சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

நடுவக்குறிச்சி ஸ்ரீதேவி பூதேவி ஸ்மேத ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் பிப்ரவரி–&10, 2019, ஞாயிறு

450 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயிலின் கும்பாபிஷேகத்தில் பங்குபெற அன்புடன் அழைக்கிறோம்!

அமைவிடம்

450 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோயில், திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள நடுவக்குறிச்சி பகுதியில் அமைந்துள்ளது.
இக்கோவிலில், முதன்மைக் கடவுளாக விஷ்ணு பகவான், ஸ்ரீ வீரராகவப் பெருமாள் என்ற பெயரில் மூலவராக ஸ்ரீதேவி, பூதேவி இருவருடன் காட்சி தருகிறார்.

பெருமை

ஆரம்பத்தில் இக்கோயில் சிறிய அளவில்தான் இருந்தது. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன், இந்த பகுதியைச் சேர்ந்த வணிகர் ஒருவர், வெளிநாடுகளில் வாணிபம் செய்து வந்தார். அங்கிருந்து கப்பல்கள் மூலம் தூத்துக்குடி துறைமுகத்துக்கு எண்ணெய் கொண்டு வந்து இங்கு வியாபாரம் செய்வார். அதேபோல், இங்கிருந்து பல பொருட்களை வெளிநாடுளுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்வார்.

நல்லபடியாக போய்க்கொண்டிருந்த வியாபாரத்தில் தொய்வு ஏற்பட்டது. நொடிந்து விடும் நிலைக்கு வந்தார். கடைசி முயற்சியாக, தன்னிடம் இருந்த அத்தனை பொருட்களையும் விற்று அந்த பணத்தைக் கொண்டு வியாபாரம் செய்ய வெளிநாட்டுக்கு கிளம்பினார்.

கிளம்புவதற்கு முன் ஸ்ரீவீர ராகவப் பெருமாள் சன்னதிக்கு சென்று, பெருமாளுடன் ஒரு ஒப்பந்தம் செய்தார். அதாவது, இந்த முறை வெளிநாட்டுக்கு சென்று வணிகம் செய்வதன் மூலம் கிடைக்கும் லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை, பெருமாளுக்கு தருவதாக, பெருமாள் விக்ரகம் முன்பு சூடம் ஏந்தி சத்தியம் செய்து வேண்டிக் கொண்டார்.

தன் கையிருப்பு முழுவதையும் செலவிட்டு, வெளிநாட்டில் இருந்து எண்ணெய் பீப்பாய்களை வாங்கிக் கொண்டு தூத்துக்குடி துறைமுகம் வந்து இறங்கினார்.

அருகில் இருந்த கிடங்கில் உள்ள ஒரு இடத்தில் அத்தனை பீப்பாய்களையும் பாதுகாப்பாக வைத்து விட்டு, அதை விற்பனை செய்யும் ஏற்பாடுகளை செய்ய தொடங்கினார்.

ஆனால், அவர் எதிர்பார்த்த விலையில் எண்ணெய் பீப்பாய்களை வாங்க ஆளில்லை.மனம் நொந்த அந்த வணிகர், ஸ்ரீ வீர ராகவப் பெருமாளிடம் கண்ணீர் விட்டு பிரார்த்தனை செய்தார். அன்றிரவு அங்கேயே தூங்கிவிட்டார்.

அவரது கனவில் தரிசனம் தந்த பெருமாள், எண்ணெய் கிடங்குக்கு சென்று பார்க்கும்படி கட்டளையிட்டார். தூக்கம் கலைந்து எழுந்த அந்த வணிகர், விடியாத வேளையில் எண்ணெய் கிடங்குக்கு போய் பார்த்தபோது அவருக்கு ஆச்சரியம் காத்திருந்தது.

பீப்பாயில் இருந்து எண்ணெய்கள் நெய்யாக மாறி இருந்தது. அப்போது நெய்க்கு கடும் கிராக்கி இருந்ததால், அவர் நெய்யை வாங்க வியாபாரிகள் போட்டி போட்டனர். இந்த ஒரு வியாபாரத்தில் அவருக்கு பல மடங்கு லாபம் கிடைத்தது. இழந்த அத்தனை சொத்துக்களையும் அவர் மீட்டார்.

எல்லாம் ஸ்ரீ வீர ராகவப் பெருமாளின் கருணை என்று ஆனந்த கண்ணீர் வடித்த அவர், சொன்ன வாக்கை காப்பாற்றும் வகையில் குறிப்பிட்ட சதவீதத்தை பெருமாளுக்காக ஒதுக்கினார். சிறிய அளவில் இருந்த கோயிலை, 1935ம் ஆண்டு பெரிய அளவில் விரிவுபடுத்தினார். மிகப்பெரிய அளவில் கும்பாபிஷேகத்தையும் நடத்தினார்.

கோயிலில் உள்ள விக்ரகங்கள்

ஸ்ரீ வீர ராகவ பெருமாள், ஸ்ரீதேவி மற்றும் பூதேவி, ஆஞ்சநேயர், விநாயகர், மூலவரைப் பார்த்தபடி கருடன்.

விசேஷ பிரார்த்தனைகள்

இக்கோயிலுக்கு செல்வம் வேண்டுவோர், குழந்தை வரம் வேண்டுபவர்கள், மனம் சஞ்சலம் உள்ளவர்கள், திருமணம் ஆகாதவர்கள் வந்து பக்தியுடன் பிரார்த்தனை செய்தால் நினைத்தது நடக்கும்.

2018ல் சம்ப்ரோக்ஷணம்

மிகவும் பழமை வாய்ந்த இக்கோயிலின் சம்ப்ரோக்ஷணம் வருகிற 2018ல் பெரிய அளவில் நடக்க இருக்கிறது. இதற்காக பக்தர்களிடம் இருந்து காணிக்கைகளை எதிர்நோக்கி இருக்கின்றனர் இக்கோயிலின் நிர்வாகத்தினர். -கும்பாபிஷேகத்திற்கு மொத்தம் சுமார் 40 லட்ச ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.

கும்பாபிஷேகத்துக்கு நன்கொடை கொடுக்க விரும்புகிறவர்கள் “SUBAM” என்ற பெயரில் காசோலையாகவோ, டிடியாகவோ அனுப்பலாம்.

புண்ணியத்தை சம்பாதியுங்கள்

கோயில் சம்ப்ரோக்ஷணம், திருப்பணி போன்ற காரியங்ளுக்கு நம்மால் என்ன கொடுக்க முடியுமோ அதை கொடுத்து, புண்ணியத்தை சம்பாதித்துக் கொள்ள வேண்டும்.

பூஜை அல்லது கும்பாபிஷேகம் ஆகியவற்றை முன் நின்று நடத்துபவர்களை விட, அதற்கு உதவி செய்பவர்களுக்கு புண்ணியம் அதிகம்.

நம்முடைய தர்மமாக, ஒரு செங்கல் கொடுத்தாலும், அந்த செங்கல், அந்த ஆலயத்தில், எத்தனை வருஷங்கள் உள்ளதோ, அத்தனை ஆயிரம் வருஷங்கள் கைலாசத்திலோ, வைகுண்டத்திலோ வாசம் செய்யலாம் என்கின்றன நம் வேதங்கள்.

இயன்றதைக் கொடுத்து இறைபொருளாக்கி கொள்ள வேண்டுகிறோம்

இங்ஙனம்

R.S. ரமணி

மற்றும் கோயில் நிர்வாகத்தினர்.

(Visited 35 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *