சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

சீனாவின் சமூக ரிப்போர்ட் கார்ட்!

சீனாவில் சர்வாதிகார கம்யூனிஸ் ஆட்சி நடைபெறுகிறது. இதுவரை கொடுமையான தண்டனைகளை மட்டுமே பார்த்து வந்த மக்களுக்கு இப்போது ஒரு புது மாதிரியான வியூகம் அமைத்துள்ளது சீன அரசு.
சீனாவின் மொத்த ஜனத் தொகை 1,4 மில்லியன். ஒவ்வொரு குடிமகனும் 24/7 கண்கானிக்கப்படுவர். தற்போது 200 மில்லியன் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வெகு விரைவில் மேலும் 400 மில்லியன் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு விடும் என்று கூறியுள்ளது அரசு.
இந்த கேமராக்கள் ஒவ்வொரு குடிமகனையும் படம் எடுத்து ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுவதோடு அந்த குடிமகனின் பதிவேட்டில் தகவல்களை சேகரிக்கும்.
மேலும் வங்கி மற்று கல்வி நிலையங்கள் வேலை பார்க்கும் நிறுவனங்கள், பொழுது போக்கும் இடங்களில் இருந்தும் தகவல்கள் ஒருங்கிணைக்கப்படும்.

ரிப்போர்ட் கார்ட் ரிசல்ட் என்னி!

மொத்தம் 800 மதிப்பெண்கள். நன்மைகளும் தீமைகளும் கொண்டது இந்த ரிப்போர்ட் கார்ட் திட்டம்.

எது தவறு!

ரோட்டில் கண்டபடி நடப்பது, குடிப்பது, கட்ட வேண்டிய வரிகளை லேட்டாக கட்டுவது, அரசுக்கு எதிராக பேசுவது, அதிக நேரம் சமூக வலை தளங்களை பார்ப்பது, அதிகளவு வீடியோ கேம்ஸ் விளையாடுவது, பார்த்த பொருட்களை எல்லாம் வாங்குவது போன்ற செயல்களால் உங்கள் மதிப்பெண்கள் குறையும்.

கூடா நட்பு!

உங்கள் உறவினரோ அல்லது நண்பரோ அரசை விமர்சித்தாலும் கூட உங்கள் மதிப்பெண்களை இழப்பீர்கள். கூடா நட்பு என்று தெரிந்தவுடன் உறவை துண்டிப்பதே உங்களுக்கான யோசனை.
தண்டனை என்ன?
அரசு உத்தியோகம் கிடையாது. இணையதள இணைப்பு கிடையாது. விமான பயணம் கூடாது. வேக ரயில் கிடையாது. உயர்கல்வி கிடையாது இப்படி தனி மனித உரிமைகள் பறிக்கப்படும்.

பாவம் ஒரு பத்திரிகையாளர்!

லீயூ ஹீ என்ற ஒரு பத்திரிகையாளர் சீனாவில் உள்ள ஊழலை இணைய தளத்தில் நிருபித்துவிட அரசு அவரை சிறையில் தள்ளியது. இணைய தளம் முடக்கப்பட்டு தற்போது லீயு வெளியே வந்துவிட்டாலும் எங்கும் பிரயாணம் செய்ய முடியாது. வேலை வாய்ப்பும் இல்லை.

நல்ல மார்க்  வாங்குபவர் யார்!

அரசுடன் ஒத்து போபவர்கள், ஒழுங்காக உழைத்து வரி செலுத்துபவர்களுக்கு, வேலை வாய்ப்பு, பிள்ளைகளுக்கு நல்ல பள்ளி படிப்பு, உயர் கல்வி ஹோட்டல்களில் சலுகை, விமான நிலையங்களில் விஐபி சலுகை, குறைந்த வட்டி கடன் வசதி என பல அம்சங்கள் உள்ளபடியால் மக்கள் நல்ல ரிப்போர்ட் கார்ட் வாங்குவது எப்படி என்று யோசித்து வருகிறார்கள்.
2020க்குள் மொத்த சீன மக்களுக்கும் இந்த ரிப்போர்ட் கார்ட் கிடைத்துவிடும் என்று சீன அரசு கூறியுள்ளது.

(Visited 5 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *