சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

பாமக தொண்டனின் பதிலடி!

டாக்டர் ராமதாஸுக்கு வெட்கம் இல்லை, சூடு இல்லை, சொரணை இல்லை என ஆம்பூரில் இன்று மு.க. ஸ்டாலின்…

கூறியதற்கு பா.ம.க தொண்டனின் பதிலடி!

உன் அப்பன் கருணாநிதி 3 மனைவிகளை கட்டி கொண்ட போது உனக்கு வெட்கமாக இல்லையா…?

மதுரை விமான நிலையத்துக்கு முன் னாள் பிரதமர் அன்னை இந்திரா காந்தி வந்த போது “கருப்பு கொடி’’ காட்டுகிறோம் என சொல்லிவிட்டு செருப்பும், ஆசிட் முட்டையும் வீசி, கொலை வெறி தாக்குதல் நடத்தி விட்டு, அடுத்த தேர்தலில் “நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சியை தருக’’ என சொன்ன போது உங்களுக்கு வெட்கமில்லையா.?

வாழ வழி இல்லாமல் போன உன் அண்ணன் மு.க.முத்து அ.தி.மு.க.பொது செயலாளர் ஜெயலலிதாவிடம் கையேந்தி பணம் வாங்கிய போது உனக்கு சூடு இல்லையா..?

வை.கோபாலசாமியால் உயிருக்கு ஆபத்து என கட்சியில் இருந்து நீக்கி விட்டு, அதே வைகோவின் கட்சியான ம.தி.மு.க.வுடன் தேர்தல் கூட்டணி வைத்த போது உங்களுக்கு சூடு இல்லையா.?

அ.தி.மு.க.கூட்டணியில் போட்டியிட்ட திருமாவளவ னோடு, அடுத்து வந்த தேர்தலில் கூட்டணி அமைத்த போது உனக்கு வெட்கமில்லையா?

உலக மகா ஊழலில் உன் தங்கை “திகார்’’ சிறைக்கு சென்றது உனக்கு வெட்கமில்லையா..?

சொந்த அண்ணன் அழகிரிக்கே பதவி கொடுக்காதவன், என்பதை நினைத்து பார்க்கும் போது உனக்கு வெட்க மில்லையா..?

2009 நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க – பா.ம.க. கூட்டணி தோற்றது என கூறும் நீ உன் கட்சி அடுத்த வந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோற்ற போது உனக்கு சொரணை இல்லையா..?

அதே தேர்தலில் அ.தி.மு.க.37 இடங்களிலும், பா.ம.க.தர்மபுரியிலும், பா.ஜ.க.கன்னியாகுமரியிலும் ஜெயித்ததை நினைத்து பார்க்கும் போது உனக்கு வெட்கமில்லையா..?

பண்டாரம் பரதேசிகளோடு கூட்டு சேர மாட்டோம்
என பா.ஜ.க.வை விமர் சனம் செய்து விட்டு, மத்திய அமைச்சர் பதவிக்காக “பல் இளித்து’’ கொண்டு கூட்டணி வைத்த போது உங்களுக்கு சொரணை இல்லையா…?

அண்மையில் நடந்த ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் “குக்கர் தினகரனிடம்’’ கூனிக்குறுகி டெபாசிட் இழந்தது உங்களுக்கு வெட்கமில்லையா.?

எங்களுக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை இருக்கிறது? எங்களுக்கு தி.மு.க.காரன் ஓட்டு தேவையில்லை? உனக்கு இது மூன்றும் இருந்தால் ராமதாஸ் சாதிக்காரன் ஓட்டு எனக்கு தேவை இல்லை என்று சொல்வாயா?

(Visited 11 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *