சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

பிரதமர் மோடி குறித்து பிரணாப் முகர்ஜி சொன்ன வியப்பூட்டும் தகவல்!

காங்கிரஸின் மூத்த தலைவர், முன்னால் குடியரசு தலைவராகிய பிரணாப் முகர்ஜியிடம் பிரதமர் மோடி குறித்து கேள்வி கேட்டது.

‘‘நீங்கள் (பிரணாப்) மத்திய அமைச்சராக இருந்த போது குஜராத் முதல்வராக மோடி இருந்தார். அடுத்து நீங்கள் குடியரசுத் தலைவராக இருந்த போது மோடி பிரதமராக இருந்தார். இந்த இரண்டு மோடியின் செயல்பாடுகளை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்; தவிர, இப்போது நீங்கள் சாதாரண மனிதராக இருக்கும் நிலையில் பிரதமராக மோடியின் செயல்பாடு எப்படி இருக்கிறது.’’

இதுதான் கேள்வி.

‘‘முதல்வராக, பிரதமராக, மோடியிடம் வித்தியாசம் ஏதும் இல்லை. முதல்வராக இருக்கும் போது மாநில வளர்ச்சிக்கு பாடுபட்டார். இப்போது இந்திய வளர்ச்சிக்கு கடுமையாக உழைக்கிறார்.

நான் மத்திய அமைச்சராக இருந்த பொழுது எனக்கு மிகவும் பிடித்த முதல்வராக மோடியே இருந்தார். காரணம் அவரிடம் எதையும் ஒருமுறை சொன்னால் போதும். உடனே அதை புரிந்து கொண்டுவிடுவார்.

குஜராத் வளர்ச்சிக்கு மத்திய அரசிடம் போராடி பல்வேறு திட்டங்களுக்கான தொகையை வாங்குவார்.

எந்த ஒரு திட்டம் குறித்தும் மிகத் தெளிவாக தெரிந்து வைத்திருப்பார். தவிர, அவரிடம் எந்த துறையைப் பற்றியும் பேசலாம்; விவாதிக்கலாம். அவ்வளவு தெளிவானவர்.

எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. முதல்வராக இருந்தவர் எப்படி பிரதமராக செயல்படுவார் என்று. ஆனால் பிரதமாக அவரது செயல்பாடுகள் என்னை பிரமிக்க வைத்தது. எனக்கு தெரிந்து இந்திரா காந்திக்கு பிறகு திறமையான பிரதமர் மோடிதான்.

இவரது வெற்றியின் ரகசியங்கள் எனப் பார்த்தால் இவரது மிகக் கடுமையான உழைப்பு. ஒரு நாளில் 16 மணி நேரம் வரை உழைக்கிறார்.
அதைவிட முக்கியம் தான் என்ன செய்யப் போகிறேன் என்பதை மக்களிடத்தில் தெளிவாக பேசுவது மட்டுமல்லாமல் அவர்களுக்கு புரிய வைக்கிறார்.
திட்டங்களை அறிவிப்பதோடு இல்லாமல் அது நிறைவேறும் வரை கடுமையாக உழைக்கிறார். சில கட்சிகள் திட்டம் சிறப்பாக போடும். ஆனால் செயல்படுத்தாது (இவர் காங்கிரசை சொல்கிறார் போலும்).

மோடியின் வெளியுறவு கொள்கை என்னை பிரமிக்க வைத்தது. வலிமையான சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளை மிக எளிதாக சமாளித்தார். அதே நேரம் அமெரிக்கா, ரஷ்யா இருநாடுகளுடன் நல்ல நட்பு வைத்துள்ளார்.

மோடியின் வெளியுறவு கொள்கை என்னை பிரமிக்க வைத்தது. வலிமையான சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளை மிக எளிதாக சமாளித்தார். அதே நேரம் அமெரிக்கா, ரஷ்யா இருநாடுகளுடன் நல்ல நட்பு வைத்துள்ளார்.

அண்டைநாடுகள், ஆசிய, ஆப்ரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று அதிக முதலீடுகளை இந்தியா கொண்டு வந்தார். இந்தியாவில் இப்போது வரலாறு காணாத வகையில் அந்நிய முதலீடுகள் உள்ளது. இவரது மேக் இந்தியா, டிஜிட்டல் இந்தியா திட்டங்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. மின்சார உற்பத்தியில் இந்தியா 100 சதவீதம் முழுமை பெற் றுள்ளது.

இவர் கொண்டு வந்த திட்டங்களில் எனக்கு மிகவும் பிடித்தது பண இழப்பு மற்றும் ஜி. எஸ்.டி. இந்திய பொருளாதாரத்தில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தயது. இந்த இரண்டு திட்டத்திற்கும் சர்வதேச அளவிலும் மக்கள் அளவிலும் கடும் எதிர்ப்பு இருந்தது. ஆனால் எதிர்ப்பை மீறி துணிச்சலாக செயல்பட்டு இன்று உலக நாடுகளை இந்தியா பக்கம் திரும்ப செய்துவிட்டார். மோடியுடன் நான் பணியாற்றிய காலம் பொற்காலம்.

இவர் அடுத்த முறையும் பிரதமராக தொடர்ந்தால் இந்தியா வல்லரசு ஆகும் என்பதில் சந்தேகமில்லை. நாட்டிற்கு கிடைத்த மிக நல்ல பிரதமர் மோடி. அவர் அதிக ஆயுளுடன் இருக்க பிரார்த்தனை செய்கிறேன்.’’
இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.
ஏன் மோடி தான் வேண்டும் என்பதற்கு
இதை விட ஒரு விளக்கம் தேவையா?

(Visited 19 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *