட்டம், விபத்து காப்பீடு, பென்ஷன் காப்பீடு, ஆரோக்கிய காப்பீடு, செல்வ மகள் திட்டம், திறன் மேம்பாட்டு திட்டங்கள், டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா, ஆயுஷ் சேவைகள், கல்வி உதவி தொகை திட்டம் என இன்னும் பற்பல திட்டங்களை பற்றிய முழுமையான புரிதலுக்கும் இந்த திட்டங்களை எப்படி செயல்படுத்தி, பயன் பெறுவது என்பதையும், சொல்லி உதவ இந்த ‘‘மக்கள் சேவை மையத்தில்’ தேர்ச்சி பெற்றவர்கள் உள்ளனர் என்பதே சிறப்பு’’ என்று விளக்கினார்.

தொண்டு நிறுவனங்களுடன்!

இந்த மக்கள் சேவை மையம் தனித்தும் பல தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பல நூறு இடங்களில் மக்களுக்கு களப்பணி ஆற்றி வருகிறது என்பதில் எனக்கு மிகவும் பெருமிதம் என்றார் மகிழ்ச்சியுடன்.

மக்கள் சேவை மையத்தின் மெகா வேலை வாய்ப்பு!

வேலை வாய்ப்பு இல்லை என கூறுவோர் ஒருபுறம். வேலைக்கு ஆள் இல்லை என புலம்பும் நிறுவனங்கள் ஒருபுறம் என கோவையில் தொடர்ந்து இந்த இக்கட்டான சூழல் நிலவி வருகிறது.

வேலை முகாம்!

மக்கள் சேவை மையம் என்பது அனைத்து வயதினருக்கும் என்பதால் பல மடங்கு இந்த வேலை வாய்ப்பு மேளா வெற்றிகரமாக அமைந்துவிட்டது.
வேலை தேடும் ஆயிரக்கணக்கானவர்களும், வேலை தரும் நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களும் டிசம்பர் 15ந் தேதி, கோவையில் உள்ள இந்துஸ்தான் கலை கல்லூரி வளாகத்தில் சந்தித்துக் கொள்ளும் அரிய வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்ததில் எனக்கு மனப்பூர்வமான திருப்தி.

வாய்ப்புகள்!

கோயம்புத்தூர், திருப்பூர், கரூர், ஈரோடு, சேலம், பொள்ளாச்சி, பாலக்காடு ஆகிய இடங்களில் இருந்து, வேலை வாய்ப்பை தர, பல பெரிய சிறிய நிறுவனங்கள் குவிந்தன.
கோவையின் மிக பெரிய மனிதவள அமைப்புகளின் தலைவர்கள், நிறுவன இயக்குநர்கள், வேலை வாய்ப்பினை பற்றிய பெரும் புரிதலை அங்கிருந்த பெரும்பாலான இளைய சமூகத்தினருக்கு ஏற்படுத்தினர்.

வெற்றி நிச்ச்யம்!

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் எந்தளவு கடினமாக இருந்திருக்கும் என்பதை, நிகழ்ச்சியின் நேர்த்தியை வைத்தே சொல்ல முடிந்தது.
‘‘மெகா வேலை மேளா’’ என்று சொன்னால் அது மிகையில்லை. 80,000 Missed Calls, 20,000 ஆன் லைன் விண்ணப்பங்கள், 12,000 நேரடி வருகை, 125 நிறுவனங்கள் பங்கேற்பு, 3000திற்கும் மேலான வேலை வாய்ப்புகள்!!!

சிறப்பு செய்திகள் என்ன??

இந்த மிகவும் வெற்றிகரமான வேலை மேலாவில் மிகவும் மகிழ்ச்சியான தருணம் எது என்று பாஜக தலைவரும், கோவையின் திருமகளுமான வானதி சீனிவாசனை கேட்க…
பெண்களுக்கு பகுதி நேரம், விருப்பபட்ட நேரங்களில் வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்ததில் மிகவும் மகிழ்ச்சி.
இந்த நூறுக்கும் மேற்பட்ட நிறுவனங்களும் சுமார் 20,000திற்கும் மேற்பட்ட வேலை தேடுபவர்களும் இணைவதற்கு ஏற்படுத்தப்பட்ட இந்த பாலம், மக்கள் சக்தி மையத்தின் மிகப் பெரிய மகிழ்ச்சி தருணம் என்பதில் ஐயமில்லை.
வந்திருந்த தொழில் நிறுவன தலைவர்களும் மனிதவள நிபுணர்களும் கூறிய பல கருத்துகள் சிந்திக்க செய்தன.

திறன் கற்றல்!

வேலை இல்லை என்று பல லட்சம் பேர்கள் வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருக்க, வேலைக்கு ஆள் இல்லை, உற்பத்திதிறன் இல்லை என்று நிறுவனங்கள் புலம்பி கொண்டிருப்பதை பற்றிய பல உரைகள், நமது பாரத பிரதமர் மோடிஜியின் தொலைநோக்கு பார்வையினை எண்ணி பெருமை பட வைத்தது.
திறன் மேம்பாடு திட்டங்கள் கொட்டி கிடக்கின்றன. பிரதமரின் இலக்கே, இந்தியா தொழில் துறையில் திறனோடு முன்னேற வேண்டும் என்பதே. அதற்காக தான் உள்கட்டமைப்பு வேலைகளை துரிதமாக செய்துள்ளார்.
தங்கள் விரும்பும் வேலைக்கான திறனை வளர்த்துக் கொள்வதை, கற்றுக் கொள்வதை முதல் குறிக்கோளாக கொண்டு மாணவச் செல்வங்கள் பிரதமரின் ‘‘ஸ்கில் இந்தியா’’ திட்டத்தின் மூலம் பயன் பெற்றால் அதுவே மிகவும் மகிழ்ச்சியான தருணம். அதற்காக தான் இந்த மக்கள் ‘சக்தி மையம்’!!! என்று கோவையின் ‘சக்தி’யாகவே வானதி சீனிவாசன் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

பிரதமர் மோடியின் திட்டங்களை வெளிக் கொணர அவர் எடுக்கும் பெரும் முயற்சிகள் முழுமையான வெற்றி பெற சுதேசியின் மனமார்ந்த வாழ்த்துகள்.

கோவையே இந்த மெகா வேலை மேளாவை கண்டு வியந்தது என்றால் மிகையில்லை. பாராட்டுக்களும் பெருமையும் மக்கள் சக்தி மையத்திற்கும் அதன் நிறுவனருக்கும்…

(Visited 4 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *