சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

தீபாவளியை ஏன் கொண்டாடவே கூடாது… வண்டு முருகன்

தீபாவளிக்கு பட்டாசு விடக்கூடாது. அது சுற்றுப்புற காற்றை மாசு படுத்தும். அதன் சப்தம் நாய், பூனை, எலி, பூரான், தேள், பாம்பு.. டைனோசர் போன்ற விலங்குகளை பயப்பட வைக்கும். டைனோசர் இருந்திருந்தால் பயந்திருக்காதா..? அதனால்தான் லிஸ்டில் அதுவும்..

புது துணி போடவே கூடாது. எத்தனை பேர் துணியில்லாம் இல்லாமல் இந்தியாவில் இருக்கிறார்கள்.

இனிப்புகள் சாப்பிடுவது செய்வது மாபெறும் தவறு. இனிப்புகள் உடல் நலத்திற்கு தீங்கு செய்வது மட்டுமல்லாமல்.. அவை சர்க்கரை வியாதியை உருவாக்கி விடுகிறது. இதோடு எண்ணெய் பலகாரங்கள்.. கொழுப்பு தானாய் சேரும். இத்தனை இருந்தால் பீபி ஃப்ரீயாக வரும். தேவையா..? முடிந்தால் கேக் ஒரு பீஸ் சாப்பிடுங்கள். கிருஷ்ணா நெய் ஸ்வீட்ஸ் பார்ப்பனீயத்தின் உச்சம்.

அதிகாலையில் எழுந்து கொள்வது நல்லதுதான் என்றாலும்.. அரப்பு சீக்க்காய் கண்ணெரிச்சல் தரும். அதில் உள்ள நிக்கலோபகாட்டீன் எனும் வேதியல் பொருள் உங்கள் மூளையை மழுங்கடித்து.. கண்களை டிம் ஆக்கிவிடும் என்று நாசா விஞ்ஞானி அலெக்ஸான்டர் தீபோவிச் ஒரு அறிக்கையில் சொல்லியிருக்கிறார்.அதனால்தான் அமெரிக்காவில் இங்கிலாந்தில் ஆஸ்திரேலியாவில் ஏன் ஸ்ரீலங்காவில் கூட அரப்பு சீக்காய் கலந்து தேய்த்து அதிகாலையில் குளிப்பதே இல்லை.

இதற்காக எதற்கு சொந்த ஊருக்கு பயணம் செய்கிறீர்கள்.? அதிக செலவு.. பஸ்கள் ரயிலில் டிக்கட் எல்லாம் கிடைப்பதே இல்லை. தேவையில்லாத பயணம் இது. பெட்ரோல் விலை ஏறும். சுற்றுப்புற சூழல் நாசமாகும்.

நரகாசுரன் திராவிடன்.. அதனால் இது நமக்கு திவசம்.. திவசத்துக்கு இப்படி யாராவது கொண்டாடி பார்த்திருக்கிறீர்களா?

முடிந்தால்.. பிரியாணி சாப்பிடவும்.. மதச்சார்பற்ற உணர்வை தரும். இந்தியா மதசார்பற்ற நாடு.. இதெல்லாம் மீறி நீங்கள் மேலே சொன்னவற்றை செய்தால்.. கோர்ட்டுகள் தடை போடும்.. அப்புறம் ஜெயிலில் களி தின்று கொண்டாடலாம். எப்படி வசதி..?

அன்று கோவிலுக்கு போவது இதெல்லாத்தையும் விட தவறான ஒன்று.

ஹிந்து உணர்வு இருந்தாலே குற்றம் என்று கண்டு பிடிக்க கூடிய கருவியை டெஸ்ட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அது வந்த பின் நீதிமன்ற தீர்ப்பின் படி.. நடு ரோட்டில் போலீஸ் டெஸ்ட் பண்ணி ஜெயிலில் தள்ளலாம்.. சட்ட பிரிவு மறந்து விட்டது..
யுவர் ஹானர்…
உங்களுக்கு தெரியாத சட்டமில்லை..
நீதிபதி அவர்களே.. அதனால் தக்க தண்டனையை ஹிந்துக்களுக்கு தருமாரு…..

(Visited 22 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *