
நாட்டு மாட்டை காக்க வேண்டியதின் அவசிய கணக்கு!
நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பதுக்கு ஒரு நாள் (காபி, டீ, தயிர், மோர், நெய், வெண்ணெய்) வாங்க பால் வாங்கும் செலவு குறைந்தபட்சம் 50 ரூபாய் ஆகிறது என வைத்துக்கொள்வோம்.
இந்தியாவில் 125 கோடி மக்களுக்கு தோராயமாக 30 கோடி குடும்பம் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.
ஒரு குடும்பம் ஒரு நாள் பால் வாங்குவதற்கு ரூபாய் 50 செலவு செய்தால் இந்தியா முழுவதும் உள்ள முப்பது கோடி குடும்பங்களுக்கு ஒரு நாள் பால் வாங்க செலவு : 50 * 30,00,00,000 = 15,000,000,000 (பதினைந்தாயிரம் கோடி) ரூபாய் செலவாகிறது. (இது குடும்பங்களுக்கு மட்டுமே – மொத்த கொள்முதல் செய்யும் சிற்றுண்டி, ஹோட்டல், திருமணம், விழாக்களை சேர்த்தால் இந்த தொகை இன்னும் அதிகம்) .
ஒரு நாளைக்கு பதினைந்தாயிரம் கோடி ரூபாய் பால் வாங்க செலவு என்றால், வருடம் முழுவதும் பால் வாங்க ஆகும் செலவு :
365 நாட்கள் ஜ் 15,000,000,000 = 5,475,000,000,000.
கிட்டத்தட்ட ஐந்தரை லட்சம் கோடி ரூபாய் செலவு செய்கிறோம் – இந்தியாவில் உள்ள 125 கோடி மக்களுக்கு பால் வாங்க ஒரு வருடத்திற்கு ஆகும் செலவு ஐந்தரை லட்சம் கோடி ரூபாய்.
இதில் 60% சதவீத மார்கெட்டை அந்நிய நிறுவனங்கள் (coco cola, Pepsi, etc) பால் விற்கும் தொழில் செய்தால் ஒரு வருடத்திற்கு குறைந்தபட்சம் மூன்று லட்சம் கோடி ரூபாய் அந்நிய நிறுவனங்களுக்கு செல்லும்.
பால் விற்பதின் மூலம் மட்டுமே மூன்று லட்சம் கோடி ரூபாய் சம்பாதிக்கவே அந்நிய நிறுவனங்கள் இந்தியாவின் நாட்டு மாடுகளை அழிக்க அத்தனை வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறது.
ஆனால் அந்நிய நிறுவனங்கள் 60% மார்கெட் மூலம் ஒரு வருடத்திற்கு குறைந்தபட்சம் மூன்று லட்சம் கோடி சம்பாதிக்கும்.
எதிர்காலம் முழுவதுக்கும் எத்தனை லட்சம் கோடி என்பதை நீங்களே கணக்கு போட்டு கொள்ளுங்கள்.
இவ்வளவு வருமானம் வரக்கூடிய தொழிலை தன் வசப்படுத்தவே அந்நிய நிறுவனங்கள் இங்கே உள்ள அரசியல்வாதிகளின் துணையோடு நாட்டு மாடுகளை அழிக்க இவ்வளவு தூரம் தீவிர முயற்சி எடுக்கிறது.
அந்நிய நிறுவனம் விக்கும் பாக்கட் பால் ஒன்றும் தூய்மையான பால் இல்லை, அந்த பாலின் மூலம் மட்டுமே அவர்கள் விரும்பும் எந்த நோயையும் இந்தியாவில் பரப்பி, அதற்கான மருந்தை அவர்களே விற்பதின் மூலம் இன்னும் பல லட்சம் கோடி சம்பாதிக்க முடியும்.
நாட்டு மாடு அழிவதால் பாதிக்கப்படும் விவசாயத்தின் மூலம் இன்னும் பல லட்சம் கோடி சம்பாதிக்க முடியும்.
இப்பொழுது புரிகிறதா அந்நிய நிறுவனங்களின் சதி?
இன்னைக்கு கிடைக்கும் ஐநூறு கோடி, ஆயிரம் கோடிக்காக இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகள் தெரிந்தோ, தெரியாமலோ ஒட்டு மொத்த இந்தியா வின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிக் கொண்டிருக் கிறார்கள்.