சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

மதச்சார்பின்மையின் பெயரால் நசுக்கப்படும் இந்துக்கள்!

இந்தியா ஒரு மதச்சார்பின்மை நாடு என்று, இன்றுள்ள இந்திய குடிமக்கள் கூவிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், உண்மையில் இந்தியா ஒரு மதச்சார்பின்மை நாடே இல்லை. அரசியல் சாசனத்தை உருவாக்கிய பாபா சாகேப் அம்பேத்கார், இந்தியாவை ஒரு இந்து நாடாக இருக்கும் வகையில்தான் உருவாக்கினர். இதுதான் உண்மையும் கூட.

‘‘உலகில் உள்ள எல்லா மதங்களுக்கும் ஒரு நாடு உள்ளது. இந்த வகையில் இந்துக்களுக்கான ஒரு நாடாக இந்தியா இருப்பதில் தவறொன்றும் இல்லை ’’ என்று அம்பேத்காரின் வாதம். ஆனால், இந்தியாவை தொடர்ந்து குட்டிச்சுவராக்கிக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி, 1976ம் ஆண்டில் மீண்டும் ஒரு அரசியல் அடாவடியைச் செய்தது.
அரசியல் சாசனத்தை 1976ம் ஆண்டில் 42வது முறையாகத் திருத்தி, அதில் செக்யூலரிசம் எனப்படும் மதச்சார்பின்மையைப் புகுத்தியது. இதுவும் கூட ஒரு வகையில் ஓட்டு வங்கி அரசியல் என்று எடுத்துக் கொள்ள முடியும். தொடர்ந்து வட மாநிலங்களில் வெற்றிகளைக் குவித்து வந்த காங்கிரஸ் கட்சிக்கு 1970க்குப் பின்னர் அரசியல் அஸ்திவாரம் ஆட்டம் காணத் தொடங்கியது. எனவே, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களை திருப்தி படுத்தும் வகையில் இந்தியாவில் மதச்சார்பின்மை என்ற வார்த்தையை அரசியல் சாசனத்தில் இடைச்செருகல் செய்து, தன்னை சிறுபான்மை மக்களின் காவலன்போல் காண்பித்துக் கொண்டது என்பதே உண்மை.
சரி, இந்த இடைச்செருகல்களுக்கு தகுந்தார் போல் அரசு நடந்து கொண்டதா? அதுவும் இல்லை. எந்த மதத்தையும் சாராத நாடு என்று ஏட்டளவில் எழுதிவைத்துவிட்டு, 1976 தொடங்கி இப்போது வரை சிறுபான்மை மதங்களாக கூறப்படும் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்தை மட்டுமே ஊட்டி வளர்த்துக் கொண்டிருக்கின்றன மத்திய, மாநில அரசுகள். இதில் மத்திய அரசையாவது எதிர் கட்சிகள் அவ்வப்போது தட்டிக்கேட்டதால், காங்கிரஸ் அடக்கி வாசித்தது. இப்போது மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜ ஆட்சியில் உள்ளதால், பல மாநிலங்களில் அமைதி நிலவிக் கொண்டிருக்கிறது.
ஆனால், தமிழகத்தில்? திராவிடத்தின் பெயரால் அரசியல் கடைவிரித்து வியாபாரம் செய்யத் தொடங்கிய திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உட்பட அனைத்துக் கட்சிகளும் இந்துக்களை தூக்கிப்போட்டு பந்தாடிவிட்டு, இந்துக்களின் வருமானத்தைப் பிரித்து இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மக்களுக்கு பங்கு போட்டுக் கொடுப்பதில் முன்னணியில் ஓடிக் கொண்டிருக்கின்றன.

தமிழர்களிடம் அழிக்கப்படும் இந்து உணர்வு

இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகைகளை, தமிழகத்தில் உள்ள இந்துக்கள் கொண்டாட முயன்றால், ‘தமிழன் இந்துக்கள் அல்லவே. அப்புறம் எதுக்கு இந்து பண்டிகைகளை கொண்டாட வேண்டும்?‘ என்ற கேள்வியுடன் முன் நிற்கின்றனர் முற்போக்கு வாதிகள். யார்டா இவனுங்க என்ற பார்த்தால், முஸ்லிம்களின் ஊது குழலாக இருக்கும் திருமா வளவன், கிறிஸ்தவர்களின் மத மாற்ற ஏஜன்ட் ஆன திருமுருகன் காந்தி என்ற டேனியல் காந்த, செபாஸ்டியன் சீமான் எனப்படும் சீமான், சுப. உதயகுமாரன், அப்புறம் நடுநிலை என்று கூறிக் கொண்டு, இந்துக்களுக்கு விரோதமாக பேசும் சினிமா இயக்கனர்கள் ரஞ்சித், கவுதமன் (இவர்கள் கிறிஸ்தவர்கள்) மற்றும் கரு. பழனியப்பன் என்று பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம். இந்தப் பட்டியலில் கடைசி இணைப்பாக இயக்குனர்கள் என்று கூறிக் கொள்ளும் பாரதிராஜா, அமீர் போன்றோர்களும் வருகிறார்கள்.
இவர்களது முதல் இலக்கு தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்ற விதையை ஆழ விதைத்துக் கொண்டே செல்வது. ஒரு 7 கோடி தமிழர்களிடையே இந்தப் பொய்யை திரும்பத் திரும்ப சொல்லும்போது, சில ஆயிரம் பேராவது தங்கள் பக்கம் திரும்ப மாட்டார்களா? என்பது இவர்களின் நப்பாசை. இவர்களது ஆசைக்குத் தீணிபோடும் வகையில் கேமராவும் கையுமாக இவர்கள் பின்னால் சுற்றிக் கொண்டிருக்கும் சில பெய்டட் மீடியாக்கள், இந்து மதத்துக்கு எதிராக கொம்பு சீவும் பணியை மிகவும் சிறப்பாக செய்து கொண்டிருக்கின்றன. பொய் செய்தியை உண்மையாக்குவதில் போட்டி வேறு.

மழுங்கடிக்கப்படும் பண்டிகை கொண்டாட்ங்கள்

இந்துக்கள் பண்டிகைக்கு விடுமுறை என்றால், ‘விடுமுறை நாள் சிறப்பு திரைப்படங்கள்‘ என்ற விளம்பரத்தை தூக்கிக் கொண்டு வந்துவிடும் டிவிக்களில் திமுகவின் கலைஞர் டிவிக்கு முக்கிய பங்குண்டு. ஆனால் மற்ற மதங்களின் பண்டிகை என்றால், மறக்காமல் பண்டிகை பெயர் குறிப்பிட்டு வாழ்த்து சொல்லி தங்கள் மதச்சார்பின்மையை நிரூபிக்கும் திராவிட சொம்புகளின் எண்ணிக்கைக்கு அளவில்லை என்பதே உண்மை.

விநாயகருக்கே தடங்கல்!

சமீபத்தில் நடைபெற்று முடிந்த விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழகம் முழுவதும் பிரச்னைகள். நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் அதிகமாக ஒரே பாதையில் சென்று கொண்டிருந்த விநாயகர் சிலை ஊர்வத்தின் மீது முஸ்லிம்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். மீண்டும் மீண்டும் நடைபெற்ற இந்தத் தாக்குதல்களால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

விதண்டாவாதம் பேசும் இஸ்லாமியர்!

அரசு சார்பல் சமரச பேச்சுவார்த்தை நடத்தியபோது, அதில் பங்கேற்ற முஸ்லிம் பிரதிநிதிகள் விதண்டவாதம் பேசினர். 25 ஆண்டுகளாக ஒரே பாதையில் சென்று கொண்டிருந்த விநாயகர் ஊர்வலத்தில் உங்களுக்கு என்ன பிரச்னை என்று கேட்டபோது, சம்பந்தம் இல்லாத பதில்களை கூறி, திசைத் திருப்பினர். விநாயகர் ஊர்வலத்துக்கு கண்டனம் தெரிவித்து இந்துக்களின் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதை அனைத்தும் செய்தது யார் என்று உள்ளூர் போலீசாருக்கு நன்கு தெரியும். ஆனாலும் அவர்கள் நடவடிக்கை எடுப்பது இல்லை.

இன்னொருபுரம் கிறிஸ்த்துவ எதிர்ப்பு!

இரண்டாவது சம்பவம், புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரத்தில் நடைபெற்றது. மெய்யபுரத்தை மெய்ஞானபுரமாக சில கிறிஸ்தவ பாதிரிகள் மாற்றிக் கொண்டிருக்க, அவர்களுக்கு உள்ளூர் போலீசாரின் முழு ஆதரவும் கிடைத்தது. கை மாறாக கிறிஸ்தவ பாதிரியார்கள் வேண்டிய மட்டும் பணத்தை அள்ளி இறைத்துள்ளனர். இதனால், மெய்யபுரத்தில் இந்துக்கள் 2ம் தர குடிமக்கள் போல் நடத்தப்பட்டு வந்துள்ளனர்.
இந்து என்ற அடையாளத்துடன் எந்த ஒரு பண்டிகையும் கொண்டாடக் கூடாது என்பது கிறிஸ்தவ பாதிரிகள் மற்றும் போலீசாரின் கூட்டு முயற்சி. இதை உடைத்து ஐகோர்ட் கிளையில் உத்தரவு பெற்று விநாயகர் சதுர்த்தி கொண்டாட கிராம மக்கள் ஏற்பாடு செய்தனர். இந்த விழாவில் பேசுவதற்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவை அழைத்திருந்தனர். எச்.ராஜா மெய்யபுரம் சென்றபோது, அந்த கிராமத்தில் போலீசார் செய்த சதியும், பாதிரியார்களின் திமிர்த்தனமும் தெரிய வந்தது.

எடிட் செய்யப்பட்ட எச்.ராஜா வீடியோ

அப்போது அவர் பேசிய ஆவேச பேச்சுக்களை வீடியோ எடுத்து எடிட் செய்த சில சமூக விரோதிகள், நீதித்துறை மற்றும் போலீசாரை மிரட்டுவதுபோல் ராஜா பேசியுள்ளார். அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று கூக்குரல் இட்டன. ஆனால், ராஜாவின் 7 நிமிட பேச்சுகள் யூ டியூப் தளத்தில் உள்ளது. அவர் எந்த ஒரு சூழ்நிலையிலும் போலீசாரையோ, கோர்ட்டையோ அவமதிக்கவில்லை.

சதியை வெல்வோம்!

இந்த விஷமிகள் ராஜாவை மிரட்டவில்லை. ஒட்டு மொத்த இந்து மதத்தையும் மிரட்டிப் பார்க்கின்றனர். இப்படி துணிந்து பேசும் ஒருவரை சிறையில் அடைத்து மிரட்டினால், ஒட்டு மொத்த இந்துக்களும் மிரண்டு, தங்கள் கொண்டாட்டங்களை கைவிடுவார்கள் என்பது அவர்கள் எண்ணம். அதைநோக்கியே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

போலீசாரும், கோர்ட்டும் செய்வது சரியா?

இங்கே நீதித்துறை கேள்விக்கு அப்பாற்பட்டது அல்ல. மனிதநேய மக்கள் கட்சியின் நிறுவனர் ஜவாஹிருல்லா என்று ஒருவர் உள்ளார். அவர் வெளிநாட்டில் இருந்து மோசடியாக பணம் பெற்ற வழக்கில், சிறை செல்ல வேண்டும் என்று கடந்த ஆண்டில் ஐகோர்ட் உத்தரவிட்டது. ‘ஐயா, ரம்ஜான் முடிச்சு போறேனுங்களே’ என்று கெஞ்சிய, ஜவாஹிருல்லா, இப்போது வரை வெளியில் சுற்றிக் கொண்டிருப்பது கோர்ட்டை அவமதிக்கும் செயல் என்று மாண்புமிகு நீதி அரசர்களுக்குத் தெரியாத ஒரு விஷயமா? அதேபோல் ராமர் கோயில் கட்டும் விஷயத்தில் தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட் நீதியரசர்களை மிரட்டிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆளூர் ஷா நவாஸ் உட்பட பல எண்ணற்ற வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் உள்ளன. இவற்றின் மீது நீதியரசர்கள் தாங்களே முன் வந்து வழக்குப் பதிவு செய்வார்களா?

ஆம்பூர் தாக்குதல்!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வேலூர் மாவட்டம் ஆம்பூரில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய மதவெறி கும்பல் மீது போலீசார் எடுத்த நடவடிக்கைகள் என்ன? சத்தியமாக அந்த போலீசாருக்கே தெரியாது. ஆனால், பாஜக மூத்தத் தலைவர் அத்வானியை குண்டு வைத்து கொல்ல முயன்ற வழக்கு உட்பட பல்வேறு கொலை, கொலை முயற்சி வழக்குகளில் புழல் சிறையில் உள்ள பக்ரூதீன் உட்பட தீவிரவாதிகளுக்கு சிறையில் கலர் டிவியுடன் முதல் வகுப்பு அளித்து, அழகு பார்த்தது இந்த சீறுடைத்துறைதானே?

இதெல்லாம் சகஜம்…

இல்லை என்று சொல்ல முடியுமா? சிறையில் முதல் வகுப்பு சிறைக் கைதிகளுக்கு அளிக்கப்படும் வழக்கமான வசதிகள்தான், பெரிதாக ஒன்றும் இல்லை என்று சிறைத்துறை அமைச்சர் சண்முகம் விளக்கம் கொடுக்கிறார். பொருளாதார குற்றங்களின் அடிப்படையில் சிறையில் அடைக்கப்படும் நபர்கள் உட்பட சில விதிவிலக்கான நபர்களுக்கு மட்டுமே முதல் வகுப்பு என்ற விதிகள் பொருந்தும், கொலை, தீவிரவாதம் செய்யும் தீவிரவாதிகளுக்கு முதல் வகுப்பு என்பது தமிழக சிறைத்துறையின் முதல் கண்டு பிடிப்பு என்பது யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

பாஜக மூத்தத் தலைவர் அத்வானியை குண்டு வைத்து கொல்ல முயன்ற வழக்கு உட்படபல்வேறு கொலை, கொலை முயற்சி வழக்குகளில் புழல் சிறையில் உள்ள பக்ரூதீன் உட்பட தீவிரவாதிகளுக்கு சிறையில் கலர் டிவியுடன் முதல் வகுப்பு அளித்து, அழகு பார்த்தது!

தீவிரவாதிகளுக்கு சலுகை காட்டும் சிறைத்துறை!

புழல் சிறையில் உள்ள தீவிரவாதிகளான பக்ருதீன், பன்னா இஸ்மாயில் ஆகியோரின் அறைகளில் இருந்து கலர் டிவிக்கள், கம்யூட்டர்கள், செல்போன்கள், மின்சார சமையலறை சாதனங்கள், உட்பட பல்வேறு பொருட்களை திடீர் ரெய்டு நடத்தி பிடித்துள்ளனர் உயர் அதிகாரிகள். இதில் கடந்த 19ம் தேதி நடத்திய ரெய்டில் பக்ரூதின், இஸ்மாயில் அறைகளில் இருந்து விலை உயர்ந்த பாசுமதி அரிசி மற்றும் உட்பட பல்வேறு பொருட்களை சிறைத்துறையினர் அள்ளியுள்ளனர். இவை எல்லாம் சிறையில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் அல்ல. சிறைத்துறை அதிகாரிகளின் கண்களுக்குத் தென்படாமல் உள்ளே செல்லவும் வாய்ப்பில்லை. அப்படியானால், இவை எப்படி உள்ளே சென்றிருக்கும், இதற்காக எவ்வளவு லட்சங்கள் லஞ்சப்பணம் கை மாறி இருக்கும் என்பதை வாசகர்களாகிய உங்கள் ஆலோசனைக்கே விட்டுவிடுகிறோம்.

தீவிரவாதத்துக்கு சலுகையா!

சமூக அமைதிக்கு தீ வைக்கும் இந்தத் தீவிரவாதிகளுக்கு சலுகை காட்டும் அரசுதான், இந்துக்களின் பாரம்பரிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுவதற்கு புதுப்புது சட்டங்களை, நெருக்கடிகளை திணித்துக் கொண்டிருக்கிறது. இதை உடைப்பதற்காக ஒவ்வொரு முறையும் கோர்ட் படியேற வேண்டியுள்ளது. இதனால், விநாயகர் சதுர்த்தி பண்டிகைகள் கொண்டாட வேண்டும் என்றாலே, ஒரு வித தயக்கம், அச்சத்தை இந்துக்கள் மனதில் விதைப்பதில் திராவிட கட்சிகளும், தீவிரவாத இயக்கங்களும் வெற்றிபெற்றது போன்ற மாயத்தை ஏற்படுத்தியுள்ளனர். ஆனால், அது உண்மையல்ல.

வேரூடன் வீழ்த்த வேறடி மரமல்ல இந்துமதம்

தமிழகத்தில் இப்போதுதான் இந்து மதம் தழைத்துக் கொண்டிருப்பதாகவும், அதன் வளர்ச்சி தங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் என்பதால், அது தொடர்பான கொண்டாட்டங்களுக்குத் தடை விதிப்பது போலவும் சிறுபான்மை அமைப்புகள் பேசிக் கொண்டிருக்கின்றன. உண்மையில், இந்து மதம் என்ற வாழ்வியல் மார்க்கம் மற்றவர்களை துன்புறுத்தாத கொள்கையைக் கொண்டிருப்பதுதான். அதனால்தான் தமிழகத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் இஸ்லாமும், பின்னர் கிறிஸ்தவமும் தங்கள் மத மாற்றத்தையும், மதவெறியையும் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றன.
7 நூற்றாண்டுகளுக்கு அதிமாக இந்தியாவில் ஆட்சி செய்த இஸ்லாமிய மன்னர்கள், ஜிசியா வரி விதித்தும், வாள் முனையில் உயிர் பயம் காண்பித்தும், இந்தியாவை இஸ்லாமிய நாடாக்க முடியவில்லை. 3 நூற்றாண்டுகள் ஆட்சி செய்த கிறிஸ்தவர்கள் பசி ரொட்டியும், பால் பவுடரும் கொடுத்தும் இந்தியாவை கிறிஸ்தவ நாடாக்க முடியவில்லை. உண்மையில் உங்கள் மீதான நம்பிக்கையின் பேரில், நீங்கள் சொன்னதை ஆராயாமல் மதம் மாறிய சிறு கூட்டத்தை வைத்து, நீங்கள் ஒட்டு மொத்த இந்துக்களையும் கணிக்கவேண்டாம்.
ஒரே வெட்டில் வீழ்த்துவதற்கு வாழை என்று நினைக்க வேண்டாம். வெட்ட வெட்ட தழைக்குள் வாழை, மரம் எது, விழுது என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு வியாப்பித்து வளர்ந்துவிட்ட ஆலமரம். இதில் நீங்களும் தங்கி இளைப்பாறிக் கொள்ளலாம். மாறாக, இந்து மதம் என்ற ஆலமரத்தை அசைத்துப் பார்த்தால், அதில் நீங்களும் தங்கி இளைப்பாறிக் கொள்ள முடியாது.

இந்து மதம் பல யுகங்கள் கடந்தது!

இந்து மதம் இருக்கும் வரைதான் எல்லாம் அமைதியாக இருக்கும். 53 முஸ்லிம் நாடுகளின் நிலையும், கிறிஸ்தவ நாடுகளின் நிலையும் நமக்கு வேண்டாம். நீங்கள் இந்தியாவையும், இந்துக்களையும் நம்பலாம். யாரும் மதத்தின் பெயரால் புனிதப்போர் நடத்தமாட்டார்கள். எங்களுக்கு நாடும், மதமும் இரு கண்கள். அனைவரின் வாழ்வக்கும் பாடுபடும் மதம், ஒரே மதம் இந்து மதம் மட்டுமே. இந்துவாக இருப்போம், இந்துப் பண்டிகைகளை உற்சாகத்துடன் கொண்டாடுவோம்.

(Visited 17 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *