சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

மதமாற்றம் ஒரு தேசிய அபாயம்! தேவாரத் தலத்தை கைப்பற்றிய கிறிஸ்துவ சர்ச்சு!

இந்து என்ற உணர்வு உள்ள ஒவ்வொருவரும் இதை கட்டாயம் படித்து, சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து, ஒரு விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும். !

இனி ஒரு திருத்தலம் இப்படி நம் கையில் இருந்து சென்றுவிடக் கூடாது.

வாரத்தின் 6 நாட்கள் வேலைக்கு சென்று விட்டு ஓய்வு கிடைக்கும் ஒரு நாளில் சிவ சிவா என்று சிவத்தை நோக்கி செல்லும் ஒரு ஏழை சிவ அடியாரின் மன வேதனை இது.
எத்தனையோ கோவில்களை நாம் இழந்து விட்டோம் இப்பொழுது மீதி இருக்கும் கோவில்களை பாதுகாக்க நாம் என்ன செய்ய போகிறோம். எத்தனையோ இந்து அமைப்புகள் இந்து உணர்வாளர்கள் பலர் நாம் இருந்தும் என்ன பிரோஜனம்.

இதோ அந்த அடியாரின் மன வேதனை!

ஒரு ஹிந்து கோவிலின் அவல நிலைமை, நான் திரும்ப திரும்ப இதை தான் சொல்வது, கிறிஸ்தவம் நம் கலாசார அடையாளங்களை அழிக்கும் என்று.

மூன்று நாட்களுக்கு முன், சென்னை, காஞ்சிபுரம் , வேலூர் உள்ள ஊர்களில் தேவராம் பாட பெற்ற தலங்களை தரிசிக்கலாம் என்று கிளம்பினேன்.

(நான் ஒரு சகிப்புத்தன்மை உள்ள ஹிந்து, ஆனால் என் கோவில்கள் அழிந்தால் எனக்கு அதை பற்றி எந்தக் கவலையும் இல்லை என்று எண்ணம் உடையவர் என்றால் இதை நீங்கள் அவசியம் படிக்க வேண்டும்.)

அதில் ஒன்று, காஞ்சிபுரத்தில் உள்ள எலுமியன் கோட்டூர் தெய்வநாயகேஸ்வரர் திருக் கோயில், காண சென்ற போது, நொறுங்கிப் போனேன். அந்த கோவிலுக்கு செல்லும் வழி எங்கும், கிறிஸ்தவத்தின் ஆளுமை முழுதாக உள்ளது. சென்னையில் இருந்து NH45 வழியாக, தண்டல் கூட்டு ரோடில் வலப்பக்கம் திரும்பி பயணித்த சிறிது நேரத்திலே , தமிழ் பெயர்கள் அற்ற, ஊர்களை காணலாம். கிறிஸ்தவம் உள்ளே நுழைந்து இருக்கிறது.

கலாச்சார் மிச்சங்களை அழித்து இருக்கிறது. போகும் வழியாக மப்படு என்ற ஊரை தொட்டால், ஒரு பழமை வாய்ந்த சிவன்
கோவில் தென்படுகிறது.

அதன் அருகே ஒரு மசூதி காணலாம். என்ன நடந்து இருக்கும் என்பதை நீங்களே யோசித்து கொள்ளுங்கள்.

அந்த கோவிலை பற்றி விசாரித்தல் மிக அலட்சியமான பதில் வருகிறது, அதற்கு காரணம் , என் நெற்றி நிறைய திருநீறு என்று புரிகிறது. இறை அங்கு இல்லை என்று சொல்லி விட்டு விலகி போகிறார்கள், மிக தெளிவாக அவர்கள் மாற்று மதத்தினர் என்று தெரிகிறது. நான் சென்ற நேரம் நடை திறக்க வில்லை, (எப்போது
திறப்பார்கள் என்று தெரியவில்லை),

வெளியே இருந்து ஈசனை நினைத்து அழுது விட்டு நகர்ந்தேன். மேலே தொடர்ந்து, தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில், பற்றி விசாரித்தல், யாருக்கும் தெரிய வில்லை, ஒருவேளை தெரிந்து இருந்தும் பதில் சொல்ல விரும்ப வில்லை போலும்.
கூகிள் வரைபடம் வைத்து, அரக்கோணம் சாலையை தொடர்ந்து சென்றால், நரசிங்கபுரம் என்ற இடம் வருகிறது, மிக விரைவில் நரசிங்கபுரம் தனது பெயரை இழந்து கிறிஸ்தவ பெயர் கொண்ட Western பெயர் பெறுவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.

சம்பந்தர் வந்து தேவாரம் பாடல் பெற்ற தலம், சீண்டுவார் யாரும் இல்லாமல் இருக்கிறது. என் ஈசனே உனக்கா இந்த நிலைமை என்று, கண்ணிற் வழிய நிற்கும் போது, ஒரு  பெரியவர் வந்து நின்றார்.

நரசிங்கபுரம் பேருந்து நிறுத்தத்தில், ஒரு ரோடு ஓர கிறிஸ்தவ ஆலயம் கட்டிடம் கூறி நம்மை வரவேற்கிறது. தெய்வநாயகேஸ்வரர் ஆலயத்திற்கான வழி என்று ஒரு பழுப்பு ஏறிய பலகை நமக்கு வழி சொல்கிறது.

மிக மோசமான வழிகள், ஆனால் அமைதியான இடம். ரம்மியமான கிராம சூழ்நிலை. மெயின் ரோட்டில் இருந்து மிக தொலைவு. எனது இரு சக்கர வாகனம் பயணிக்க தடுமாறிய போது, திருஞானசம்பந்தர் தன் பிஞ்சு கால்கள் தேய இந்த வழியாக நடந்து வந்து இருப்பார் என்று நினைவு வருகிறது.

வழி சொல்ல யாரும் இல்லை, தட்டு தடுமாறி கோவில் அமைந்த கிராமத்தை அடைந்து, வழி கேட்டால், நம்மை விசித்திரமாக பார்கிறார்கள். ஒரு வழியாக கோவிலை அடைந்தால், கோவிலின் மிக மிக அருகே ஒரு பெரிய கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. கோவில் மூடி கிடக்கிறது. சிறிய கதவு வழியே உள்ளே சென்றால், கோவில் நல்ல பராமரிப்பில் இல்லை. மூடிய இரும்பு கதவு வழியாக, ஈசனை நோக்கினால், ஈசன் சிறைபட்டதாக தோன்றுகிறது.

சம்பந்தர் வந்து தேவாரம் பாடல் பெற்ற தலம், சீண்டுவார் யாரும் இல்லாமல் இருக்கிறது. என் ஈசனே உனக்கா இந்த நிலைமை என்று, கண்ணிற் வழிய நிற்கும் போது, ஒரு பெரியவர் வந்து நின்றார்.

கோவிலை கூட்டி தீபம் போடுபவர். கோவிலை திறந்து விட்டு தரிசனம் செய்ய வைத்தார். மொத்த கிராமத்தில் 95% கிறித்தவர்களாக மதம் மாறி விட்டார்கள் என்றும், சில கிறிஸ்தவ கும்பல் மிச்சம் இருக்கும் ஹிந்துகளையும் மத மாற சொல்லி வற்புறுத்தி வருகிறார்கள் என்றும் அறிந்து கொண்டேன்.

விஷேச தினங்கள் மட்டும் கூட்டம் வரும் என்றும், அன்று மட்டும் அர்ச்சகர் வருவார் என்றும் சொன்னார். அர்ச்சகரை குறை சொல்லி ஒன்றும் இல்லை. ஊர் மக்கள் வந்தால் தான் தானே வருவாய் கோவிலுக்கு, அவருக்கு குடும்பம் உள்ளதால், அவர்
திருவள்ளுருக்கு சென்று விட்டார்.

பல நிலங்கள் இருந்தும், தின பூஜை எதுவும் இன்றி, விசேஷ தினத்திற்காக ஈசன் காத்து கொண்டு உள்ளான். என்ன செய்வது என்று புரியவில்லை என்று கண் கலங்கி கூறினார். அவரிடம் ஒரு ஆயிரம் ருபாய் கொடுத்து கோவிலை நன்றாக பார்த்து கொள்ளுங்கள், தினமும் தீபம்
ஏற்றுங்கள் என்று வேண்டி கொண்டு, சம்பந்தர் பாடிய தேவார பாடலை கருவறை முன் (உள் அல்ல) நின்று படித்து விட்டு வெளியே வந்தேன்.

இந்த மண் எல்லா மதத்தினருக்கும் சொந்தம், ஆனால் தமிழும், தமிழ் கலாச்சாரமும், ஹிந்து மதத்தோடு பெருந் தொடர்புடையவை. அதில் மாற்று மதத்தவருக்கு எந்த தொடர்பும் கிடையாது.
அதனால் அவர்களுக்கு நமது பழமையான கோவில் பற்றி அக்கறை இல்லை. நமக்கு இருக்கிறது, முடிந்த வரை இந்த ஆலயம் செல்லுங்கள்.

சகிப்புத்தன்மை என்ற சட்டையை, நாம் கழற்ற வேண்டிய தில்லை, கிறிஸ்தவ மத மாற்றிகளே நம்மை கழற்ற வைத்து விடுவார்கள்.

நாம் கழட்டி வைத்தால், என்ன நடக்கும் என்பதை அவர்கள் உணர மறுக்கிறார்கள்.

கிறிஸ்தவம் இந்த தேசத்தின் கலாச்சாரத்திற்கு அபாய கரமானது!!

 

(Visited 7 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *