
தெய்வத்தின் குரல்
எட்டு குணங்கள்
தயை, க்ஷாந்தி, அநஸூயை, சௌசம், அநாயாஸம், மங்களம், அகார்ப்பண்யம், அஸ்ப்ருஹா என்பவை அஷ்ட குணங்கள்.
‘தயை’
என்பது ஸர்வபூதங்களிடமும் அன்பு, அருளுடைமை. மநுஷ்ய வாழ்க்கையின் நிறைந்த பலன், பெரிய ஆனந்தம் அன்பு செய்வதுதான். அதுதான் அஸ்திவாரம், தீணீநீளீ-தீஷீஸீமீ (முதுகெலும்பு).
‘க்ஷாந்தி’
என்றால் பொறுத்துக் கொள்வது. நமக்கு வியாதி, விபத்து, தாரித்ரியம் முதலானவற்றால் உண்டாகிற கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வது ஒன்று. நமக்கு ஒருத்தர் கஷ்டத்தைக் கொடுக்கிறபோது அவரையும் மன்னித்து அன்பைக் காட்டுவது இன்னொரு விதப் பொறுமை.
‘அநஸூயை’
என்பது அத்ரி மஹரிஷியின் பத்னியான மஹா பதிவிரதையின் பேர் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அஸுயை இல்லாதவள் அநஸூயை. (அநுஸூயை என்று ‘நு’ போட்டுச் சொல்வது தப்பு.) நம்மைவிட ஒருத்தன் நல்ல நிலையில் இருந்தால் வயிற்றெரிச்சல் படக்கூடாது. பொறாமையின்மைதான் அநஸூயை.
முதலில் சொன்ன அன்பு எல்லாரிடமும்; இரண்டாவதாகச் சொன்ன பொறுமை தப்புப் பண்கிறவனிடம்; பொறாமையின்மை நம்மைவிட மேல் ஸ்தானத்திலிருக்கிறவனிடம். அவன் நம்மைக் காட்டிலும் யோக்யதையில் குறைந்தவனாக இருந்தாலும்கூட, நமக்குமேல் ஸ்தானத்துக்குப் போய்விட்டான் என்றால் அஸூயைப்படக் கூடாது. ‘பூர்வ ஜன்மாவில் நம்மைவிடப் புண்ணியம் பண்ணியிருப்பான். அதனால்தான் பகவான் அவனை உயர்த்தி வைத்திருக்கிறான்’ என்று மனஸைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.
சௌசம்
என்பது ‘சுசி’ என்பதை வைத்து ஏற்பட்டது. ‘சுசி’ என்றால் சுத்தம். ஸ்நானம், மடி வஸ்திரம், ஆஹார நிர்ணயம் முதலான ஆசாரங்கள் எல்லாம் ‘சௌசம்’ என்பதில் வரும். ‘சுத்தம் சுகம் தரும். சுத்தம் சோறு போடும்’ என்று பாமர ஜனங்களும் சொல்வார்கள். வெளியிலே நன்றாக சுத்தமாக இருக்கிறவனைப் பார்த்தாலே நம் மனஸுக்கும் சுத்தமாயிருக்கிறது.
ஸகல ஜனங்களுக்குமான ஐந்து தர்மங்களை மநு சொல்கிறபோதும் முதலில் அஹிம்ஸை, அப்புறம் ஸத்யம், அப்புறம் பிறர் பொருளில் ஆசையின்மை (அஸ்தேயம் – திருடாமலிருப்பது என்பது நேர் அர்த்தம்) என்ற மூன்றைச் சொல்லி, நாலாவதாக இந்த ‘சௌசம்’ என்பதையே சொல்கிறார். கடைசியாக இந்திரிய நிக்ரஹம் (புலனடக்கம்) என்பதைச் சொல்கிறார்.
‘அநாயாஸம்’
என்பது ஆத்ம குணங்களில் அடுத்தது. ஆயாஸத்துக்கு எதிர்ப்பதம் அநாயாஸம். ‘லைட்’டாக இருப்பது என்கிறார்களே அதுதான் அநாயாஸம். ஆயாஸம் இல்லாமல், அதாவது எதையுமே ஒரு சுமையாக எடுத்துக் கொண்டு கஷ்டப்படாமல், ‘லைட்’டாக, லேசாக இருப்பது அநாயாஸம். எப்போது பார்த்தாலும் ‘உர்’ரென்று இருந்து கொண்டு, வாழ்க்கையில் தனக்கு எல்லாம் கஷ்டம் என்று புலம்பிக் கொண்டு, நொந்து கொண்டு இல்லாமல், எதிலும் கடுமையாகச் செய்யாமல், நிம்மதியோடு லேசாகச் செய்யவேண்டும். இப்படிச் செய்வதாலேயே ஆயாஸப் பட்டுக்கொண்டு செய்வதைவிடப் பலமடங்கு வேலை செய்து விடலாம். பதட்டமில்லாமல் பண்ணுவது அநாயாஸம். பட பட என்று செய்தால் நம்மையும் நெரித்துக் கொண்டு மற்றவர்களையும் நெரிப்பதுதான் மிஞ்சுமே தவிரக் காரியம் ஸரியாக ஆகாது. அநாயாஸம் ஒரு பெரிய க்ஷிவீக்ஷீtuமீ (குணசீலம்). அலட்டிக் கொள்ளாமல் இருக்கிற குணம் அநாயாஸம். தானும் சிரமப்படாமல், மற்றவர்களையும் சிரமப்படுத்திக்கொண்டிராமல் இருப்பது அநாயாஸம். அநேக கர்மாநுஷ்டானங்களில் உடம்பால் சிரமப்படத்தான் வேண்டியிருக்கும். சிராத்தம் செய்வதென்றால் மத்யான்னம் இரண்டு மணி, மூன்று மணி வரை பட்டினி கிடக்கத்தான் வேண்டும். ஒரு யாகம் என்றால் அதில் இருக்கிற சரீர சிரமம் கொஞ்ச நஞ்சமில்லை; ஆகையால், இங்கே சிரமப்படக்கூடாது என்பது மனஸினால் சிரமப் படாமலிருப்பதைத்தான் குறிக்கும். எந்தக் காரியமானாலும் விக்கினங்கள் ஏதாவது வரத்தான் செய்யும். இதைப் பார்த்து மனஸை stக்ஷீணீவீஸீ பண்ணிக்கொள்ளக்கூடாது. எல்லாம் பகவான் திட்டப்படி நடக்கிறது என்று, மனஸிலே பாரமில்லாமல் இருக்கவேண்டும். ஸங்கீத வித்வான் அநாயாஸாமாக தாரஸ்தாயி பிடித்தார் என்றால் என்ன அர்த்தம்? சிரம ஸாத்யமானதையே ஸுலபமாக்கிக் கொண்டு விட்டார் என்றுதானே அர்த்தம்? சிரமமான வாழ்க்கையை அப்படிப் பண்ணிக்கொள்வதுதான் ‘அநாயாஸம்’.
‘மங்களம்’
என்றால் மங்களந்தான்! ஆனந்தமாக – அதிலேயே ஒரு கம்பீரத்தோடு தூய்மையோடு ஆனந்தமாக இருந்து கொண்டிருப்பதுதான் மங்களம். எதற்கெடுத்தாலும் எரிந்து விழுந்து கொண்டோ, மூக்கைச் சிந்திப் போட்டுக்கொண்டே இல்லாமல், ‘ஆஹா’ என்று எப்போதும் ஸந்தோஷமாக இருக்கவேண்டும். இதுதான் லோகத்துக்கு நாம் செய்கிற பெரிய ஒத்தாசை, பெரிய தொண்டு. பணத்தை வாரிக் கொடுப்பதை விட, வேறு ஸர்வீஸ்கள் பண்ணுவதை விட, நாம் போகிற இடமெல்லாம் நம் மங்களத்தாலேயே ஆனந்தத்தை உண்டாக்கிக் கொண்டிருப்பதுதான் மற்ற ஜீவர்களுக்குப் பெரிய தொண்டு. ‘லைட்’டாக, லேசாக எதையும் ஸாதிப்பது அநாயாஸம். போகிற இடமெல்லாம் நாமே ஒரு ‘லைட்’ (தீபம்) மாதிரி ஒளியை, ஆனந்தத்தைக் கொடுப்பது ‘மங்களம்’. நாம் ஒரு இடத்துக்குப் போனால் அங்கேயிருப்பவர்கள் ‘குற்றம் கண்டு பிடிக்க வந்துவிட்டான்’ என்று முகத்தைச் சுளிக்கும்படியாக இருக்கக் கூடாது. எங்கே நாம் போனாலும் அங்கே நல்ல தினுசான ஸந்தோஷத்தை விருத்தி பண்ணவேண்டும். நாமும் மங்களமாக இருந்து கொண்டு, பொங்கும் மங்களம் எங்கும் தங்குமாறும் செய்ய வேண்டும்.
‘அகார்ப்பண்யம்’
என்று அடுத்தது சொன்னேன். கிருபணனின் குணம் கார்ப்பண்யம். அப்படி இல்லாமலிருப்பது அகார்ப்பண்யம். கிருபணன் என்றால் லோபி. லோபித்தனம், கருமித்தனம் இல்லாமல் தான தர்ம சிந்தையோடு இருப்பது அகார்ப்பண்யம். மனஸார வாரிக் கொடுக்கிற குணம் வேண்டும்.
அர்ஜுனன் ரொம்பவும் பீமீழீமீநீtமீபீ -ஆக, பீமீஜீக்ஷீமீssமீபீ -ஆக மனம் தளர்ந்து தேர்த்தட்டிலே உட்கார்ந்து, ‘யுத்தம் பண்ண மாட்டேன்’ என்று அழுதபோது அவனுக்கு ‘கார்ப்பண்ய தோஷம்’ ஏற்பட்டதாக கீதையில் சொல்லியிருக்கிறது. அந்த இடத்தில் ‘தன்னையே ரொம்பவும் தாழ்த்திக் கொண்டு தீனமாகப் போய் விட்டவன்’ என்று அர்த்தம். தன் விஷயத்திலேயே தான் லோபியாகி விட்டான் என்று அர்த்தம். அகார்ப்பண்யம் என்றால் இப்படி தீனனாக, நோஞ்சானாக, கையாலாகாதவனாக இல்லாமல் தீரனாக, நல்ல உத்ஸாஹ புருஷனாக, மனஸ்வியாக இருப்பது என்றாகும்.