சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

சிதறுகிறதா பாகிஸ்தான்

பிரதமரின் கட்டளையும் ராணுவத்தின் பதிலடியும்!

‘ராணுவத்தின் கரங்கள் கட்டப்படவில்லை. முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது’ என்று பிரதமரின் அறிவிப்பு, இந்திய ராணுவத்தின் சர்வ சுதந்திர செயல்பாட்டுக்கு வழி வகுத்துவிட்டது. புல்வாமாவில் வீர மரணம் எய்திய ஒவ்வொரு சிஆர்பிஎப் வீரர்களின் தியாகத்துக்கும், பாகிஸ்தான் பதில் சொல்லியாக வேண்டும். இதற்கு அதிகமாக பாகிஸ்தான் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று பிரதமர் மோடி எச்சரித்தார்.

அதே நேரத்தில், ஊறுகாய் போடும் மாமியிடம் பாதுகாப்புத்துறையை ஒப்படைத்தால் இப்படித்தான் நடக்கும் என்று, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மீது சமூக வலைத்தளப் போராளிகளின் தாக்குதல்கள் வேறு. ஆனால், இவை அத்தனையையும் தாங்கிக் கொண்டு, தன் சகாக்களுடன் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க மன்னிக்கவும், அதன் தீவிரவாதத்துக்கு தகுந்த பதிலடி கொடுக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தார் ராணுவ அமைச்சர் நிர்மலா.

சரியாக, பிப்ரவரி 26ம் தேதி அதிகாலை 2.58 மணி முதல் 3.19 மணி வரையில் 21 நிமிடங்களில் இந்தியாவின் பதிலடியை பாகிஸ்தான் சந்தித்தது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முராதாபாத், பாலகோட் உட்பட 3 பகுதிகளில் இயங்கி வந்த தாக்குதலுக்கு 26ம் தேதி அதிகாலை நேரத்தில் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் வான் எல்லைக்குள் சீறிப் பாய்ந்தன. இவற்றுக்கு பாதுகாப்பாக சுகோய் 30 ரக விமானங்கள் மின்னல் வேகத்தில் அணி வகுத்துக் கொண்டிருந்தன.

மணிக்கு 2 ஆயிரத்து 336 கி.மீட்டர் வேகத்தில் மிகப் பெரிய தீவிரவாத பயிற்சி முகாமை தற்காலிகமாக காலி செய்த பாகிஸ்தான் ராணுவம், தீவிரவாதிகளை பாலகோட் பகுதியில் உள்ள மலை உச்சியில், சகல வசதிகளுடனும் தங்க வைத்தது. பாலகோட் பகுதி என்பது பாகிஸ்தானின் முல்தான் பகுதிக்கு அருகாமையில் உள்ளது. இங்குதான் அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் உதவியுடன் பாதுகாப்பாக தங்கியிருந்தார்.

இந்த இடத்துக்கு அருகாமையில் உள்ள பாலகோட் பக்கம், இந்தியாவின் பார்வை திரும்பாது என்று திட்டமிட்ட பாகிஸ்தான், தீவிரவாதிகளை அங்கு விருந்தினர்களாக தங்க வைத்தது. கிட்டத்தட்ட ஒரு வார காலம் தீவிரவாதிகளின் நடமாட்டத்தை துல்லியமாக கண்காணித்த இந்திய விமானப்படை, 26ம் தேதி அதிகாலையில் சரமாரியாக முகாம் மீது குண்டுகளை வீசித் தகர்த்தது. 1971ம் ஆண்டு போருக்குப் பின்னர் எல்லை தாண்டாமல் இருந்த இந்தியா, இந்த முறை எகிறியடித்ததை பாகிஸ்தானே எதிர்பார்க்கவில்லை.

சமாளித்தார். அதாவது பரவாயில்லை, ‘இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கலாம் என்றுதான் நினைத்தோம். ஆனால், நல்ல இருட்டு நேரமாக இருந்ததால், போதிய முன்னேற்பாடுகள் செய்ய முடியவில்லை’ என்று அந்நாட்டின் அமைச்சரே பேட்டி கொடுக்கும் படி நிலை மோசமானது.

 சமாளிப்பும் சவாலும்!

எங்கள் நாட்டின் மீது இந்தியாவின் விமானப்படை விமானங்கள் எந்த ஒரு தாக்குதலும் நடத்தவில்லை என்று பாகிஸ்தான் கூறிவந்தாலும், வாங்கிய அடியை ஜீரணிக்க முடியவில்லை. நரசிம்மராவ், குஜ்ரால், சந்திரசேகர், தேவகவுடா, வாஜ்பாய் மற்றும் மன்மோகன் போன்ற பிரதமர்கள் போல் அல்லாமல், பிரதமர் மோடி துணிந்து நின்று அடிப்பார் என்பதை கொஞ்சமும் எதிர்பார்க்காத பாகிஸ்தான், செய்கூலி, சேதாரம் என்று அதிகமான விலையை கொடுத்துவிட்டது.

இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறினாலும், அதையும் பார்க்கும் சவாலில் இந்தியா முனைப்புடன் இருந்தது. இதற்காக, 27ம் தேதி காலை பாகிஸ்தான் ராணுவம், தன் சக்தி வாய்ந்த பால்கன் 16 ரக விமானத்தை இந்தியாவின் எல்லைப் பகுதிக்குள் ஊடுருவச் செய்தது.

இந்திய விமானியின் சாகசம்!

பாகிஸ்தான் இப்படி ஏதாவது வரம்பு மீறும் என்று திட்டமிட்டே முப்படைகளும் தயார் நிலையில் இருந்தன. இந்தியாவின் எல்லைக்குள் பாய்ந்த பால்கன் 16 ரக அதிநவீன போர்

இந்தியா அமைதியை விரும்பும் நாடாக இருந்தாலும், நம்மிடம் இருந்த பிரிந்த பாகிஸ்தானுக்கு எப்போதும் அமைதியில் ஆர்வம் இல்லாமல் போனது நமக்கான சங்கடங்களில் ஒன்றாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. 1996ம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்பு, 2008ம் ஆண்டு மும்பைத் தாக்குதல் உட்பட அவ்வப்போது இந்தியாவின் மீது தான் பயிற்சி வழங்கிய தீவிரவாதிகள் உதவியுடன் பாகிஸ்தான் தாக்கதல் நடத்துவது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி 14ம் தேதி, காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தின் வழியாக பயணம் செய்து கொண்டிருந்த 2 ஆயிரத்து 500 சிஆர்பிஎப் படை வீரர்களின் வாகனங்கள் மீது, தன் ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத இயக்கத்தின் மூலம் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும என்று தேசம் கொந்தளித்துக் கொண்டிருந்தது.

விமானத்தை, இந்தியாவின் மிக் 21 பைசன் ரக விமானத்தைக் கொண்டே ஓட ஓட விரட்டிச் சென்றார் விங் கமாண்டர் அபிநந்தன். இதில், அபிமன்பு சக்கர வியூகத்தை உடைத்ததுபோல், எப் 16 விமானத்தை சுட்டு வீழ்த்தி வெற்றிகரமாக திரும்ப முயன்ற நேரத்தில், சக்திவாய்ந்த ஆர்டிலெரி கன் மூலம் அவரதுவிமானத்தை பாகிஸ்தான் ராணுவம் வீழ்த்தியது. அபிநந்தனை கைது செய்து, விசாரித்தது. ‘ஆம், நான் நாட்டின் தென் பகுதியில் இருந்து ராணுவத்துக்கு வந்தவன். எனக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்தேன்’ என்று கூறி பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளை திணறடித்தார். அபிநந்தனை பத்திரமாக மீட்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

மத்திய அரசு அவசர ஆலோசனை!

பாகிஸ்தான் போர் விமானங்கள் எல்லை தாண்டிய நிலையில், அதற்கு பதிலடியாக இந்தியாவின் நடவடிக்கை கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 27ம் தேதி காலை இளைஞர் பாராளுமன்ற நிகழ்ச்சியில் இருந்த பிரதமர் மோடி, பாகிஸ்தானின் எல்லை மீறலைக் கேள்விப்பட்டவுடன் உடனடியாக நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா உட்பட மூத்த அமைச்சர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, பாகிஸ்தானின் எந்தவிதமான தாக்குதலை சமாளிக்கும் வகையில், முப்படைகளையும் தயார் நிலையில் வைக்க உத்தரவிட்டார்.

எல்லையோரங்களில் பதட்டம்!

பாகிஸ்தான் நாட்டின் எல்லையோரப் பகுதிகளில் உள்ள மாநிலங்களான குஜராத், ராஜஸ்தான், காஷ்மீர் ஆகியவற்றில் எல்லைப் பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. கனரக வாகனங்கள், பீரங்கிகள், ஷெல் லாஞ்சர்கள், சிறிய வகையிலான ஏவுகணை வீசும் கலங்கள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. முன்னதாக, குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் நாட்டின் உளவு ட்ரோனை, இந்தியாவின் ஸ்பைடர் தொழில்நுட்ப அடிப்படையிலான மினி ஏவுகணை சுட்டு வீழ்த்தியது. இந்த ஸ்டைபர் தொழில்நுட்பம் சமீபத்தில் இஸ்ரேல் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.

அதிநவீன தொழில்நுட்பங்கள் இணைப்பு!

கடந்த 1999ம் ஆண்டு பாகிஸ்தான் கார்கில் பகுதியில் வாலாட்டியபோது, இந்தியாவின் ராணுவத்துக்கு வழிகாட்டுதல் தொழில்நுட்பம் எனப்படும் நேவிகேஷன் சிஸ்டம் மிகுந்த சிக்கலை சந்தித்தது. அப்போது அமெரிக்கா மட்டுமே உலகின் சிறந்த நேவிகேஷன் சிஸ்டத்தை கொண்டிருந்தது. தொடக்கத்தில் சில நாட்கள் தகவல் தெரிவித்த அமெரிக்கா, அதன் பின்னர் பாகிஸ்தான் பக்கம் சாய்ந்தது. இதனால், மலைப் பகுதியின் உச்சியில் பதுங்கி இருந்து தாக்கிய பாகிஸ்தானியர்களை, மலையின் கீழ் பகுதியில் இருந்து மெல்ல மெல்ல முன்னேறிச் சென்று இந்தியா வீழ்த்த வேண்டியிருந்தது. இதனால், 530க்கும் அதிகமான வீரர்களை இந்தியா இழந்தது.
இதனால், இஸ்ரோ அதிகப்படியான நேவிகேஷன் தொழில்நுட்ப செயற்கைக் கோள்களை நமக்காக ஏவத்தொடங்கியது. கிட்டத்தட்ட 7 நேவிகேஷன் செயற்கைக் கோள்கள் நமக்காக விண்வெளியில் இருந்து, இந்தியாவை 24 மணி நேரமும் கண்காணித்துக் கொண்டே இருக்கின்றன. இந்த நேவிகேஷன் தொழில்நுட்பத்தின் உதவியுடன்தான் இந்திய விமானப்படை தன் துல்லியமான தாக்குதலை நிகழ்த்தியது என்பது இந்தியர்கள் பெருமை கொள்ள வேண்டிய விஷயம்.

ஏவுகணைகளும் தயார் நிலையில்!

இந்தியாவின் விமானப்படை பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்களை மட்டுமே தாக்கி அழித்தது. பொது மக்களை தொடவே இல்லை. ஆனால், இந்தத் தாக்குதலை சுயமரியாதைப் பிரச்னை போல் பாவித்துக் கொண்ட பாகிஸ்தான், வீம்புக்கு விமானத் தாக்குதல் நடத்த முயன்று, தோற்றுப்போய்விட்டது. அதிலும் விமானத்தையும் இழந்துவிட்டது. இந்திய எல்லைக்குள் நுழைந்ததற்காகவே பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க முப்படைகளும் தயார் நிலையில் உள்ளதைக் கேள்விப்பட்ட, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், அணு ஆயுத நிபுணர்களுடன் அவசர ஆலோசனை நடத்தி, சூழ்நிலையை மேலும் பதட்டம் ஆக்கினார்.

‘நாம ஒரு குண்டு வீசினால், ஒட்டு மொத்த பாகிஸ்தானையும் இந்தியா தரைமட்டமாக்கிவிடும். அதனால், அவசரம் வேண்டாம்’ என்று பாதுகாப்புத்துறை நிபுணர்கள் ஆலோசனை வழங்கியதால், பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார் என்று அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், எந்நேரத்திலும் எதிவும் நடக்கலாம் என்பதால், பாகிஸ்தானின் முக்கிய நகரங்களை நோக்கி, அதிக திறன் கொண்ட வெடிகுண்டுகள் பொறுத்தப்பட்ட ஏவுகணைகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.

அரபிக் கடலில் அலர்ட்!

பாகிஸ்தானின் முக்கிய துறைமுக நகரமான கராச்சியை இப்போது, இந்தியா கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறது. குஜராத்தின் காண்ட்லா, மகாராஷ்டிராவின் மும்பை துறைமுகங்களில் இருந்து இந்தியாவின் கப்பற்படை தொடர்ந்து அரபிக் கடல் பகுதியில் கண்காணிப்புப் பணியை மேற் கொண்டுள்ளது. எந்த ஒரு சூழ்நிலையிலும் கடல் வழித் தாக்குதல் நடைபெற்றால், அதை முறியடிக்கும் வகையில் முழு ஆயத்த நிலையில் இந்தியா உள்ளது.

சிதறுகிறதா பாகிஸ்தான்?

பாகிஸ்தான் நாட்டில் நிலவும் உள்நாட்டுப் பிரச்னையால், அந்நாட்டின் மக்கள் நித்தமும் நிம்மதி இன்றி தவித்துக் கொண்டிருக்கின்றனர். பாகிஸ்தானின் சிந்து பகுதி மக்கள், பலுசிஸ்தான் மக்கள் ஆகியோர் தங்களுக்கு சுதந்திரம் கேட்டு போராடிக் கொண்டிருக்கின்றனர். இதில் பலுசிஸ்தான் மக்களின் போராட்டத்துக்கு இந்தியா ஏற்கனவே மறைமுக ஆதரவு கொடுத்து வருகிறது. இப்போது காஷ்மீர் பிரச்னையில், சிந்து மாகாண மக்களும் தங்களுக்கு அமைதியான வாழ்க்கை வேண்டும் என்பதை வலியுறுத்தி, பாகிஸ்தானை எதிர்க்கத் தொடங்கிவிட்டனர். ஒரே நேரத்தில் பல்வேறு தரப்பில் இருந்தும் நெருக்கடி வரும் நிலையில், யுத்தம் மூண்டால் அது பாகிஸ்தானின் வரை படத்தை உடைத்து 3 அல்லது 4 நாடுகளாக உருவாக்கிவிடுமோ என்ற அச்சம் அதன் ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

(Visited 40 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *