சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

ஜரா சந்தனின் கூட்டணி… தர்ம போராளி எச்.ராஜாவின் நச்!

பிரதமர் மோடிக்கு எதிரான கூட்டணியில் இன்னும் ஒரு தலை தான் குறைகிறது. பத்து தலை ராவண அவதாரம் தான்!!!

எப்படியாவது ஊழல் இல்லா இந்தியாவை, உருவாக்கும் மோடியை அகற்ற வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளூர், அந்நிய தேசங்கள் என்று கண்ணில் படுவோரையெல்லாம் சேர்த்துக் கொண்டு கோஷம் போடுகின்றன…

குட்டி கதை

ஜரா சந்தன் கம்சனின் மாமா!! கிருஷ்ணர் கம்சனை வதம் செய்ததால் ஜராசந்தன் வன்மத்துடன் 17 முறை கிருஷ்ணரை கொல்ல வருபவர்களை கொன்று விடுவார். இதனை பார்த்த பலராமர், கிருஷ்ணா, ஏன் இந்த வீண் வேலை?? உன்னை கொல்ல வரும் இவர்களை கொல்வதற்கு பதிலாக, நீ ஏன் இவர்களை அனுப்பும் ஜராசந்தனை கொல்ல கூடாது என்று கேட்டார்.

அதற்கு மாய கிருஷ்ணர், ‘‘பலராமா எனது பகைவர்கள் யாரென்று கண்டுபிடிக்க நான் ஏன் அலைய வேண்டும் எனக்கு பதிலாக ஜராசந்தன் ஒய்வு ஒழிச்சல் இல்லாமல் எனது பகைவர்களை தேடி பிடித்து அனுப்பி வைக்கிறான்’’ என்றாராம்.

அது போல இந்த காங்கிரஸ் வகுத்துள்ள கூட்டணி சந்தர்ப்பவாத, ஊழல் அரசியல் வாதிகளால் உருவானது! அழிந்து போவது உறுதி.

கீதையில் கண்ணன் தர்மம் கெட்டு அதர்மம் ஒங்கும் போதும், அந்த அதர்மத்தை எதிர்த்து மக்கள் கொந்தளிப்பு எழுச்சி ஏற்படும் போதும், தர்மத்தை அவர்கள் பொருட்டு நான் காப்பாற்ற வருவேன் என்று கூறியிருக்கிறார்.

வரும் தேர்தலில் அதர்ம காங்கிரஸ்£ருக்கு சரியான பாடம் புகட்ட வேண்டி ஒவ்வொரு தேச பக்தரும் பிரதமர் மோடிக்கு ஆதரவு தேட வேண்டும் என்று பிரெண்ட்ஸ் ஆப் பிஜேபி கூட்டத்தில் பேசி பலத்த வரவேற்பு பெற்றார்.

(Visited 9 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *