சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

நேஷனல் ஹெரால்ட் மோசடி!

நம்மால் இப்படி ‘‘ரூம்’’ போட்டு யோசித்து, ஒரு பைசா செலவில்லாமல், 5000 கோடி சொத்தை அடைய முடியுமா?

நேஷனல் ஹெரால்ட், 1930-வாக்கில் நேருவால் ஆரம்பிக்கப் பட்ட ஒரு பத்திரிகை.

நாளடைவில் இதற்கு 5000 கோடி ரூபாய் பெறுமானமுள்ள நிலங்களும், கட்டிடங்களும், இதர சொத்துக்களும், சேர்ந்து விட்டன. எல்லாம் நேருவின் காங்கிரஸ் அரசால் இனாமாக கொடுக்கப்பட்டது.

2000-ல், இதற்கு 90 கோடி ரூபாய் கடன் இருப்பதாக அறிவிக்கப் பட்டது.

இதன் இயக்குநர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் மோதிலால் வோரா ஆகியோர்கள் தான்.

கடன் ஆனதால், நேஷனல் ஹெரால்டை, யங் இந்தியா என்னும் நிறுவனத்துக்கு விற்க, மேற்கண்ட இயக்குநர்கள் முடிவு செய்தனர்.

இதில் மகா கேவலம் என்னவென்றால், யங் இந்தியா லிமிடெட் நிறுவனத்துக்கும் இயக்குநர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மோதிலால் வோரா மற்றும் ஆஸ்கார் பெர்னாண்டஸ் ஆகியோரே!

யங் இந்தியா லிமிடெட், நேஷனல் ஹெரால்டின் 90 கோடி கடனைத் தீர்ப்பது என்றும், அதற்கு ஈடாக நேஷனல் ஹெரால்டின் 5000 கோடி சொத்துக்களை யங் இந்தியாவுக்குத் தாரை வார்ப்பதாகவும் தான் ஒப்பந்தம்.

இந்த ஒப்பந்தத்தை யங் இந்தியாவுக்காக அதன் இயக்குநர் மோதிலால் வோராவே, நேஷனல் ஹெரால்ட் இயக்குநர் மோதிலால் வோராவுடன் செய்து கொண்டது தான் வேடிக்கை. (சிரியுங்கள்…)

யங் இந்தியா, கடன் 90 கோடியை அடைக்க, காங்கிரஸ் கட்சியிடம் கடன் கேட்கிறது. இதற்காக நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் சோனியா, ராகுல், மோதிலால் வோரா, ஆஸ்கார் பெர்னாண்டஸ் ஆகியோரே (!!!) கலந்து கொள்கின்றனர்.

மோதிலால் வோரா தான் காங்கிரஸுக்கும் பொருளாளர். அவர் காங்கிரஸ் பொருளாளராக இருந்து 90 கோடிக் கடனை யங் இந்தியாவுக்குக் கொடுத்து, அவரே யங் இந்தியாவுக்காக அதனைப் பெற்று, நேஷனல் ஹெரால்ட் இயக்குநர் மோதிலால் வோராவிடம் கொடுக்கிறார். (மறுபடியும் சிரியுங்கள்)

மறுநாள், சோனியா, ராகுல், மோதிலால் வோரா, ஆஸ்கார் பெர்னாண்டஸ் கலந்து கொண்ட காங்கிரஸ் கூட்டத்தில், நேஷனல் ஹெரால்ட் தேச விடுதலைக்கு (!!!) செய்துள்ள சேவைக்குப் பரிசாக, அது கொடுக்க வேண்டிய 90 கோடி கடனை ரத்து செய்வதாக தெரிவிக்கப் படுகிறது!

இப்போது, நேஷனல் ஹெரால்டின் கடன் அடைந்து விட்டது. அதன் 5000 கோடி சொத்து யங் இந்தியா லிமிடெட்க்கு சேர்ந்து விட்டது.

சரி! யங் இந்தியாவின் 36% பங்கு சோனியாவுக்கும், 36% பங்கு ராகுல் காந்திக்கும்
மீதமுள்ள 28% பங்கு, மோதிலால் வோராவுக்கும், ஆஸ்கர் பெர்னாண்டஸுக்கும் சொந்தம்.

எனவே, 5000 கோடி சொத்து அலுங்காமல், குலுங்காமல், இவர்கள் கைக்கு வந்து விட்டது.

டில்லியில் பகதூர் ஷா ஸஃபர் மார்கில் உள்ள 11 மாடி கட்டிடம் ஒரு காலத்தில் நேஷனல் ஹெரால்டுக்கு சொந்தம்.

இப்போது, அது இவர்களது யங் இந்தியா கைக்கு வந்து விட்டது. இதில் தான் பாஸ்போர்ட் அலுவலகமும், வேறு சில அலுவலகங்களும் இருக்கின்றன.

நம்மால் இப்படி ‘‘ரூம்’’ போட்டு யோசித்து, ஒரு பைசா செலவில்லாமல், 5000 கோடி சொத்தை அடைய முடியுமா?

நீதிமன்றம் இரண்டு
வார அவகாசம்
கொடுத்து, நேஷனல்
ஹெரால்ட்க்கு சொந்தமான
கட்டிடத்தை விட்டு வெளியேற அம்மாவிற்கும், பிள்ளைக்கும் கெடு விதித்துள்ளது. சுப்ரமணியசாமிக்கு கடைசியில் வெற்றி. இந்த வழக்கில் சோனியா தப்புவது கஷ்டம்.
ஏனென்றால் மெகா ஊழல் ராணி சோனியா தன் திருக்கரத்தால் இதில் மட்டுமே கையெழுத்து போட்டிருக்கிறார்
என்கிறார் ஸ்வாமி!

(Visited 28 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *