சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

சவுதி எங்கள் இரண்டாவது தாய் நாடு! கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

முன் கூட்டியே தொடங்கிய பருவமழை!

கேரளாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத் தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். இதன்படி ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நல்ல மழையளவு பதிவாகியது. கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அணைகள் நிறையத் தொடங்கின. கேரளாவில் உள்ள 40 ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது. இதனால், கேரளாவின் எஸ்டேட் உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். அணைகள் நிறைந்திருந்தாலும், அவற்றில் இருந்து தண்ணீர் வெளியேற்றாமல் அரசு மெத்தமானக இருந்தது.

ஆகஸ்ட் மாதத்தில் நொறுக்கிய மழை!

கேரளாவுக்கு ஆகஸ்ட் மாதம் ஒரு ஆபத்தான மாதமாகவே அமைந்தது. ஜூன் -& ஜூலை மாதங்களில் பெய்த மழையைவிட, 2 மடங்கு மழை கொட்டித் தீர்த்தது. முன்கூட்டியே வானிலை மையம் இதுகுறித்து கேரள அரசுக்கு எச்சரிக்கை செய்திருந்தது. ஆனால், பினராயி விஜயன் கேரள கம்யூனிச சர்வாதிகாரத்தின் மொத்த உருமாயிற்றே. வானிலை மையம் சொல்வதைக் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. வானிலை மையத்தின் எச்சரிக்கையை புறக்கணித்த பினராயி விஜயன், ஆகஸ்ட் மாதத்தில் பெய்த கடும் மழையால் தத்தளித்தார். மக்களுக்கு உரிய முன்னறிவிப்பு செய்யாமல், 30க்கும் அதிகமான பெரிய சிறிய அணைகளைத் திறந்துவிட்டார். கேரளாவின் ஆறுகளில் ஒரே நேரத்தில் பெருக்கெடுத்த 3 லட்சத்துக்கும் அதிகமான கன அடி நீர், ஒட்டு மொத்தமாக 13 மாவட்டங்களை நாசம் செய்தது.

 

மழையளவும் எச்சரித்த வானிலை மையமும்!

ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவழை சீசன் நாட்களில் ஆகஸ்ட் 15 அல்லது 16ம் தேதி வரை மொத்தம் 244 மி.மீட்டர் அளவு மழையளவு பதிவாகும். ஆனால், இந்த ஆண்டில் 3 மடங்கு அதிகமாக அதாவது 619 மி.மீட்டர் அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. இதனால், கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் நீர்மின் திட்டத்துக்காகவே உருவாக்கப்பட்ட இடுக்கி அணையானது, 26 ஆண்டுகளுக்குப் பின்னர் திறக்கப்பட்டு, தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இடுக்கி அணை என்பது, மேட்டூர் அணைக்கு சமம் என்று சொல்லலாம். அந்த அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட அதிகளவு தண்ணீர் கேராவின் ஒரு பகுதியை சிதைத்தது. அச்சன்கோயில் ஆறு, பம்பை ஆறு ஆகியவை தங்கள் பங்குக்கு பொங்கிப் பாய்ந்து பிரவாகித்தன.

மீட்பிலும் அரசியல்!

கேரளாவில் ஏதாவது பிரச்னையென்றால் முன்னால்
வந்து ரகளை செய்யும் மிஷினரிகளும், பிற மத அமைப்புகளும் ஓடி ஒளிந்து கொண்டன. ஆனால், ஆர்.எஸ்.எஸ் மற்றும் சேவா பாரதி அமைப்பினர் கேரளாவின் மழை வெள்ளத்திலும் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தனர். மீட்பு, வெள்ள நிவாரணம் மற்றும் உணவு வழங்குவதில் 24 மணி நேரமும் அயராது உழைத்தனர்.
நாட்டின் 40 தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வந்தும், நிலைமை சீராகவில்லை

. 40க்கும் அதிகமான ஹெலிகாப்டர்கள், ராணுவம் வந்திறங்கியது. இவர்களுடன் தாய்நாட்டின் ராணுவமான ஆர்.எஸ்.எஸ் களம்

இறங்கியது. கம்யூனிஸ்ட்கள் ஓடி ஒளிந்து கொள்ளத் தொடங்கினர். மீட்புப் பணியில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் சேவா பாரதி அமைப்பினரின் அயராத பணிகளை சில மீடியாக்கள் பகிரங்கமாகவே ஒளிபரப்பின. இது பிணராயிக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

குவிந்த நிவாரண நிதி

கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டது என்றதும் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், பீகார் உட்பட பல மாநிலங்களும், லுலு தொழில் குழுமமும் நிவாரண நிதியை அள்ளிக் கொடுத்தனர். இதுவே கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் அளவுக்கு நிதியை எட்டிப் பிடித்தது. கேரளாவின் மழை வெள்ள பாதிப்பை ஆய்வு செய்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் 100 கோடி ரூபாயை அறிவித்தார்.
இதன் பின்னர் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, நள்ளிரவு நேரத்தில் திருவனந்தபுரம் வந்து சேர்ந்த பிரதமர் மோடி, அதிகாலையில் கவர்னர் சதாசிவம், முதல்வர் பினராயி விஜயனுடன் சேர்ந்து மழை வெள்ளத்தைப் பார்வையிட்டார். திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் உடனடியாக 500 கோடி ரூபாய் விடுவிப்பதாக கூறினார். மத்திய அரசின் நிதியாக மொத்தம் 600 கோடி முதல் கட்டமாக விடுவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தாய்நாட்டை அவமதித்த பினராயி!

கேரள மக்களின் உணவு, உடை மற்றும் அத்தியாவசியப் பொருட் களை தமிழகத்தில் இருந்து லாரிகளில் அள்ளிக் கொண்டுபோய் குவித்துக் கொண்டிருந்த மக்கள் ஒருபுறம் இருக்க, ‘கேரள மழை வெள்ளத்துக்கு ஐக்கிய அரபு எமிரேட் 700 கோடி ரூபாய் கொடுப்பதாக கூறியுள்ளது. இதற்காக அமீரக நிர்வாகத்துக்கு நன்றி. அது எங்களின் 2வது தாய்நாது’ என்று மீடியாக்களில் அறிவிப்பு செய்தார் பினராயி விஜயன்.
இந்தியாவின் பேரிடர் காலங்களில் வெளி நாடுகளின் நிதியை ஏற்பது இல்லை என்று 2004ம் ஆண்டில், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் கொண்டு வந்த சட்டத்தை மேற்கோள் காண்பித்த மத்திய அரசு, அமீரக நிதியை ஏற்க முடியாது என்று அறிவித்தது. அத்துடன், ‘வெளிநாட்டு நிதி உதவிகள் கிடைக்கும் வாய்ப்புகள் வரும்போது, அதுகுறித்து முறைப்படி மத்திய அரசுக்கு அறிவிப்பு செய்த பின்னரே அறிவிக்க வேண்டும். மத்திய அரசுக்கு உரிய அறிவிப்பு கொடுக்காமல், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நிதி உதவி வருவதாக சொன்னது எப்படி?’ என்று மத்திய அரசு பினராயி விஜயனை குடையத் தொடங்கியது. அத்துடன் அமீரகம் எங்களது 2வது தாய்நாடு என்று அறிவித்து, இந்தியாவின் இறையாண்மைக்கு பினராயி விஜயன் அவமதிப்பு செய்துவிட்டார்.

அமீரகம் கைவிரிப்பு!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு நாங்கள் உதவி செய்வதாக கூறினோமே தவிரவும், 700 கோடி ரூபாய் நிதி கொடுப்பதாக கூறவே இல்லை என்று ஐக்கிய அரபு அமீரகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இது பினராயிக்கு மட்டுமல்ல, அந்நிய நாட்டின் நிதியை, குறிப்பாக முஸ்லிம் நாடுகள் கொடுக்கும் நிதியை ஏற்க மறுக்கிறது மோடியின் இந்துத்துவா அரசு என்று விமர்சித்த, தமிழகத்தின் மீடியாக்களுக்கும் சரியான அடியாக அமைந்தது. அதற்குள், இங்குள்ள முஸ்லிம்கள் குறிப்பாக கேரள முஸ்லிம்கள் அமீரக ஷேக்குகளுக்கு நன்றி தெரிவித்து, போஸ்டர் அடித்து, பட்டாசுகள் கொளுத்தி, தாங்கள் என்றும் அரபு அடிமைகள் என்று நிரூபித்து விட்டனர். அதேநேரத்தில், தாய்நாட்டை அவமதிக்கும் நோக்குடன், தன் மக்களுக்கும், அரசுக்கும் தவறான தகவல் தெரிவித்த பினராயி விஜயன், இப்போது அதற்கு சப்பை கட்டு கட்டிக் கொண்டிருக்கிறார்.

எது ஊடக தர்மம்?

எதற்கெடுத்தாலும் மோடி அரசை குற்றம் சொல்வதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கும் இன்றைய ஊடகங்கள், கேரளாவுக்கு அளிக்கப்பட்ட நிதி, மீட்பு நடவடிக்கை ஆகியவற்றைக் குறித்து வாய் திறக்கவில்லை. தேசிய நெடுஞ்சாலைத்துறை, மத்திய மின்சக்தித்துறை ஆகியவற்றை முடுக்கிவிட்டுள்ள பிரதமர் மோடி, கேரளாவில் மீண்டும் இயல்பு நிலைத் திரும்ப விரைந்து செயல்படும்படி கூறியுள்ளார். மழை வெள்ளத்தால் வீடு இழந்த 25 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்களுக்கு, பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கிடவும், தோட்டப் பயிர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், காப்பீடு செய்யப்பட்ட பயிர்களுக்கு உடனடியாக காப்பீடு தொகை கிடைக்கவும் பிரதமர் மோடி நடவடிக்கையை முடுக்கியுள்ளார். ஆனால், வழக்கம்போல் கம்யூனிஸ்ட் கட்சிகள் மோடியை வசைபாடத் தொடங்கியுள்ளன.

துன்பத்திலும் துன்பம்  கொடுக்கும் கேரளா!

நீங்கள் என்னதான் மலையாளியை உங்கள் சகோதரனாக, சக இந்தியனாக நினைத்தாலும், அவர்களது உள்ளத்தில் ஒளிந்திருக்கும் குரூரத்தை சில நேரங்களில் மிகச் சரியாக உணர்த்திவிடுவார்கள். எனக்கு 2 கண் போனாலும், என் எதிராளிக்கு ஒரு கண் போகவேண்டும் என்ற மன நிலையில்தான் கேரளாவின் முதல்வர் பினராயி விஜயனும், அந்த மாநில மக்களும் உள்ளனர்.
கேரளாவின் அணைகளில் இருந்து முன்னறிவிப்பு ஏதும் இல்லாமல் 3 லட்சம் கன அடிக்கும் அதிகமான தண்ணீரை (25 டிஎம்சி) திறந்துவிட்டு கேரளாவின் ஆலுவா, கொச்சி, கோழிக்கோட்டை நாசமாக்கிய பிணராயி விஜயனின் அரசாங்கம், ‘‘முல்லைப் பெரியாறில் 142 அடி தண்ணீர் தேக்குவதால் அணைக்கு ஆபத்து அதிகரித்துள்ளது. அங்கிருந்து அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டதே கேரளாவில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கு முதல் காரணம்’’ என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.
என்ன, ஏது என்று விசாரிக்காத சுப்ரீம் கோர்ட்டும், உடனடியாக நீர் மட்டத்தை 139.99 அடியாக குறைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. 142 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் பாசனத் தேவைக்குத் தண்ணீர் திருப்ப முடியும் என்ற நிலை உள்ளது. தமிழக விவசாயிகளின் வாழ்வில் மண் அள்ளிப்போடும் வகையில், சுப்ரீம் கோர்ட்டில் கேரளா பொய்யான குற்றச்சாட்டைக் கூறியுள்ளது. இப்போது சொல்லுங்கள், கேரளா மக்கள் விசுவாசிகளா? கேரள முதல்வர் மனிதாபிமானம் உள்ளவரா? உள்ளபடியே அவர் ‘பின’ராயி விஜயன்போல் நடந்து கொள்கிறார் என்கின்றனர் தேனி, மதுரை மாவட்ட விவசாயிகள்.

(Visited 27 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *