சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

சாதனையாளர் திரு.டி.வரதராஜனின் தாம்ப்ராஸ் சென்னை மாவட்டத் தலைவர் அவர்களுடன் ஒரு சந்திப்பு!

மூன்றாண்டு சாதனை!

பிராமண சங்கத்துடன் உங்கள் பயணம் குறித்து….

உலக நாடுகளில் இந்தியா ஆன்மீக குருவாக திகழ்கிறது என்றால் தமிழ்நாடு தான் ஆன்மீக இந்தியாவின் இதயம் என்றே நான் கூறுவேன்…

ஆழ்வார்களும் நாயன்மார்களும் நடந்த பூமி இது. தமிழ் நாட்டின் ஆன்மீக அதிசயங்களைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். இந்த ஆன்மீக சேவையே எனது முக்கிய கடமை என்று நான் கருதியபடியால், பிராமண சங்கத்தில் இணைந்து பல வருடங்கள் சேவை செய்து வந்தேன். பொது சேவை என்பதும் இதில் கலந்துள்ளது.

2016ம் ஆண்டு மூத்த தலைவர்களான திரு. ஹண்டே, திரு.ஆர். கிருஷ்ணசாமி, மற்றும் திரு. கே. கணபதி அவர்களின் வழிகாட்டுதலில் சென்னை மாவட்ட தாம்பராஸ் தலைவராக பொறுப்பேற்று கொண்டேன்.

* சென்னை மாவட்ட தலைவர் பதவியில் பல தொடர் நிகழ்ச்சிகள் நடந்து வந்தாலும் குறிப்பிடும்படியாக சொல்ல வேண்டியது, எங்களது சென்னை மாவட்ட அலுவலகத்திற்கு ஒரு நிரந்திர வருமானம் உண்டு பண்ணியது தான்.

ஸ்ரீகாமதேனு அறக்கட்டளையின் கீழ் இருந்த எங்களது சொந்த இடத்தை, வாடகைக்கு விட ஏற்பாடு செய்தது மனதிற்கு திருப்தி அளித்தது.

நிரந்திர வைப்பு தொகையாக 10 லட்சம் ஏற்படுத்தியதில் நிம்மதி.

மாநில தாம்பராஸ் சங்கத்திற்கு ஒரு கட்டிடம் வாங்க எங்கள் சென்னை மாவட்டம் மூலமாக 25 லட்சம் நன்கொடை திரட்டி கொடுத்ததும் எனக்கு திருப்தி அளித்தது.
சாதனைகள் என்று சொல்ல வேண்டுமானால் மகளிர் எழுச்சி நாள், இளைஞர் எழுச்சி நாள் மிகவும் விமர்சையாக நடைபெற்றது.

8000 நொச்சி மரங்கள் நட்டது, 18,000 வீடுகளுக்கு வெள்ள நிவாரணம் செய்ததற்காக ‘‘அம்மா விருது’’ பெற்றது, என பல பொதுநல பணிகளையும் எங்கள் சங்கம் சார்பில் செய்துள்ளோம்.

உங்கள் வருடகால திட்டம் என்ன?

சங்கம் சார்பாக எனது கனவு ஏழை எளிய பிராமணர்களுக்கு தேவைபடும் உதவிகளைச் செய்ய வேண்டும் என்பதே.

இன்று போலி மதசார்பின்மை பேசும் அரசியல் தந்திரவாதிகள், எந்த வம்புக்கும் போகாமல் இருக்கும் பிராமணர்களை மட்டுமே குறி வைத்து அவமதிப்பு செய்கின்றனர்.

பிரச்சாரம்!

இது பொய் உண்மையில்லை! தவறு என்று தெரிந்தாலும் பிற சாதி சங்கத் தலைவர்கள் கண்டனம் தெரிவிப்பதில்லை.

இதற்கு ஒரு தீர்வு தேவை என்றே நான் கருதுகிறேன்.

நமது ஆன்மீக கலாச்சார பண்பாடுகளை போலி பகுத்தறிவு வாதிகள் அவமானபடுத்தும் போது பலமுறை கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளோம். காவல் துறைக்கு புகார் அளித்துள்ளோம்.

கோயில் சொத்துக்கள் கொள்ளையடிக்கபடாமல் தடுக்க போராடி வருகிறோம்.

கோயில் அர்ச்சகர்கள் வறுமையில் வாடுகின்றனர். அவர்களது உரிமைக்காகவும் போராடி வருகிறோம்.

எங்கள் சங்கம் சார்பில் கல்வி நிலையங்கள் கல்யாண சத்திரம், கட்ட வேண்டும் என்பது என் கனவு.

பிரதமர் மோடியின் 10% இட ஒதுக்கீடு வரப்பிரசாதம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அனைத்து பிராமணர்களும் ஜாதி சான்றிதழ் பெற்று கொள்ள வேண்டும் என்று எங்கள் சங்கத்தின் மூலமாக உதவி வருகிறோம்.

கடந்த 20 ஆண்டுகளாக தமிழ் நாட்டில் அரசியல் சாசனத்திற்கு எதிராக 69% ஜாதிய ஒதுக்கீட்டின் இறுதி தீர்ப்பை வழங்காமல் லட்சக்கணக்கான திறமையான மாணவர்களின் வாழ்கையை உச்சநீதி மன்றம் புறந்தள்ளியுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளாக தமிழ் நாட்டில் அரசியல் சாசனத்திற்கு எதிராக 69% ஜாதிய ஒதுக்கீட்டின் இறுதி தீர்ப்பை வழங்காமல் லட்சக்கணக்கான திறமையான மாணவர்களின் வாழ்கையை உச்சநீதி மன்றம் புறந்தள்ளியுள்ளது.

தமிழக அரசிடம் எங்களது கோரிக்கை இதுவே.

உச்சநீதி மன்ற தீர்ப்பு வரும்வரை 19% அதிக மருத்துவ பொறியியல் மற்றும் இதர சீட்டுகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதே.

பல லட்சம் திறமையான மாணவர்கள் வாய்ப்பை இழந்துள்ளனர் என்பதை நினைக்குத் போது மனம் வேதனை யடைகிறது. எனது பணி தொடர்ந்து சேவை செய்வது தான்! பிறகு கடவுள் சித்தம்….

 

(Visited 10 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *