சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

பெட்ரோலுக்கு எதிர்கட்சிகள் கேட்கும் ஜிஎஸ்டி பாதுகாப்பு!

இந்தியாவின் மறு கட்டமைப்புக்காக பிரதமர் மோடி எந்தளவுக்கு ரிஸ்க் எடுக்கிறார் என்று நேர்மையான குடிமகன்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதுஇல்லை. இந்த வகையில் இந்தியா முழுவதும் ஒரே வரிமுறையை அறிமுகம் செய்யும் வகையில் ஜிஎஸ்டி என்ற புதிய வரிக் கட்டமைப்பை அறிமுகம் செய்து, அதை இன்று வரை வெற்றிகரமான ஒருத்திட்டமாக சாதித்துக் காண்பித்ததில் மோடியின் மனபலமும், உறுதியும் எதிர்கட்சிகளையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

எதிர்த்த எதிர்கட்சிகள்!

கடந்த 2017ம் ஆண்டில் ஜிஎஸ்டி வரியை அறிமுகம் செய்து பாராளுமன்றத்தில் மோடியும், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும் பேசியபோது, இதைக் கண்டித்து காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளிநடப்பு செய்தன. மம்தா பானர்ஜி ஒருபடி மேலே போய், என் மாநிலத்தில் ஜிஎஸ்டியை அனுமதிக்கமாட்டேன் என்று ஆர்ப்பாட்டம் செய்தார்.

எளிமையாக்கிய மத்திய அரசு

அத்துடன் ஜிஎஸ்டியை அறிமுகம் செய்தபோது 0, 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என்ற வரி அமைப்புகள் இருந்ததும் எதிர் கட்சிகளின் போராட்டத்துக்கு ஒரு காரணமாக அமைந்துவிட்டது. ஆனால், எந்த ஒரு சூழ்நிலையிலும் அதிகளவு பிரச்னைகளுக்கு இடம் கொடுக்காமல், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை தேவைப்படும்போதெல்லாம் கூட்டி, முக்கியமான பொருட்கள் மீதான வரியைக் குறைத்துக் கொண்டே இருந்தது, இந்த வரிமுறை வெற்றியடைந்ததற்கு ஒரு முக்கிய காரணம் எனலாம்.

கோடிக்கும்மேல் பதிவு!

தொடக்கத்தில் இந்த ஜிஎஸ்டிக்குள் வரத் தயங்கிய வியாபாரிகள் கூட, ‘அட, எதிர்பார்த்ததைவிட எளிமையாக இருக்கே’ என்ற வியப்புடன் தங்களை ஜிஎஸ்டியில் இணைத்துக் கொண்டுள்ளனர். உண்மைதான் தொடக்கத்தில் இதைப் புரிந்து கொள்ள கடினமாக இருந்ததால், 65 லட்சம் பேர் மட்டுமே ஜிஎஸ்டிக்குள் வந்தனர். அரசு விதிகளை எளிமையாக்கிக் கொண்டே செல்ல இப்போது ஒரு கோடியே 10 லட்சம் பேர் இந்த ஜிஎஸ்டிக்குள் தங்களை வணிகர்களாக பதிவு செய்து கொண்டுள்ளனர்.
ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டி வருமானமாக ஒட்டு மொத்தமாக 95 ஆயிரம் கோடி முதல் ஒரு லட்சத்து 3 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருமானமாக மத்திய / மாநில அரசுகளுக்கு கிடைக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் விகிதாச்சார அடிப்படையில், மாநிலங்களுக்கான நிதி இழப்பை ஈடுகட்டும் வகையில் நிதி பிரித்து வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஆளும்கட்சி, எதிர்கட்சி ஆளும் மாநிலங்கள் என்ற வேறுபாடு எல்லாம் இல்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.
இதனால், ஜிஎஸ்டியை எதிர்த்த பல மாநிலங்கள் இப்போது சத்தம் இல்லாமல் தங்கள் வருமானத்தை பெறத் தொடங்கியுள்ளன. அதேநேரத்தில், இந்தியாவின் புதிய தலைவலியாக மாறியுள்ள பெட்ரோலிய விலை உயர்வும், அதற்காக இந்திய செலவிடும் அதிகபட்ச அன்னிய செலாவணியும் நாட்டின் பொருளாதாரத்தை அசைத்துப் பார்க்கத் தொடங்கியுள்ளன.

எகிறும் பெட்ரோல் விலை!

அமெரிக்க டாலருக்கு எதிரான பண மதிப்பு வீழ்ச்சியை பின்னர் பார்த்துக் கொள்ளலாம், நடுத்தர மக்களை பாதிக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலை உயர்வை

கட்டுப்படுத்த வழியைப் பாருங்கள் என்று காங்கிரஸ் உட்பட எதிர் கட்சிகள் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுதுக் கொண்டிருக்கின்றன. பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விற்பனையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வந்தால், அவற்றின் விலை கணிசமாக குறையும் என்பது எதிர் கட்சிகளின் வாதம்.

நாடு முழுவதும் ஒரே வரி!

மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானும் ஏறக்குறைய இதே கோரிக்கையை முன்வைத்துள்ளார். ஆனால், தமிழக அமைச்சர்களோ பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர விடமாட்டோம் என்று கூவிக் கொண்டிருக்கின்றனர். இவை எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், இதில் நுட்பமாக நீங்கள் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் உள்ளது.

வரி குறைகிறது ஜிஎஸ்டியினால்…

அதாவது, பிரதமர் மோடி சத்தம் இல்லாமல் ஒட்டு மொத்த எதிர்கட்சிகளின் வாயில் இருந்தும், ஜிஎஸ்டி வெற்றி என்ற நேர்மறை எண்ணத்தை வரவழைத்துவிட்டார். என்னதான், ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்தி பிரதமர் மோடி நாட்டை சீரழித்துவிட்டார் என்று எதிர்கட்சித் தலைவர் ராகுல்வின்சி காண்டி பேசினாலும், இன்றைக்கும் அவர் உட்பட அவர் கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் பெட்ரோலிய பொருட்களின் விற்பனையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரவேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர்.

மோடி அரசுக்கு கிடைத்த வெற்றி!

இதுதான் பிரதமர் மோடிக்குக் கிடைத்த மகத்தான வெற்றி. எந்த எதிர்கட்சிகள் ஜிஎஸ்டியால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து விட்டது, ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் கூப்பாடு போட்டார்களோ, அதே எதிர் கட்சிகள் இன்று ஜிஎஸ்டி வேண்டும், அதிலும் பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருப்பது மோடியின் நிர்வாகத்துக்கும், அவரது இரும்பு செயல்பாடுக்கும் கிடைத்த வெற்றி என்று தனியாக சொல்ல வேண்டியது இல்லை.
இது ஒரு சிறிய தொடக்கமே. பிரதமர் மோடி இந்த நாட்டுக்காக மேற்கொண்ட ஒவ்வொரு செயலிலும் இதுபோன்ற எண்ணற்ற நற்பலன்கள் விதைக்கப்பட்டுள்ளன. இவை பலன் கொடுக்க ஓராண்டு அல்லது ஈராண்டு ஆகலாம். ஆனால், பலன் கிடைக்கும்போது, உங்கள் ஒவ்வொருவர் மனதிலும் மோடிதான் நிறைந்திருப்பார்.

(Visited 17 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *