சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

பிணராயி விஜயனுக்கு நெருக்கடி!

மத்திய அரசை நெருங்கும் சர்ச் நிர்வாகம்!

இந்தியாவில் இந்து மதம் வளர்ந்த கேரளாவில், இன்றைக்கு இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதைவிட, அங்கே கிறிஸ்தவமும், இஸ்லாமும் திட்டமிட்டே அபாரமாக வளர்த்தெடுக்கப்பட்டன என்பதே உண்மை. இந்த வகையில் 1599ம் ஆண்டில் எர்ணாகுளம் மாவட்டம் உதயம்பெரூர் என்ற இடத்தில் ஒரு சர்ச் கட்டப்பட்டது. இந்த சர்ச் நிர்வாகத்தின் மீது மலங்கரா மலங்கரா ஆர்த்தோடக்ஸ் கிறிஸ்தவர்களுக்கும், ஜாக்கோபைட் சிரியன் கிறிஸ்தவர்களுக்கும் இடையே பல அறிவிக்கப்படாத யுத்தங்கள், தாக்குதல்கள் நடைபெற்றது. சண்டை, சமாதானம், இணைப்பு என்று இருந்தாலும், 1910ம் ஆண்டில் மீண்டும் ஒரு பிளவு ஏற்பட்டது.

இதன்பின்னர் 1934ம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டு சேர்ந்தனர். கோட்டயம் பசிலியோஸ் கீவர்கீஸ் என்பவர் பிஷப் ஆனார். மீண்டும், 1974ம் ஆண்டு மீண்டும் இரு பிரிவினர் மோதினர். இதனால், 1995ம் ஆண்டு இப்பிரச்னை சுப்ரீம் கோர்ட் படியேறியது. இதன்படி, 1934ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தம் செல்லும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவுப்படி சர்ச் நிர்வாகம், ஆர்தோடக்ஸ் பிரிவினரின் கீழ் வரும். ஆனாலும், 2002ம் ஆண்டு முதல், இரண்டு பிரிவினரும் கடுமையான மோதல்களில் ஈடுபட்டனர்.

இதனால், மோதல்களைத் தவிர்க்கும் வகையில் பல ஆண்டுகளாக சர்ச்சுகள் மூடப்பட்டன. மறுபடியும் இந்தப் பிரச்னை சுப்ரீம் கோர்ட சென்றது. 2017 ம் ஆண்டு ஜூலை மாதம் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவில், ‘‘ஆயிரத்து 100 சர்ச்கள் நிர்வாகம் ஆர்தோடக்ஸ் சர்ச் நிர்வாகத்தின் கீழ் வர வேண்டும்’’ என்றது. இந்த உத்தரவை ஜாகோபைட் சிரியன் சர்ச் ஆதரவாளர்கள் ஏற்க மறுக்கின்றனர். குறிப்பாக, எர்ணாகுளம் மாவட்டத்தில் பிரவம் என்ற இடத்தில் உள்ள பழைமையான செயின்ட் மேரி சர்ச் தங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கும் என்கின்றனர்.
சுப்ரீம் கோர்ட் உத்தரவுவை அமல்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி ஜாக்கோபைட் கிறிஸ்தவர்கள் ஒரு லட்சம் பேர் பேரணி நடத்தினர். இதனால், பயந்துபோன கேரள அரசு சர்ச் உத்தரவை நிறைவேற்றுவதற்கு சுப்ரீம் கோர்ட் கால நிர்ணயம் செய்து நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று கெஞ்சியது. சுப்ரீம் கோர்ட் உத்தரவை நிறைவேற்றக் கூறி ஆர்த்தோடக்ஸ் நிர்வாகத்தினர், கடந்த நவம்பர் 29ம் தேதி கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இதன் பின்னர் ஆர்த்தோடக்ஸ் சர்ச் நிர்வாகத்தினர் கேரள அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘‘சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி ஆயிரத்து 100 சர்ச் நிர்வாகங்கள் தங்கள் வசம் வருவதற்கு கேரள அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், தாங்கள் இந்த உத்தரவை அமல்படுத்துவதற்காக மத்திய அரசின் உதவியை நாடுவதற்குத் தயாராக உள்ளதாக’’ குறிப்பிட்டுள்ளனர்.

கேரளாவின் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அவசர கோலத்தில் பிறப்பித்த உத்தரவை, சீராய்வு செய்யாமல் அதை நிறைவேற்றுவதற்கு அவசம் காண்பித்துவந்த பிணராயி விஜயன் அரசுக்கு, இப்போது சர்ச் நிர்வாகத்தின் கடிதம் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டுவது போலாகிவிட்டது.
இதைத்தான் தன் வினை தன்னைச் சுடும்னு நம்ம முன்னோர்கள் சொல்லி வெச்சாங்கய்யா.

(Visited 22 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *