சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

டை கட்டிக் கொள்வது உடல் நல கேடா?

கழுத்தை இறுக்கும் இந்த பட்டையை… சாரி.. இந்த ‘‘டை’’யை யார் கண்டு பிடித்தது

என்று காலையில் திட்டித்தீர்க்காத ஆண் ஆத்மாக்களே கிடையாது.

கீல் பல்கலைகழக ஆய்வாளர்கள் கூட இப்போது இந்த சலிப்பில் உண்மை உள்ளது என்கின்றனர். கழுத்தை நெருக்குவது போன்ற இந்த பட்டையை கட்டிக் கொள்வதால் ஏற்படும் தீமைகளை பட்டியிலிட்டுள்ளனர்.

மூளைக்கு ரத்தம் செல்லுவதில் தடை!

டை கட்டிக் கொள்வதால் மூளைக்கு செல்ல வேண்டிய ரத்தம் தடை படுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். 7.5% குறைவாகவே செல்கிறதாம்.
நமது கழுத்தின் இருபுறமும் உள்ள ‘‘கரோடிட் ரத்த குழாய்களை’’ இந்த ‘டை’ நெருக்குவதால் தான் இந்த ரத்த ஒட்டத்திற்கான தடை.

என்ன 7.5% தானே என்று அலட்சியபடுத்த முடியாது. உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள், புகை பிடிப்பவர்கள், வயதானவர்கள் இதனால் தலை சுற்றல், தலைவலி, லேசான வயிற்று குமட்டல் என்று அவதிபடலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

கண்களுக்கும் ஆபத்து!

தலைக்கு செல்லும் ரத்த ஒட்டத்தை ‘டை’ மட்டுப்படுத்துவதால், கண்களில் அழுத்தம் சற்று அதிகமாகலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதனால் ‘குளுகோமா’ எனும் கண் அழுத்த நோயால் பாதிக்கப் பட்டுள்ளவர்களுக்கு இது மேலும் பிரச்சினை கொடுக்கும்.

நேர் பார்வை!

டை கட்டிக் கொண்டு வேலை செய்பவர்களுக்கு 360% சுற்று பார்வை கிடைப்பதில்லை. இதனால் அவர்கள் கழுத்தை ஒடித்து பார்ப்பதால் கழுத்துவலி ஏற்படலாம்.
கீல் பல்கலைகழக ஆராய்ச்சியின் முடிவில், மருத்துவமனைகளில் பணி புரிபவர்களின் ‘டை’களில் பல கிருமிகள் தொற்றுவதால் அவை மிகவும் ஆபத்தானதாகிறது. எனவே டை கட்டுவதை இனி தவிர்ப்பது தான் உடல் நலத்திற்கு நலம் என்று ஆய்வறிக்கை சமர்பித்துள்ளனர்.

நமது கழுத்தின் இருபுறமும் உள்ள ‘‘கரோடிட் ரத்த குழாய்களை’’ இந்த ‘டை’ நெருக்குவதால் தான் இந்த ரத்த ஒட்டத்திற்கான தடை.

(Visited 4 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *