சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

சுதேசி – துருவா விருதுகள் – 2018

துருவா விருதுகள் 2018 மிக விமரிசையாக நவம்பர் 25ம் தேதி சென்னையில் நடைபெற்றது. மாண்புமிகு மூத்த பாஜக தலைவர், தர்ம போராளி எச்.ராஜா அவர்கள் வந்திருந்து சுதேசியின் 9வது வருட துவக்க விழாவிற்கு உற்சாகமளிக்கும் வகையில் பேசி பாராட்டுகளையும் வாசகர்களின் மனங்களையும் அள்ளிச் சென்றார்.
விழாவினை அலங்கரித்த சிறப்பு விருந்தினர்கள்
திரு.ஜெ.பாலசுப்ரமணியன், திரு.ரமணி, திருமதி.விஜயஸ்ரீ மகாதேவன் அவர்களும் சிறப்பாகவும், மக்களுக்கு சரியான கருத்துகள் சென்றடையும் விதத்தில் பேசி, சுதேசியின் சேவையை பாராட்டினார்கள்.

விருதுகள் 2018

நம்பிக்கை வானில் துருவ நட்சத்திரமாக ஜொலிக்கும் தன்னலமில்லா சேவை செய்பவர்களுக்கு துருவா விருதுகளையும், தொழில் துறை நிபுணர்களாகவும், சமூக சேவை செய்பவர்களுக்கும் விஷிஷ்டா விருதையும், தொழில் அதிபர்கள் சமூக தொண்டினை ஒரு கண்ணாகவே பாவித்து, தொண்டுகளை சிறப்பாக ஆற்றும்போது அவர்களை பாராட்டி ‘சிரேஷ்டா விருதையும்’ தன்னலமற்ற சமூக சேவைகளை ஊக்குவிக்கும் பொருட்டு, பொருள் உதவி, சரியான வழிகாட்டுதல், இடம் கொடுத்தல் போன்ற தர்ம செயல்களை பல காலம் தொடர்ந்து செய்து வரும் தர்ம சிந்தனையாளர்களுக்கு ‘தர்மோ தாரண’ விருதையும் சுதேசியின் சார்பாக கொடுத்து சிறப்பித்தனர் சிறப்பு விருந்தினர்கள்.

பெண்களில் சமூக சேவை செய்யும் கண்மணிகளுக்கு ‘சக்தி சாதனா’ விருதுகளையும், பேருதவி செய்து தொண்டாற்றும் பெண்மணிகளுக்கு ‘சிரோன்மணி’ விருதையும் வழங்கி கௌரவித்தனர்.
யுவரத்னா விருதை இரண்டு சிறுமியர் ஆடலிலும், பாடலிலும் நன்கு தேர்ச்சி பெற்று, இந்த சிறிய வயதில் சாதனை புரிந்து விருதுகளை வாங்கிச் சென்றனர்.

துருவா 2018 விருது

நிகழச்சியின் ஆக சிறப்பாகியாக ‘பிஷ்மா’ விருது இரு பெரும் தொண்டுள்ளங்களுக்கு கொடுக்கப்பட்டது.
தன்னலம் மட்டும் கருதாது பொது பெண்ணலம் கருதி மீ..டூ… இயக்கத்தை முடுக்கி விட்ட திருமதி.சின்மயி அவர்களுக்கு தார்மீக சாதனா விருது வழங்கப்பட்டது. அவர் அன்று தான் அமெரிக்காவிலிருந்து வந்தமையால் அவரது தாயார் திருமதி.பத்மாசினி விருதினை பெற்றுக் கொண்டார்.

சுதேசி நியூஸ் யு டியூட் சேனல்!

பெரியவாவின் ஆக்ஞைபடி ஆரம்பிக்கப்பட்டது தான் சுதேசி இதழ். தர்மத்தின் குரலாக போர் குரலாக இது ஒலிக்க வேண்டும் என்றே ‘பெரியவா’ 2010ம் ஆண்டு ஆசீர்வதித்தார்.
எட்டு வருடங்கள் பெரியவாளின் ஆசீர்வாதத்தால் மட்டுமே சுதேசி வளர்ந்தது என்று சொன்னால் மிகையில்லை.
இன்று நமது
ஸ்ரீ ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி பெரியாவின் ஆசீர்வாதத்தால் ‘சுதேசி நியூஸ்’ எனும் யு டியூப் சேனல் தொடங்கியுள்ளது என்பது மிகுந்த பொறுப்பையும், மகிழ்ச்சியையும் தருகிறது.

திரு.எச்.ராஜாவின் உரை!

கோயில்களை காப்பாற்றுவோம் என்ற ஒற்றை வரியில் அன்று சபையே கூடி நின்றது. எச்.ராஜாவின் பேச்சில் உள்ள தர்மத்தை நியாயமான வாதங்களை கேட்டு ஆர்பரித்தது.
மாறிவிடும் நமது மக்களின் மனநிலையை சுதேசி விருது விழா 2018 படம் பிடித்து காட்டியுள்ளது.
நமக்கு சுதேசி போன்ற உண்மையை கூறும் பத்திரிகைகள் இன்னும் ஒரு நூறு வேண்டும். ஆனால் நமது முதல் கடமை இப்போது இருக்கும் இந்த ‘ஒற்றை சுதேசியை’ காப்பாற்ற வேண்டியது தான் என திரு.எச்.ராஜா அவர்கள் சுதேசியின் வளர்ச்சிக்காக, அங்கு கூடியிருந்த மக்களிடம் கேட்டு கொண்டதற்கு சுதேசியின் குழுமம் என்றென்றும் நன்றி பாராட்டும்.
கூடியிருந்த மக்களின் பல கேள்விகளுக்கு பதிலளித்த திரு.எச்.ராஜா விழாவினை சுதேசி மனம் மகிழ நிறைவு செய்துவிட்டுத்தான் சென்றார் என்பது நெகிழ்ச்சி.

நடிகர் சிவாஜியுடன் மோத சிவகார்த்திகேயனா என்று ‘துபாய் தமிழ் குடும்பம்’ அமைப்புத் தலைவர் திரு.ரமணி அவர்கள் நகைச்சுவையுடன் பேச்சை துவக்கினார். திரு.எச்.ராஜாவின் எழுச்சி பேச்சிற்கு பிறகு பேசியதால் இந்த ஜோக் என்றும் கூறினார். ஆனாலும் அவரின் பேச்சில் பல தொழில் தியான கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்துரைத்தார். அவருக்கு சுதேசியின் நன்றிகள்.

காலை எழும்போது நமக்கு வெறும் பாலா அல்லது டிக்காஷன் கலந்த காபியா என்றே தெரியாத நிலையிலும் மக்கள், சமுதாயத்திற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைப்பதில்லை என்று கருத்தாழமான சிந்தனையுடன் தொடங்கிய திரு.பாலசுப்ரமணியன் அவர்கள், சமூகத்திற்கு கொடுத்து வாழ்வதே வாழ்க்கை என்று பல உதாரணங்களோடு பேசி மக்களை சிந்திக்க வைத்தார். அவருக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள்.

எப்படி வலிமையான ஒரு யானை சிறுவயது முதல் ஒரு சின்ன நூலால் கட்டுண்டு போகிறதோ, அதே போல அநீதிகளுக்கே பழகிவிட்ட நம் மக்கள் தர்மத்திற்கும், நேர்மைக்கும் போராட முன் வரும் வேளை வந்துவிட்டது என்று மக்களின் மனதில் தனது கருத்துக்களை ஆழபதியவிட்டார்
ஸ்ரீ மாதா கேன்சர்கேரின் தலைவர் திருமதி.விஜயஸ்ரீ மகாதேவன் அவர்கள். அவர்களுக்கு சுதேசியின் உணர்வு பூர்வமான நன்றிகள்.


இந்த விழாவினை சிறப்பாக நடத்திக் கொடுத்த அன்பு சகோதரி செல்வி கயல்விழிக்கும், எங்கள் சுதேசி பத்திரிகை குழுமத்திற்கும், ஆதரவு நல்கிய நல்லுள்ளங்களுக்கும் எப்போதும் உதவியாக விழாவினை சிறப்பாக செய்து காட்டும் அலுமினி கிளப் நிர்வாகத்திற்கும், எங்களுடன் முதலாம் ஆண்டிலிருந்தே பயணித்து வரும் சிட்டாடல் விடியோவிற்கும் எனது நெஞ்ச பூர்வமான நன்றிகள்.. வாழ்த்துக்கள்…

 

(Visited 34 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *