சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

துரோகம் என்பதின் மறுபெயர் வைகோ!

வாயால் வடை சுடுவோர் சங்கம்னு கேள்விப்பட்டு இருக்கீங்களா? அப்படியொன்று இல்லாவிட்டாலும், ஏறக்குறைய அதற்கு இணையாக செயல்படும் ஒரு கட்சி மதிமுக. அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ என்ற கோபால்சாமி வையாபுரியும் லேசுப்பட்டவர் அல்ல. சினிமாவில் பின்னணி பாடகர்கள் எல்லாம் தங்கள் இனிமையான குரல் வளத்தால் பிரபலமானால், நம்ம வைகோ அபாரமான வெண்கலக் குரலால் கணீர் கணீர் என்று கத்தி கத்தியே பிரபலமானார்.

கல்லூரி சாலையில்…

அவரது அதிர்ஷ்டம். அவரது அந்த கணீர் கத்தல்களே, அரசியல் களத்தில் அவர் செய்தத் தவறுகளை மக்களை மறக்கச் செய்தது என்பது நம்மில் பலருக்கும் தெரியாத விஷயம். பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரியில் படித்தபோதும், பின்னர் சென்னை பிரசிடென்சி கல்லூரி மற்றும் சட்டக் கல்லூரி என்று படிப்புகள் தொடர்ந்தபோதும், திராவிட இயக்கத்தின் மீது அபாரமான ஈர்ப்பு. சரளமான பேச்சும், கல்லூரிக் கல்வியும் மேடையில் வைகோவை பேச்சாளராக காண்பித்தது.

கருணாநிதியின் நிழல்!

திமுவில் துண்டு போட்டார். திமுக தலைவராக இருந்த கருணாநிதியின் நிழல்போல் தொடர்ந்தார். மிசா காலத்தில் 40 நாட்கள் சிறையில் இருந்தார். இதன் பின்னர் 1978ம் ஆண்டு திமுக சார்பில் ராஜ்யசபா உறுப்பினர் ஆனார். திமுகவில் கருணாநிதிக்கு அடுத்த இடத்தில் வளர்ந்ததால், கருணாநிதியின் மகன் ஸ்டாலினுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனால், 1993ம் ஆண்டில் கருணாநிதி ஒரு நாடகத்தை தொடங்கினார்.

கொலைப்பழி!

‘வைகோ விடுதலைப்புலிகள் உதவியுடன் என்னை கொல்ல சதி செய்கிறார்’ என்று பகிரங்க அறிவிப்பு வெளியிட்டார். தொடர்ந்து திமுகவில் இருந்து வைகோவுக்கு கல்தா கொடுக்கப்பட்டுது. திமுகவில் இருந்து வைகோ நீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நொச்சிப்பட்டி தண்டபாணி, இடிமழை உதயன், கோவை காமராஜபுரம் பாலன், மேலப்பாளையம் ஜஹாங்கீர், உப்பிலியாபுரம் வீரப்பன் என்ற 6 பேர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர்.

சாம்பல் மேல் சத்தியம்!

‘என் நலனுக்காக, என்னைத் திமுகவில் இருந்து நீக்கக் கூடாது என்று வலியுறுத்தி, தங்கள் உயிரை மாய்த்துக் கொண்ட 6 பேரின் சாம்பல் மீது சத்தியம் செய்கிறேன். திமுகவை வீழ்த்துவதே இனி என் வாழ்நாள் சபதம்’என்றார். அந்த சபதப்படி கம்யூனிஸ்ட் உட்பட பிற கட்சிகளுடன் இணைந்து அதிமுக கூட்டணியுடன் சிவகாசி தொகுதியில் எம்பியாக தேர்வு செய்யப்பட்டார்.

அன்பு தம்பியே வா!

ஆனால், 2000ம் ஆண்டு முதல் வைகோவை அரசியல் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. எந்தக் கருணாநிதியை எதிர்ப்பேன் என்றாறோ, அதே கருணாநிதி மீண்டும் வைகோவை அழைத்தார். அன்புத் தம்பி வா என்றதும், வேலூர் சிறையில் இருந்து விடுதலையான வைகோ, நேரடியாக கருணாநிதியை போய் பார்த்தார். இனி, கருணாநிதியுடன் இணைந்து பாஜவை எதிர்ப்பதுதான் என் முழு வேலை என்றார். அப்ப, தற்கொலை செய்து கொண்ட 6 பேரின் சாம்பல்..? அதைத்தான் நீரில் கரைச்சுட்டாரே. அப்புறம் எப்படி?

மீண்டும் ஒரே மேடையில்!

2004ம் ஆண்டு விருதுநகர் உசிலம்பட்டி அருகே திமுக ஒரு பிரமாண்ட மாநாடு நடத்தியது. அதில் தன் வாழ்நாள் சபதத்தை நிறைவேற்ற, திமுக தலைவர் கருணாநிதியுடன் மேடையேறினார். சிவகாசி தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், ரவிச்சந்திரனை அதில் வேட்பாளராக அறிவித்து, கட்சிப் பணியாற்ற ஒதுங்கிக் கொண்டார்.

காங்கிரஸ் கூட்டணி!

தொடர்ந்து, திமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் இடம் பெற்றிருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தார். 2009ம் ஆண்டு அவர் மிகவும் நேசித்த பிரபாகரன், உட்பட எல்டிடிஇ தலைவர்களை, இலங்கையில் நடைபெற்ற இறுதிகட்டப்போரில், ராணுவம் கொன்று குவித்தது. கொதித்துப் போனார் வைகோ? போரை நிறுத்த அண்ணன் கருணாநிதி உண்ணாவிரதம் இருந்தும், இப்படியொரு படு கொலையை செய்யச் சொன்னது யார்? சிதம்பரமா? சோனியாவா? அல்லது மன்மோகன் சிங்? சிவசங்கர் மேனன்? நாராயணன்? என்று பலரையும் உலுக்கினார்.

சபதம்!

நான் போறேன் என்று ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து கழன்று கொண்டார். இலங்கைத் தமிழர்களை மட்டுமின்றி, சென்னைக்கு சிகிச்சைக்கு வந்த பிரபாகரன் தாய் பார்வதி அம்மாவை விமானத்தில் இருந்து இறங்கவிடாமல் திருப்பிய கருணாநிதிக்கு பாடம் புகட்டுவேன் என்று புதிய சபதம் செய்தார்.
பாஜகவுடன் 2014 லோக்சபா தேர்தலில் பாஜவுடன் இணைந்தார். லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது தன்னிடம் மைக்கை நீட்டிய

‘நான் கூட்டணியில் இருக்குறனா? இல்லீயா?’ என்று கேட்டு, துரைமுருகனுடன் சிரித்துக் கொண்டே வெளியில் வந்தார். இதுதான் வைகோவின் அரசியல் நேர்மை. 6 பேரின் சாம்பலும், ஈழத் தமிழர்களின் கண்ணீரும், பார்வதி அம்மாளின் மரணமும், 2ஜி வழக்கு பணப் பரிமாற்றமும் வைகோவின் கண் முன் தெரியவில்லை.
அவரது பார்வை இப்போது மிகவும் துல்லியமாக உள்ளது.

நிருபர்களிடம், ‘‘திமுக தமிழர் விரோத கட்சி. இலங்கையில் கொத்து கொத்தாக தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது வேடிக்கைப் பார்த்தக் கட்சி. 2ஜி ஊழல் வழக்கில் பணம் எப்படி கை மாறியது? சாகித் பல்வா யார்? ஸ்டாலின் எப்படிப் பார்த்தார்? எத்தனை கோடி எங்கு கை மாறியது? இதெல்லாம் எனக்குத் தெரியும். ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் என் மீது வழக்குப் போடச் சொல்லுங்கள். கோர்ட்டில் சந்திக்கலாம். தமிழர் விரோத கட்சியான திமுக, காங்கிரசை ஒழிப்பேன்’’ என்று 1993 சபதத்தை ரீ வைண்ட் செய்து கொண்டார்.
சரி, அங்காவது ஒழுங்காக இருந்தாரா? தேர்தலில் தோல்வி அடைந்ததும், பிரதமர் மோடிக்கு எதிராக குரல் கொடுத்தார்.

பணத்தால் வீழ்ந்த வைகோ!

ஆஹா… வைகோ களம் இறங்கீட்டார்யா என்று பலரும் யோசித்த நேரத்தில், தேர்தல் தோல்வியும், பண மதிப்பிழப்பு உட்பட பல்வேறு நடவடிக்கைகளும் அவருக்கு குடைச்சலைக் கொடுத்தது. கண்மண் தெரியாமல் பாஜகவை எதிர்க்கத் தொடங்கிவிட்டார். 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜவை வீழ்த்துவோம் என்ற கோஷத்தை முன் வைத்து, மீண்டும் திமுகவின் கதவைத்தட்டினார்.

ஸ்டாலினுடன் நெருக்கம்!

கருணாநிதியின் இறப்புக்கு துக்கம் கேட்கச் சென்ற வைகோ, ஸ்டாலினுடன் நெருக்கத்தை வளர்த்துக் கொண்டார். இதற்கு புதிய விளக்கம் கொடுத்தார் துரைமுருகன். ‘‘ஒத்த கருத்து கொண்டவர்கள், பல கட்சியை சேர்ந்தவர்கள் எங்கள் கூட்டணிக்கு வருவார்கள், போவார்கள். அதெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. இப்போது திமுக,- மதிமுக, விசி கட்சிகள் ஒரே கூட்டணியில் இல்லை. நாங்கள் இப்போது மணமக்கள்தான், திருமணமாகிடவில்லை (இதுபோன்ற தத்துவங்களை துரைமுருகன் தான் சொல்ல முடியும்)’’ என்பு புதிய விளக்கம் கொடுத்தார்.

வைகோவின் தனி ஸ்டைல்!

அடுத்த சில நாட்களில் ஸ்டாலினை சந்தித்த வைகோ, ‘நான் கூட்டணியில் இருக்குறனா? இல்லீயா?’ என்று கேட்டு, துரைமுருகனுடன் சிரித்துக் கொண்டே வெளியில் வந்தார். இதுதான் வைகோவின் அரசியல் நேர்மை. 6 பேரின் சாம்பலும், ஈழத் தமிழர்களின் கண்ணீரும், பார்வதி அம்மாளின் மரணமும், 2ஜி வழக்கு பணப் பரிமாற்றமும் வைகோவின் கண் முன் தெரியவில்லை. அவரது பார்வை இப்போது மிகவும் துல்லியமாக உள்ளது.

தனக்கொரு நியாயமா?

அரசியல் மட்டுமல்ல, பொது வாழ்க்கையிலும் வைகோவின் நாக்கு இடத்துக்கு தகுந்தார்போல் தாண்டவமாடும். டாஸ்மாக் கடைகளை நொறுக்கிய வீரத்தை மீடியாக்களுக்கு முன்னர் பறைசாற்றிக் கொண்டிருந்தார். குறும்புக்கார நிருபர் ஒருவர், ‘என்ன சார் நீங்க, மதுவுக்கு எதிரா போராடுறீங்க. ஆனால், உங்க மகன் பிரபல சிகரெட் கம்பெயின் தென் மாவட்ட மொத்த விநியோகஸ்தர் உரிமை எடுத்திருக்காரே?’ என்றதும், வைகோ ருத்ர தாண்டவம் ஆடிவிட்டார். ‘மதுவை விட சிகரெட் அப்படியொன்றும் கெடுதியானது அல்ல’ என்று புதிய விளக்கமும் கொடுத்தார்.

இன்னும்…. இன்னும்…இன்னும் நிறைய சொல்லிக் கொண்டு போகலாம். பாவம் அவர் என்ன செய்வார். அரசியல்வாதி ஆகிற்றே… அதிலும் திராவிடப் பாரம்பரியம் கொண்டவரிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்.

(Visited 44 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *