சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

சபதம் முடித்த பிரதமர் மோடி!

உலகில் உள்ள 7 கண்டங்களில் அண்டார்டிகா கண்டத்தை தவிர ஆசியா ஆப்ரிக்கா ஐரோப்பா தென் அமெரிக்கா, வட அமெரிக்கா ஆஸ்திரேலியா என்று 6 கண்டங்களில் இருக்கும் 58 நாடுகளுக்கு மோடி அரசு முறை பயணமாக சென்றுள்ளார்.

ஆனால் ஆசியா கண்டத்தில் உள்ள மாலத்தீவுக்கு மட்டும் நம் பாரத பிரதமர் மோடி இதுவரை சென்றதில்லை. 2015ம் ஆண்டு மார்ச் மாதத்திலேயே மோடி மாலத்தீவுக்கு சென்று இருக்க வேண்டும். ஆனால் அப்போது நம் பாரத பிரதமர் நரேந்திரமோடி வைத்த ஒரு கோரிக்கையை அப்போதைய மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் கண்டுகொள்ளவில்லை.

மோடி வைத்த கோரிக்கை!

அந்த கோரிக்கை என்னவென்றால் காபூ அடாலில் உள்ள மாபுஷி ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்த இந்தியாவின் நண்பரான முகமது நஷீத்தை விடுதலை செய்ய வேண்டும் என்றார்.இதை ஏற்றுக் கொள்ள முடியாத அப்துல்லா யாமீன் இந்தியா மாலத்தீவுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று இந்திய அரசை கடுப்பேற்ற மோடி தன்னுடைய மாலத்தீவு பயணத்தை ரத்து செய்தார்.

சபதம்!

அந்த நேரத்தில் மோடி ஒரு சவால் செய்ததாக மாலத்தீவு மீடியாக்களில் ஒரு செய்தி வந்தது.மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீனை பதவி யில் இருந்து இறக்கிய பிறகே புதிய அதிபர் பதவியேற்கும் அன்று மாலத்தீவு மண்ணில் காலடி வைப்பேன் என்று சபதம் செய்துள்ளார் என்று செய்திகள் வெளிவந்தது.

புதிய அதிபர்!

இது நிகழ்ந்து மூன்றரை ஆண்டுகள் முடிந்து விட்டது. அப்துல்லா யாமீனை வீட்டுக்கு அனுப்பி விட்டு இதோ புதிய மாலத்தீவு அதிபராக நம் தேசத்தின் ஆதரவாளரான இப்ராஹிம் முகமது ஷோலி பதவி ஏற்பு விழாவில் மோடி பங்கேற்றுள்ளார். இதில் சந்தோசமான விசயம் என்ன என்றால் யாரை விடுதலை செய்தால் தான் மாலத்தீவு மண்ணில் காலடி வைப்பேன் என்று அப்துல்லா யாமீனுடம் சவால் விட்டாரோ அந்த கைதியான முன்னாள் மாலத்தீவு அதிபர் முகமது நஷீத் இன்று மோடியோடு இருக்கிறார்.

சபதம் முடித்தார்!

சீனாவின் எடுபிடியாக இருந்த அப்துல்லா யாமீனை வீட்டுக்கு அனுப்பி விட்டு நம் தேச ஆதரவு அரசினை நடத்தி வந்த முன்னாள் அதிபர் முகமது நஷீத்தின் மாலத்தீவு ஜனநாயக கட்சியில் இருந்து இப்ராஹிம் முகமது ஷோலியை மாலத் தீவு அதிபராக கொண்டு வர மோடியும் இந்தியா வின் ரா நிறுவனமும் மேற்கொண்ட நடவடிக்கைகள் மாலத்தீவின் மண்ணில் மறைந்துள்ள ரகசியங்களாகும்.

கடல் கடந்து வெற்றி!

இதெல்லாம் பெரிய விசயமா? என்று நீங்கள் நினைக்கலாம்.இந்தியாவிலேயே மோடியை எதிர்க்க இன்னமும் சில எதிர்க்கட்சி களிடையே ஒற்றுமை இல்லாத பொழுது ஒரு சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வந்த மாலத்தீவில் எதிர்கட்சிகளிடையே ஒற்றுமை ஏற்படுத்தி ஒரு பொது வேட்பாளராக இப்ராஹிம் முகமது ஷோலியை முன்னிறுத்தி ஆட்சி மாற்றத்தை இந்தியா ஏற்படுத்தியுள்ளதை நினைக்கும் பொழுது பெருமையாக இருக்கிறது.
மாலத்தீவில் உள்ள மாரோ அடோல் தீவில் இந்தியப் பெருங்கடலில் சீனா உருவாக்கி யுள்ள கடற்படை தளம் இனி என்னவாகும்? சீனா உருவாக்கிய முத்து மாலையின் கடைசி முத்தையும் மோடி அழித்து விட்டார்.

உறவு மேம்பாலம்!

இனி இந்தியா மாலத்தீவு இடையே உறவு மேம்படுவதோடு இந்தியா மாலத்தீவுகளில் துறைமுக அபிவிருத்தி ஏர்போர்ட் நவீனமயமாக்கம் என்று உள்ளே நுழைந்து மாலத்தீவுகளை இந்தியாவின் கஸ்ட்டிக்கு கொண்டு வந்து விடும்.

சீனாவின் ஏமாற்றம்!

மாலத்தீவில் நடைபெற்ற ஆட்சி மாற்றத்தை சீனா நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. இந்தியப் பெருங்கடலில் உள்ள முக்கிய தீவு தேசங்களான ஸ்ரீலங்கா, மாலைத்தீவு, மொரிஷியஸ், மடகாஸ்கர் தான் சீனாவின் முத்துமாலைத் திட்டத்தில் இருந்த முக்கிய தீவு நாடுகள்.
இதில் மொரிஷியஸ், மடகாஸ்கர் நம் தேசத்திற்க்கு எப்பொழுதுமே நண்பர்கள். மொரிஷியஸில் தமிழும், இந்தியும் கூட ஆட்சி மொழிகளாக இருப்பது நம் தேசத்திற்க்கே பெருமை. ஸ்ரீலங்காவில் ஏற்கனவே 2015 ஜனவரியில் மோடி மாலத்தீவு மாதிரியே எதிர் க்கட்சி களை ஒன்றினைத்து சீனாவின் கைக்கூலி ராஜபக்சேவை ரா வின் துணையுடன் வீட்டுக்கு அனுப்பி விட்டார். இந்த நிலையில் எஞ்சியிருந்த மாலத்தீவும் சீனாவின் கையை விட்டு போனதால் குழப்பத்தில் இருந்த சீனா பதிலுக்கு அவசரப்பட்டு இலங்கையில் மீண்டும் ராஜபக்சேவை இலங்கையில் பிரதமராக கொண்டு வந்து தோல்வியை தழுவியது.

உலக தலைவர் மோடி!

இப்படி இந்தியப் பெருங்கடலில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நடைபெறும் பரமபத விளையாட்டில் இந்தியாவின் சார்பில் விளையாடும் நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி மிக அழகாக சீனப் பாம்புகளை தாண்டி மாலத்தீவு மாதிரியான ஏணியில் ஏறி உலகத்தலைவராக உயர்ந்து வருகிறார்.

(Visited 13 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *