சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

சும்மா தானே இருக்க!

எல்லோரும் கூறுகின்ற இந்த வார்த்தையை இப்பொழுது குழந்தைகள் கூட சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க

நீ சும்மா தானமா இருக்க இது செஞ்சி குடுத்திடுமா…

எல்லாரும் சொல்றது போல ஒரு நாள் சும்மா இருந்தா என்னன்னு தோனுச்சு?வீட்டில் உள்ள அனைவரும் கிளம்பிட்டாங்க அவரவர்க்கு தேவையான உணவுகளை சமைத்து கொடுத்து வீட்டேன். இன்றைக்கு சும்மா இருப்போம் என்ன தான் ஆகும் பாப்போம்.மாலை கணவரும், பசங்களும் வீட்டிற்கு திரும்பினார்கள்.

மாலை வந்துவிட்டது!

அம்மா பசிக்குது மா எதாவது எடுத்துட்டு வா மா, எனக்கும் தலைவலிக்குது ஒரு காபி போட்டு தா டி, என்று சொல்லிக் கொண்டே உள்ள நுழைந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.வாசல் முழுவதும் குப்பையால் நிறைந்து இருக்கிறது. வீட்டின் உள்ளே சென்றால் காலையில் செல்லும் பொழுது இரைத்த பொருட்கள் எல்லாம் அனைத்தும் கிழே இருக்கின்றன.
காலையில் தொடைத்த ஈரமான துண்டுகள் அனைத்தும் நாற்காலியில் கூலமாக இருக்கிறது, ஷுபாலஷ் செய்யும் டப்பா திறந்தே இருக்கு, தலைக்கு தடவும் ஜெல்லும் ஓபன் பன்னி  இருக்கு. பசங்களுக்கும் ஒன்றும் புரியவில்லை அவர்கள் புத்தகங்கள் ஆங்காங்கே இருக்கிறது, விளையாட்டு பொருட்கள் இரைந்து கிடக்கின்றன. சீருடைகள் தோய்க்காமல் அப்படியே போடப்பட்ட இடத்தில் இருக்கின்றது.இவ எங்க தான் போனாள் சமையல் அறைக்குள் சென்று பார்த்தால், பாத்திரங்கள் கழுவாமல் நாற்றம் அடித்து கொண்டு இருக்கிறது.
எங்க தான் போனாலோ உடம்பு சரி இல்லையோ? ரூமிற்கு சென்றார்! இரவு உபயோகபடுத்திய தலையனை,போர்வை எல்லாம் மடித்து வைக்காமல் இரைந்து கிடக்கின்றன.சரி பாத்ரூமில் இருப்பாள் கதவு தட்டி பாக்கலாம்னு திறந்தா! காலையில் போட்ட சோப் டப்பா முழுவதும் தண்ணீரில் முழங்கி கரைந்து போய் தரை முழுவதும் கொழ கொழனு ஆகிடுச்சு, அழுக்கு துணிகள் அசிங்கமாய் தொங்கி கொண்டு இருந்தது.ஒன்றும் புரியாமல் பதற்றத்துடன் மாடியில் உள்ள அறைக்குள் சென்றார்கள்.

இது கனவா!

கையில் ஒரு நாவல் புத்தகம் நாற்காலியில் அமர்ந்து கொண்டு தேநீர் அருந்தி கொண்டு இருந்தாள். என்னடி ஆச்சு உனக்கு வீடு ஏன் இப்படி இருக்கு? அம்மா என்ன ஆச்சு மா உனக்கு? நீங்க எல்லோரும் தான் சொல்லிட்டு போனீங்கல்ல! வீட்ல சும்மா தான இருக்கன்னு… அதான் சும்மா இருக்கலாம்னு!
கணவனுக்கு தன் தவறு தெரிந்தது. இந்த வார்த்தையை சொல்வது தவறு. அவ எதுவும் செய்யவில்லை என்றால் வீடு வீடாகவே இருக்காது. என்னை மன்னித்து விடு என்று கூறினார்.
பிள்ளைகளும் தன் தவறை உணர்ந்து அம்மா மன்னிச்சிடு மா இனி அப்படி சொல்ல மாட்டோம். நீ இல்லைனா வீடு எப்படி இருக்கும்னு தெரிஞ்சுகிட்டோம்.நான் சொல்வதால் தான் என் பசங்களும் இந்த வார்த்தையை அவ கிட்ட சொல்லி கஷ்டபடுத்தறாங்கனு அவருக்கு புரிந்தது.இனி எப்பொழுதும் தன் மனைவியை பிள்ளைகளிடமோ, வெளி ஆட்களிடமூம் தாழ்த்தி பேசமாட்டேன் என்று மனதிற்குள் ஒரு முடிவு எடுத்தார்.

கூல் டவுன்!

நீ இங்கயே இரு நா போய் உனக்கு காபி போட்டு எடுத்துட்டு வரேன்னு கணவர் கிளம்பினார், பசங்களும் நாங்க உனக்கு ஸ்நாக்ஸ் எடுத்துட்டு வரோம் மா நீங்க வெயிட் பண்ணுங்கமா என்றனர். யாரும் எதுவும் செய்ய வேண்டாம் எல்லோரும். போய் டிவி பாருங்க நான் பத்து நிமிடத்தில் உங்களுக்கு கேசரி செய்து தரேன் சாப்பிடுங்க என்றாள் மனதில் சந்தோஷத்துடன்.
இது தான் அம்மாவின் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌குணம்.

(Visited 25 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *