சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

சுதேசி விருதுகள் 2018 துருவா விருது பெறுபவர்கள்

வித்யாரம்பம் அறக்கட்டளை

கடந்த 2008ஆம் ஆண்டு முதல் சுனாமியால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் ‘‘The Rotary Central Vidyarambam Nursery and Primary School’’ என்ற பள்ளியைத் துவங்கி உயர்தர செய்முறைக் கல்வியை மீனவக் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கின்றனர்.
இது வரையில் 9,15,900 குழந்தை களின் கல்வியை மேம் படுத்தியதோடு, 6819 கிராமப்புற பெண்களுக்கு அவர்கள் சொந்த ஊரிலேயே பணியாற்றி மாற்றத்தின் சக்தியாய் விளங்க வாய்ப்பளித்துள்ள வித்யாரம்பம் அறக்கட்டளை நிர்வாகத்தின் நல்ல நோக்கங்கள் யாவும் நிறைவேற சுதேசி வாழ்த்துகிறது.

திரு.கிருஷ்ணமூர்த்தி ராஜயோகி

ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இலவசமாக டியூசன் வகுப்பிகள் எடுப்பதில் துவங்கி, இலவச மருத்துவ முகாம்கள் நடத்துவதோடு வறுமையில் வாடும் பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் இலவச தையல் பயிற்சி வகுப்புகள் நடத்துதல், சுற்றுச் சூழல் விழிப்புணர்வு, இலவச யோகா வகுப்புகள் என பல்வேறு சேவைகளைச் செய்து வருகிறார்.

அறம் வளர்த்த நாயகி

மனிதன் மனிதனாக வாழ வழிகாட்டும் இந்து மதத்தின் தார்மீகக் கொள்கைகளை பாதுகாப்பதும், பண்படுத்துவதுமே தங்கள் தலையாயக் கடமை என செயலாற்றும் அறம் வளர்த்த நாயகி அறக்கட்டளையின் உறுப்பினர்கள் அனைவரும் பூஜ்ய ஸ்ரீசுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களால் ஈர்க்கப்பட்டு பயிற்சி பெற்றோர் ஆவார்.
வேத ஆகமங்களைப் பின்பற்றி ப்ரத்யேக ஹோமங்களை நடத்துவதையும், ஹோமங்களுக்கான பயிற்சிகளையும் வழங்குகின்றனர்.

நம்ம ஊரு நட்ராஜ்

எல்லா வளமும் நம்ம ஊருக்கே என்று நற்காரியங்களை செய்து வரும் நம்ம ஊர் அமைப்பின் நிறுவனர்  திரு. நடராஜன் அவர்கள்.
இது வரையில் சுமார் 1000 வீடுகள், 5 பள்ளிகள், 2 திருக்கோவில்கள், 5 சமூக நலக்கூடங்கள் என அனைத்தை யும் பசுமை வளையத்திற்குள் கொண்டு வந்து குப்பைகளற்ற அதாவது ஞீணிஸிளி ZERO WASTE ZONE ஆக மாற்றியுள்ளார்.
மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இயற்கையோடு இணைந்த தூய்மையான சமூதாயக் கட்டமைப்பு உருவாக்குவதே இவ்வமைப்பின் உயரிய நோக்கமாகும்.

லிட் தி லைட்

கிடைக்கும் நேரத்தை கண் பார்வையற்ற மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் வண்ணம், தன்னார்வலர்களைக் கொண்டு பார்வையற்றோருக்காக தேர்வு எழுதுதல், பாடங்களை ஒலிப்பதிவு செய்தல், படிக்கும் அறைகள், சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் என சமூக வலைத்தளங்களின் மூலம் தமிழ் நாடெங்கும் சேவை செய்து வருகிறார்கள்.

தார்மீக சாதனா விருது பெறுபவர்

இவர் ‘‘ஒரு தெய்வம் தந்த ‘பூ’’
‘‘பூவுக்குள்ளும் பூகம்பம் வெடிக்கும் தென்றலும் புயலாக மாறும்’’
என்று பெண்களின் உரிமைப் போராளியாய், காக்கும் அரணாய் விளங்கும் வண்ணம் சமீபத்தில் ‘‘மீ டூ’’ மூலம் பெரும் புரட்சியை செய்த இவரது தன்னலமற்ற சேவையை பாராட்டும் வண்ணம் ‘‘சுதேசி தார்மீக சாதனா’’ விருதை திருமதி.சின்மயி அவர்களுக்கு வழங்கி சிறப்பித்தது. அவர் சார்பாக அவரது தாய் பெற்றுக் கொண்டார்

சக்தி சாதனா விருது பெறுபவர்கள்

திருமதி.விஜயா

திருமதி. விஜயா அவர்கள் கடந்த இருபது ஆண்டுகளாக கல்வி ஆலோசகராக பணியாற்றுவதோடு, குழந்தைகளுக்கான செயல்பாட்டு முறைக் கல்விக்கான பயிற்சி கருத்தரங்குகள் நடத்துவது, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சிகளை வழங்குவதோடு, குழந்தைகளின் வயதுக்கும் ஆற்றுலுக்கும் ஏற்றாற்போல் கல்வி போதிப்பதற்கான பிரத்யேக பாடத்திட்டத்தையே வடிவமைத்துள்ளார்.
“Blooming Buds Montessori Pre School” எனும் சிறுவர்களுக்கானப் பள்ளியை 1998ம் ஆண்டில் துவக்கியவர். திருமதி. விஜயா அவர்கள் பத்திரிக்கை ஆசிரியராகவும் வலம் வருகிறார். தேசிய வளர்ச்சிக் கழகத்தின் பாரத் சேவச் சமாஜ் அமைப்பில் கல்வி ஆலோசகராவும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் JAN SHIKSHAN SANSTHAN லும் பணியாற்றுகிறார். கல்வித்துறை சேவைக்காக பல விருதுகளைப் பெற்றிருக்கும் திருமதி. விஜயா அவர்களுக்கு ‘சக்தி சாதனா’ விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

திருமதி. ரேவதி ரகுநாதன்

அன்னதானம், வஸ்திரதானம், கல்விதானம், கல்யாணம் என எளியோரின் வாழ்வில் ஏற்றம் காண உதவும் ஸ்ரீராம் ராம் சேவா அறக்கட்டளையின் நிறுவனர் திருமதி. ரேவதி ரகுநாதன் அவர்கள் ‘‘ஆன்மீகம் மற்றும் சமூகத் தொண்டே’’ எங்கள் குறிக்கோள் என்கிறார்.
வருடத்திற்கு நான்கு திருக்கல்யாணங்கள் நடத்துவது, ஏழைப் பெண்களுக்கு திருமண உதவி செய்வது, கிழக்குத் தாம்பரத்தில் சுற்று வட்டாரம் பகுதிகளிலுள்ள பல ஏழை மாணவர்களுக்கு பள்ளிக் கட்டணம், இலவசமாக புத்தகங்கள், சீருடைகள் வழங்குதல் வேத பாடசாலைகளுக்கு உதவி வழங்குதல் என எண்ணற்ற உதவிகளை செய்து வருகிறது ஸ்ரீராம் ராம் சேவா அறக்கட்டளை.
கீதா உபச்சார வகுப்புகள், யோகா பயிற்சி வகுப்புகள், பஜனை வகுப்புகளும் நடத்தப்படுகிறது. ராம நாமம் ஒன்றே வெற்றிக்கான வழி என்றும் ராம் ராம் என சொல்வதன் மூலம் எதையும் அடையலாம் என்கிறார் திருமதி. ரேவதி ரகுநாதன்

திருமதி. கௌகர் அஜீஸ்

வாயில்லா ஜீவன்களுக்காகப் போராடி, அவைகளைக் கொலையிலிருந்துப் பாதுகாக்கும் ஈடிணையில்லாப் பணியை மேற்கொண்டு வரும் திருமதி. கௌகர் அஜீஸ் அவர்கள் ஜல்லிக்கட்டு காளைகளுக்காகப் போராடி வெற்றி பெற்றார்.
புளியந்தோப்பில் ஒரு தனியார் நிறுவனம் ஒரு மணி நேரத்தில் சுமார் 500 சிறிய விலங்குகளையும், 200 பெரிய விலங்குகளையும் கொன்று இறைச்சி ஏற்றுமதி செய்து வந்தது. அந்த தொழிற்சாலையை நிரந்தரமாக மூடச் செய்தது இவரது முக்கிய சாதனையாகும்.
மத்திய அரசின் கால்நடை அமைச்சகத்தின் கீழ் இயக்கி வரும் தேசிய கால்நடைகள் ஆணையத்தின் உறுப்பினரான திருமதி. கௌகர் அஜீஸ்..
விலங்குகள் கடத்தலைத் தடுப்பது, கார்கில் போரின் போது கால்நடைகளைப் பாதுகாத்தது, நாடெங்கிலும் பல்வேறு இறைச்சிக் கூடங்களை மூடச் செய்தது, நாய்களைப் பாதுகாப்பது என பல்வேறு சேவைகளை விலங்குகள் நலனுக்காக செய்து வருகிறார்.

திருமதி. ஞி. தனஸ்ரீ

ஊடகத்துறையில் தனிப்பெரும் சாதனைகளை நிகழ்த்தி வரும் திருமதி. தனஸ்ரீ அவர்கள் 2014ம் ஆண்டு
ஸ்ரீ CRS ATORS என்ற நிறுவனத்தை துவங்கி பின்னர் VSV Studio Pvt.Ltd என்ற பெயரில் 2016ம் ஆண்டில் தொழில் விரிவாக்கம் செய்தார். பல தொண்டு நிறுவனங்களுக்கு நிதி திரட்டும் பணியை ஊடகத்தின் மூலம் சேவையாக செய்து வருகிறார். மேலும் பிரத்யேகமாக பெண்களுக்காக மன உளைச்சலை குறைக்கும் விதமாகவும், உடலை கட்டுக் கோப்பாக வைத்திருப்பதற்கும் ஒரு நடன பயிற்சி பள்ளி தொடங்கி உள்ளார்
பல பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடத்தி வருவதோடு, பல்வேறு பரிமாணங்களில் தனது தடங்களைப் பதித்து வரும் திருமதி. தனஸ்ரீ அவர்களது பணி சிறக்க வாழ்த்துவதோடு ‘சக்தி சாதனா’ விருதை வழங்கி சிறப்பிப்பதில் சுதேசி பெருமகிழ்ச்சி அடைகிறது.

திருமதி.ராஜலஷ்மி

மீனவர்கள் மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான பயிற்சி வகுப்புகளை நடத்தியுள்ளார். சமீபகாலமாக டாக்டர். மனோரமா சேவை மையத்தோடு இணைந்து குழந்தைகள், திருநங்கைகள், HIV நோயால் பாதிக்கப்பட்டோர்களுக்கான நலப்பணிகளை மேற்கொண்டுள்ளார்.

சிரோன்மணி விருது பெறுபவர்

திருமதி. உமா ஆனந்த்

‘‘இறையருள் இன்றி இன்பம் இல்லை ‘‘ என்தை அனைவரும் அறிவோம். அவ்விறைவன் குடி கொண்டிருக்கும் ஆலயங்களைப் பாதுகாப்பது, நம் பாரம்பரிய ஆலயங்களின் உரிமைகளை மீட்கும் போராளியாய் இருந்து, உயர்நீதி மன்றத்திலும், உச்ச நீதி மன்றத்திலும் பல்வேறு வழக்குகளைத் தொடுத்து, அதில் வெற்றியும் கண்டு வரும் திருமதி. உமா ஆனந்த் அவர்கள்
‘‘Temple Worshippers Society’’ எனப்படும் ஹிந்து ஆலய மீட்பு இயக்கத்தின்
அங்கமாய் இருந்து கோயில் உரிமை மீட்புக்காக செயலாற்றி வருகின்றார்.

விசிஷ்டா விருது பெறுபவர்

திரு. கலிங்கா சீதாராமன்

ஏழை எளியோருக்கும், ஆதரவற்றோருக்கும் தாமாக முன்வந்து வாதாடி வழக்குகளை வென்று தரும் வழக்கறிஞர் திரு. கலிங்கா சீதாராமன் அவர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றுகிறார். நீதித்துறையில் சுமார் 22 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த இவர் இந்து ஆலயங்களின் உரிமைகளுக்காகவும் இந்து மதத்தின் மேன்மைக்காகவும் தன் துறை சார்ந்த சேவைகளைச் செய்து வருகிறார். பல்வேறு காரணங்களால் வீடுகளை இழந்த ஏழைகளுக்காக வழக்காடி அவர்களுக்கு அரசாங்கத்தால் வீடு வழங்கச் செய்தது இவரது சேவைகளுள் குறிப்பிடத்தக்கது.

ஸ்ரேஷ்டா விருது பெறுபவர்

திரு. திலிப்குமார் ஜோதிடர்

உங்கள் ஜாதகமே உங்களுடைய போன ஜென்மத்தின் ரிப்போர்ட் கார்டு தான் என்று நிரூபித்துக் கொண்டிருப்பவர் ஜோதிட வல்லுநர் திரு. திலிப் குமார் அவர்கள்.
‘‘அறிவியல் ஜோதிடர்’’ என அழைக்கப்படும் இவர் சிஃபி இணையதளத்தின் மூலமாக 20 ஆண்டுகளுக்கு முன் பிரபலம் ஆனார். இணைய தளங்களில் ஜோதிடத்தைப் பற்றிய பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி வருகிறார். இவரது ‘‘ASTRO DIARY’’ உலகப் பிரசித்தி பெற்று தனித்தன்மை வாய்ந்தது.

திரு.மகாதேவன்

இசையால் இன்புறச் செய்வதே ஒரு சேவைதான், தன் திறமையை தேசத்தின் நலனுக்காக, பொது நலனுக்காக பயன்படுத்தும் வண்ணம், குஜராத் பூகம்பத்தில் பாதிக்கப்பட்டோருக்கும், கார்கில் போரின் போதும், இசை நிகழ்ச்சிகளை நடத்தி நிதி திரட்டி வழங்கியவர். இவரது மனைவி டாக்டர் விஜயஸ்ரீ அவர்கள் நடத்தும் ஸ்ரீ மாதா கேன்சர் கேர் தொண்டு நிறுவனத்திற்கும் இசை நிகழ்ச்சிகள் மூலம் நிதி திரட்டி உதவி வருகிறார். இவரது சேவைகளை பாராட்டி சுதேசி ஸ்ரேஷ்டா விருதினை வழங்குகிறது.

திரு. பாசிடிவ் பெருமாள்

இணையம், தொழில் நுட்பம், வணிகம், டிஜிட்டல் மார்கெட்டிங் போன்ற பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்று விளங்கும் திரு. பெருமாள் அவர்கள். ‘‘பாடங்கள் வழங்கிடாத பாடங்கள்’’ என்ற தலைப்பில் தொழில் முனைவோருக்கும், இளைஞர்களுக்கும் தன்னம்பிக்கை ஊட்டும் பயிற்சிகளை இலவசமாக வழங்கி வருகிறார். இவர் 2020ம் ஆண்டிற்குள் 1 லட்சம் இளைஞர்களுக்கு, உதவ வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார்.

திரு.இளங்கோவன்

ஹிந்து முன்ணணி அமைப்பின் நகர்மன்ற தலைவராக இருந்து இளைஞர்களை வழி நடத்துதல், அன்னதானங்கள் வழங்குதல், சமூக வலையத் தளங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் உள்ளிட்டப் பணிகளை செவ்வனே செய்து வரும் திரு. இளங்கோவன் அவர்களின் தன்னலமற்ற சேவை பாராட்டுகுரியது.

தர்மோதாரண விருது பெறுபவர்

திரு.V.J. ராமன்

ஜோதிட சாஸ்திரத்தில் பெரும்புலமை பெற்று ‘‘ஆத்மார்த்த ஜோதிடர் ’’ என்று பெயர் பெற்ற
தேதியூர் V.J.ராமன் அவர்கள் ஒரு ஒய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி ஆவார். மனிதர்கள் எந்த நேரத்திலும் வாழ்வில் துன்புறக் கூடாது என்று வேண்டும் இவர், இலவசமாக ஜோதிடம் கூறுவதை சேவையாய் செய்து வருகிறார். ஜோதிட சாஸ்திரத்தைக் கற்றுத் தருவதிலும் வல்லவரான இவர் இணையத்திலும், பத்திரிகைகளிலும் பல ஜோதிட கட்டுரைகளை எழுதியுள்ளார். திரு. க்ஷி.யி.ராமன் அவர்கள் சேவைகள் சிறக்க வாழ்த்தி ‘‘தர்மோ தாரண’’ விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

யுவரத்னா விருது பெறுபவர்கள்

செல்வி.ஷ்ரத்தா ஸ்ரீதர்

கலையார்வம் மிகுதியால் 11 ஆண்டுகளாக குரு திருமதி. அஸ்வினி விசுவநாதன் அவர்களிடம் ‘கலாக்ஷேத்ரா’ நாட்டியக் கலையைப் பயின்று பல பரிசுகளை வென்றுள்ள செல்வி ஷ்ரத்தா ஸ்ரீதர் அவர்களுக்கு ‘யுவரத்னா’’ விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

செல்வி. தன்யா

தேவாரம் பாடும் குயில் தன்யா கர்நாடக இசை, சமஸ்கிருதம், கராத்தே என பல துறைகளில்
ஆர்வத்துடன் பயின்று வருவதை பாராட்டி ‘யுவரத்னா’ விருது வழங்கிச்
சிறப்பிக்கப்பட்டது.

திரு.பாரத் மாதா மோகன்

தெய்வ பக்தியும் தேச பக்தியும் இரு கண்கள் போன்று இன்றியமையாதது.
மாணவர்களிடம் தேசியத்தை வளர்க்கும் HINDUSTHAN SCOUTS AND GUIDES ன் தமிழ் மாநில ஆணையராகவும் Modi For PM அமைப்பின் தேசிய உறுப்பினராகவும், RSS அமைப்பில் 45 ஆண்டு காலமாக பணியாற்றுவதோடு பெண் குழந்தைகளை பாதுகாப்போம் பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் திட்டத்தின் கீழ் பெண்களுக்கான இலவச மார்பக புற்றுநோய் மூகாம்கள் நடத்துதல் உள்ளிட்ட சேவைகளை செய்து வருகிறார்.

டாக்டர்.சாந்தா ராமச்சந்திரன்

அமெரிக்காவின் ‘‘ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் மருந்தியல் துறையில் பட்டம் பெற்ற இவரும், குழந்தைகள் மருத்துவத்தில் பட்டம் பெற்ற இவரது கணவர் மறைந்த டாக்டர். ராமச்சந்திரன் அவர்களும் தாய்நாடு திரும்பி சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவ சேவையில் தங்களை அர்ப்ணித்துக் கொண்டனர். மருந்தியல் துறை இயக்குநராக பணி ஒய்வு பெற்ற டாக்டர். சாந்தா ராமச்சந்திரன் அவர்கள் பல ஆன்மீக சேவைகளில் ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.

திரு.கிருஷ்ணசுவாமி

மூன்றாம் தலைமுறை வழக்கறிஞரும், காஞ்சி சங்கர மடத்தின் சட்ட ஆலோசகருமான வழக்கறிஞர்  திரு. கிருஷ்ணசுவாமி அவர்கள் நீதித்துறையில் சுமார் 35 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர், மதுரை உயர்நீதி மன்ற வழக்கறிஞரான இவர் ஒரு விவசாயியும் கூட. பல்வேறு சேவைகளில் ஈடுபட்டு வரும் வழக்கறிஞர் திரு. கிருஷ்ணசுவாமி அவர்களுக்கு பெரியவாளின் கடினமான தருணங்களில் அவருடன் சிறையில் சிறப்பு அனுமதி பெற்று உடன் தங்கி சேவை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திரு. ரமேஷ் சேதுராமன்

மயிலை மாங்கொல்லையில் உள்ள கற்பக வல்லி வித்யாலயா பள்ளியில் ஏழை குழந்தைகளுக்காக சிறப்பான கணினி வகுப்பறையை
உருவாக்கித் தந்துள்ளார். இவரது தந்தையும் அவரது நண்பர்களும் இணைந்து நடத்தும் மடுவன்கரையிலுள்ள ஏழைகளுக்கான மருத்துவ மனைக்குத் தொடர்ந்து தனது ஆதரவை அளித்து வருகிறார். மேலும் சமூக அக்கறையோடு இவர் பிரசுரித்த ஒரு அறிக்கை WALMART நிறுவனம் இந்தியாவில் செய்யவிருந்த வியாபார விரிவாக்கத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வழிவகை செய்தது. தேசியம் மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்து பல விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகிறார். இவரது தொண்டு நிறுவனத்தின் மூலமாக பல சேவை உள்ளங்களுக்கு ஊக்கமும், பொருளுதவியும் கொடுத்து சமூக நலனுக்கு பெறும் பங்காற்றி வருகிறார். ஆலய பாதுகாப்பு இயக்கத்தின் முக்கிய தூணாக செயல்பட்டு வருகிறார். இவரின் சிறப்பான தொண்டுகளை பாராட்டி, சுதேசி சிரேஷ்டா விருதினை கொடுத்து மகிழ்கிறது.
தேசியமும், தெய்வீகமும் இணைந்த அவரது சேவை மென்மேலும் வளர்ந்திட சுதேசியின் வாழ்த்துக்கள்!

(Visited 56 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *