சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

பிரியமுள்ள வாசகர்களே…

சுதேசி இதழ் மலர்ந்து எட்டாவது வருடம் பிறக்க உள்ளது என்பதை உங்களோடு பகிர்ந்து களிப்புறுகிறேன்.
சுதேசியின் வாசகர்கள் பலர் தற்போது எங்களிடம் ஒரு உறுதி பத்திரம் கேட்டு வாங்கி கொள்கிறார்கள்!!
நாங்கள் அரசியல் பகடைகாய்களாக உருமாறி, சனாதன தர்மத்திற்கு எதிரான ஒரு வார்த்தையை கூட எழுத மாட்டோம் என்று கைப்பட நான் எழுதி கொடுத்துள்ளேன் என்பதையும் அதே உவகையுடனும், உற்சாகத்துடனும் உங்களுக்கு தெரியபடுத்துகிறேன்.
ஆழ்வார்களும் நாயன்மார்களும் அவதரித்த நாடு தமிழ்நாடு.
ஆன்மீக இந்தியாவின் இதயம் தமிழ்நாடு என்றால் சற்றும் மிகையில்லை. பாடல் பெற்ற திருத்தலங்கள் 183 இல் 176 தமிழ் நாட்டில் தான் உள்ளது.
ஆனால் இன்று ‘நான் இந்து’ என்று சொல்லவே தயங்க வேண்டிய நிலை உள்ளது. 4 லட்சத்தி 85 ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்கள் திராவிட அரசியல் வாதிகள் அரசு அதிகாரிகள் எனும் போர்வையில் உள்ள கொள்ளையர்களிடம் சிக்கி சீரழிந்து வருகிறது.
கோயில் சொத்துக்களான பொன்னும், நிலமும், உண்டியல் பணமும் நம்மை அழிக்கப் பார்க்கும் திராவிட சக்திகளிடம் சிக்கியுள்ளது!! இன்னுமா உறக்கம் எம் சொந்தங்களே!!!
சட்டப்படியான நமது போராட்டம் தொடரட்டும்! மக்களிடையே கொண்டு சென்றால் மட்டுமே இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்பதே சுதேசியின் கருத்து.
அந்த விழிப்புணர்வை கொண்டு செல்லவே ‘சுதேசி’ மலர்ந்துள்ளது.
நம் இந்தியாவின் பெருமைகளை, நமது உண்மையான சரித்திரத்தை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே சுதேசியின் உத்வேகம்.
சுதேசி என்பது ஒரு இதழ் மட்டுமல்ல… சுதேசி ஒர் இயக்கமும் கூட…
விழிப்புணர்வு பல்கி பெருக ஆதரவு தருமாறு உங்களை அன்போடும், உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் வட்டத்தில் உள்ளவர்களிடம் சுதேசியை அறிமுகம் செய்து சந்தாதாரர் ஆக்கும் உதவியை கோருகிறேன்.
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய நம் தமிழ் மண்ணில் மீண்டும் தெய்வீகம் தழைக்க இன்றே சபதம் எடுப்போம். கோயில் சொத்துக்களை மீட்டெடுப்போம்.

 

 

 

பிரியமுடன்
உங்கள் சகோதரி
பத்மினி ரவிசந்திரன்

சுதேசி மாத இதழ் சந்தாதாரர் ஆக…
சந்தா 2 வருடம் – 500
சந்தா 4 வருடம் – 1000
ஆயுள் சந்தா – 5000

விவரங்களுக்கு: சுதேசி, எண்.15, 6வது குறுக்கு தெரு, கற்பகம் கார்டன், அடையாறு சென்னை-600020. 9500 127706 / 044 48645965

(Visited 24 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *