சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

நம் கண்களுக்கு தெரியாத தேச விரோதிகள்!

யார் இவர்கள்!

Urban என்ற வார்த்தையைக் கேட்டவுடன் தடுமாறுபவர்களை கவனித்துப் பார்த்தல் தெரியும், அவர்கள் அரசியல்வாதிகள் அல்ல, பெரும்பாலும் எழுத்தாளர்கள், சினிமாக்கார்கள் மற்றும் சில படைப்பாளிகள்!
‘‘இடது சாரிக் கொள்கை உடையவர்களை எல்லாம்Urban Naxal என்று அழைப்பதா?’’ என்று தற்போது கேள்வி எழுப்பப் படுகிறது.

Urban Naxal என்று இதுவரை எந்த இடதுசாரி அரசியல்வாதியும் குறிப்படப்படவில்லை. சிறிமி, சிறிமிவி  CPI, CPIM கட்சி சார்ந்தவர்களை எல்லாம் Urban Naxal என்று எங்கேயும் யாரும் குறிப்பிட்டுப் பார்த்திருக்கக் மாட்டோம், இது Urban Naxalece  செய்யும் திசை-திருப்பலுக்கான தவறான பிரச்சாரம்.

மூளை சலவை!

Urban Naxal என்பவர் தேசத்தின் கண்ணுக்குத் தெரியாத எதிரி! ஒரு Urban Naxal நேரடியாக ஆயுதம் தூக்குவதில்லை, ஆனால் தங்கள் எழுத்துக்களால், audio / video க்களால், தங்கள் பிரசங்கங்களால் மற்றவரை மூளைச் சலவை செய்து, அவர்களை ஆயுதம் தூக்கவைக்க முயற்சிப்பார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை, இவர்கள் intellectuals எனும் போர்வையில் மறைந்து இருக்கிறார்கள்!

அறிவு ஜீவிகள்!

இந்த so-called intellectuals, நகரங்களில் நம்முடன் வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் நலன், நசுக்கப்பட்டவர்கள் நலன், பெண்ணியம், தலித்தியம் என்றெலாம் பேசுவார்கள். நம் பார்வைக்கு அவர் ‘‘அறிவார்ந்தவர்’’ என்கிற பிம்பத்திற்குள் இருப்பார். அவர் செய்யும் நக்சலிசம் திரைமறையில் இருக்கும்.

ஆறு அம்ச திட்டம்…

பொதுவாக குழுக்களாக செயல்படுவார்கள். அவர்களுக்கு ஆறு அம்ச திட்டம் ஒன்று உண்டு – அதன் பெயர் SAAR – RC:
survey awareness, Agitation, Recruitment, Resistance, Contorl

செயல்பாடு எப்படி?

முதலில் Survey எடுப்பார்கள் – நாட்டின் எந்தப் பகுதியில் அரசின் மீது அதிருப்தி இருக்கிறது, தூண்டிவிட்டால் எங்கே ஒரு எழுச்சி (Upraise) உண்டாகும் போன்ற பீணீtணீக்களை சேகரித்து, எப்படி எல்லாம் அரசிற்கு எதிராக பிரச்சாரம் செய்யலாம் என்று திட்டமிடுவார்கள்.

அந்த மாதிரிப் பகுதிகளில் சென்று மக்களுக்கு விழிப்புணர்வு (Awareness) உண்டாக்குகிறேன் என்று பிரச்சாரத்தை துவக்குவார்த்கள். பிரச்சாரத்தில் மேலே சொன்ன ஒடுக்கப்பட்டவர்கள் நலன், நசுக்கப்பட்டவர்கள் நலன், பெண்ணியம், தலித்தியம் எல்லாம் இருக்கும், மக்கள் எதையுமே அனுபவிக்கவில்லை, அனைத்திலும் அரசால் ஏமாற்றப் படுகிறார்கள், அவர்களிடம் அரசு கொள்ளை அடிக்கிறது போன்ற பிரச்சாரங்கள் அதிகம் இருக்கும். அப்போது, அவர்கள் குழுவில் இருப்பவர்கள் அப்பகுதிப் பிரச்சனைகள் பற்றி பத்திரிக்கைகளிலும் எழுதுவார்கள். அந்த பகுதியில் மட்டும் அல்லாமல், நகரங்களில் audio / video க்களால் விஷயத்தைப் பரப்பி ஆதரவு பெறுவார்கள்.

ஓரளவு ஆதரவு கிடைத்தவுடன் போராட்டம் / கிளர்ச்சி (Agitation) செய்ய சூழலை ஏற்படுத்துவார்கள். இந்த கிளர்ச்சியில் நகரத்து வாழ் ஆதரவாளர்கள், மற்றும் அந்த so-called intellectuals கலந்து கொள்ள மாட்டார்கள், ஆனால் அந்த போராட்டம் / கிளர்ச்சி பற்றி பத்தி-பத்தியாக பத்திரிக்கைகளில் எழுதித் தள்ளுவார்கள்,audio / video க்கள் வெளிவரும்! அவை மீண்டும் பிரச்சாரத்திற்கு உதவும்!

ஊடகங்களின் ஆதரவு!

(இவ்வாறு இவர்கள் எழுதுவதை பரப்பவே, பத்திரிகைத் துறை, சினிமாத்துறை மட்டுமல்லாமல், அரசுத் துறை மற்றும் நீதித் துறையில் முன்பு தங்களுக்கு ஆதரவு பெற முயன்றார்கள். நாற்பது வருடங்களுக்கு முன் இது அவர்களுக்கு கஷ்டமாக இருந்தது, அவ்வகை எழுத்துக்கு ஆதரவு தர பல பத்திரிக்கைகள் தயங்கின. இந்திரா காந்தி நாட்டில் அவசரநிலையை பிரகடனப்படுத்தினார். அவசரநிலை என்பது ஜனநாயகத்தில் ஏற்கமுடியாத சூழல் என்பதால் அனைத்து பத்திரிக்கைகள் மட்டுமல்ல, அனைத்து துறைகளும் அதனை எதிர்த்தன, ஒவ்வொரு குடிமகனும் எதிர்த்தான். இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட Urban Naxal கள், தங்கள் எழுத்துக்கள் மூலம் பத்திரிகைத் துறையில் அதிக ஆதரவு பெற்றார்கள். சிறிது-சிறிதாக உள்ளே நுழைந்து, தற்போது பெரும்பாலான பத்திரிக்கைகள் இப்போது அவர்கள் கையில்தான். இந்த விஷயத்தில் அவர்களின் நாடு தழுவிய Coordinated approach பாராட்டுக் குறியதே!)

தேச விரோத செயல்களுக்கு ஆள் சேர்ப்பு!

கிளர்ச்சிகளுக்குப் பிறகே அவர்களின் முழுச் செயற்பாடுகளும் முடுக்கி விடப்படும், முதலில் ஆட்சேர்ப்பு (Recruitment). மாதாந்திர ஊதியம் வழங்கப்படுவதாக மேற்கு-வங்கத்தில் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்ற வாக்குமூலம் தந்திருக்கிறார்கள் (போலீஸ் தரப்பில் வாங்கப்பட்ட வாக்குமூலங்களை ஏற்க வேண்டியதில்லை). இதற்கான பணம் பெரும் வழிகள் பல உண்டு, அதனைப் பற்றி தனி புத்தகமே போடலாம்!

அரசியலுக்கு எதிராக போராட்டம்!

தகுதியான ஆட்கள் சேந்ததும், சரியாக திட்டமிட்டு, அரசுடன் மோதுவார்த்கள் (Resistance). ஆயுதப் போராட்டம் தீவிரம் அடையும் போது, மக்கள் ஆதரவு அவர்கள் பக்கம் இருப்பின், அந்த பகுதியை நக்சல் கட்டுப்பாட்டிற்கு (Control) கொண்டுவந்து விடுவார்கள். அந்தப் பகுதி ஏதோ தனி நாடு போல் செயல்படும்.

கம்யூனிஸம்!

Naxalit மீகளின் எண்ணம், சில தீவிர கம்யுனிச கோட்பாடுகளை செயற்படுத்த வேண்டும் என்பதே. கம்யுனிசம் என்பது இறந்துவிட்ட சித்தாந்தம், அதனை தூக்கிப் பிடிக்க நினைத்து அவர்களுக்கு நகரத்து வாழ் ‘‘அறிவார்ந்தோர்’’ சிலர் முடிவெடுத்து செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். Naxalite களை உருவாக்குபவர்கள் தான் இந்த Urban Naxal கள். இவர்களுக்கு தேவையானதை அவர்கள் செய்து கொடுப்பார்கள். அவரளுக்கு ஆட்சேர்ப்பு முதல் பல வணிக விஷயங்களை இவர்கள் செய்து கொடுப்பார்கள்.

இந்தியாவில் இருக்கும் அதீத சுதந்திரம் இவர்களுக்கு உதவுகிறது. Too Much of freedom is undesirable என்பதற்கான நல்ல எடுத்துக்காட்டு இந்தியாதான்!

மோடி எதிர்ப்பு போர்வையில்!

Urban Naxal களின் கொள்கை இந்திய ஒருங்கிணைப்பினை எதிர்ப்பது! இப்போது இந்த Urban Naxal கள் கையில் எடுத்திருப்பது மோடி எதிர்ப்பின் மூலம் இந்திய எதிர்ப்பு. மோடி என்கிற அரசியல்வாதியையும், அவர் சார்ந்திருக்கும் கோட்பாடுகளையும் முன்வைத்து இந்திய எதிர்ப்பினை எவ்வாறெல்லாம் எடுத்துச் செல்ல முடியுமோ, அவ்வாறெல்லாம் செய்கிறார்கள்.
ஜனநாயக ரீதியில் மோடியை எதிர்ப்பது தவறல்ல, அவரின் நிர்வாகத் தோல்விகளை முன்வைத்து செய்யப்படும் பிரச்சாரத்திற்கும், அவரை முன்வைத்து செய்யப்படும் இந்திய எதிர்ப்புப் பிரச்சாரத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் பார்த்துக் கொள்வதிலும் இந்த Urban Naxal கள் நன்றாகவே செயல்படுகிரார்கள்.

இந்திய மக்கள் இவர்களது இந்திய நாட்டுக்கு செய்துவரும் துரோகத்தை புரிந்து கொண்டு இவர்களை எடுக்க வேண்டும்.

(Visited 19 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *