சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

திருநாவுக்கரசை தூக்கிட்டு கே.எஸ்.அழகிரியை நியமித்த காரணம்!

மூத்த தலைவர்கள் ராகுலிடம் கூறியதாக வந்த தகவல்…

நீண்ட காலமாக தமிழத்தில் காங்கிரஸ் தலையெடுக்க முடியவில்லை. ஆனால் பிஜேபி கணிசமாக வளர்ந்து விட்டது.

அதுவும் அமித் ஷா வந்து சில வழிமுறைகளை செய்யச் சொல்லி சென்றவுடன் தற் போதைய தொலைக்காட்சி கருத்துக் கணிப்பில் பிஜேபிக்கு 8 – 10% வாக்குகள் கிடைக்கும் என்று கூறுகிறது.

இந்த நிலையில் காங்கிரசும் வளர வேண்டும் என்றால் திமுக கூட்டணியில் உள்ள ஒரே பெரிய கட்சி காங்கிரஸ் தான். 1 % ஒட்டு கூட இல்லாத திருமா, வைகோ, கம்யூனிஸ்டுகளை வளர்த்து விட தயாரில்லை, இவர்களை வைத்துக் கொண்டு வலுவான அதிமுக, பிஜேபி, பாமக, தேமுதிக , கிருஷ்ணசாமி,கூட்டணியை எதிர்த்து ஒரு இடம் கூட வெல்ல முடியாது. அதனால் 20 21 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள இப்பவே நிறைய இடங்களில் போட்டி போடுவது அவசியம்.

அதனால் திமுகவை கழற்றி விட்டு அமமுக, காங்கிரஸ், கமலஹாசன் ஆகியோருடன் கூட்டணி வைத்து 20 இடங்களில் போட்டியிட்டால் அதில் ஒரிரு இடங்களில் வெற்றி பெற்றாலும், அது பெரும் வெற்றி தான் 2021 சட்டமன்றத் தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றி பெற்று கட்சியை பழைய படி வளர்க்கலாம் என்று எண்னுகிறது.

மேலும் இரண்டு பெரிய கட்சிகளில் திமுகவை ஒழிக்க இது நல்ல தருணம் என்று நினைக்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் இல்லையென்றால் திமுக செல்லாக் காசாகி விடும் என்றும் கருதுகிறது.

திமுக விரைவில் அரசியல் அனாதை ஆகிவிடும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு இடம் கூட கிடைக்காது. மறைமுகமாக காங்கிரஸ் மற்ற கட்சிகளுடன் பேச்சு வார்த்தை தொடங்கி விட்டதாக தகவல்.

(Visited 3 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *