சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

மதுரையை மீட்ட பிரதமர் மோடி!

தமிழகத்தின் தென்மாவட்டங்களை தலைநகர் சென்னையோட இணைப்பதில் ரயில் போக்குவரத்தின் பங்கு மிக முக்கியமான இடத்தை வகிக்கிறது என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை.. ஆனால் அதற்கான தளவாட கட்டமைப்பு நிறைவாக இருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை..!

மதுரை – சென்னை ரயில் பாதை!

அதுவும் மதுரை – சென்னை பாதை மிகவும் நெரிச லான ஒன்று. ஒருவழிப்பாதை போல் ஒற்றை தண்ட வாளப் பாதை..!

பயணநேரம் 12மணி நேரம் வரை. எனவே அதை மறு கட்டமைப்பு செய்ய 1999இல் பிரதமர் வாஜ்பாய் தலைமையில் திட்டம் தீட்டப்பட்டு, முதல் கட்டமாக, சென்னை – செங்கல்பட்டு வழித்தடமும், மதுரை திண்டுக்கல் வழித்தடமும் இரட்டை அகல ரயில் பாதையாக மாற்றும் வேலைகள் ஆரம்பித்தன! இதற்கான நிலம் கையகப்படுத்துதல் வேலைகள் முடுக்கி விடப்பட்டு, பணிகள் நடக்க ஆரம்பித்தன..!

காங்கிரஸ் ஆட்சியில்…

இடையில் 2004ல் ஆட்சி மாற்றம்.. காங்கிரஸ் ஆட்சி..பத்தாண்டு கால ஆட்சியில் இந்த திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு என்பது பெயரளவில் ஒதுக்கப் பட்டு பணிகள் நத்தை வேகத்தில் முடுக்கி விடப்பட்டன.

வெறும் 450கிமீ தூரப் பணிகள் ஜவ்வு மிட்டாயாக இழுக்கப்பட்டது. கேரளா வளர்ந்து கேரளாவின் 80% ரயில் பாதைகள் இரட்டை பாதைகளாகவும், மின் பாதைகளாகவும் மாற்றப்பட்டன.
இடையில் 2010ல் மதுரை – தேனி ரயில் பாதை அகலப்பாதையாக மாற்றுவதாக கூறி அந்த பாதை புழக்கத்தில் இருந்து அகற்றப்பட்டது. ஆனால் ஆண்ட காங்கிரஸ் அரசு அடுத்த நான்கு ஆண்டுகளில் சிறு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை..

தமிழகத்தின் வளர்ச்சி!

தேனி, போடி ஊர்களுடனான உறவு மதுரைக்கு துண்டிக்கப் பட்டது. ( பல தனியார் பேருந்து நிறுவனங்கள் சம்பாதிக்கவும்,

சரக்கு போக்குவரத்தில் பல தனியார் லாரி நிறுவனங்கள் நன்கு சம்பாதிக்கவும்). தமிழகத்தின் வளர்ச்சி பற்றி மத்தியில் காங்கிரஸ் ஆட்சியும், மாநில அரசும் கண்டு கொள்ளவில்லை..! 2014-ல் மீண்டும் பாஜக ஆட்சி..!

வந்தார் மோடி!

தூங்கிய நிர்வாகம் தூசி தட்டப் படுவது போல் முடுக்கி விடப்பட்டது. மதுரை சென்னை இரட்டை ரயில் பாதை 496கிமீல் ஏறக்குறைய 98% பணிகள் முடிக்கப்பட்டு, ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டன.. பயணநேரம் வெகுவாக குறையத் துவங்கின.

தூங்கிய நிர்வாகம் தூசி தட்டப்படுவது போல்
முடுக்கி விடப்பட்டது. மதுரை சென்னை இரட்டை
ரயில் பாதை 496கிமீல் ஏறக்குறைய 98% பணிகள் முடிக்கப்பட்டு, ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டன..
பயணநேரம் வெகுவாக குறையத் துவங்கின.

இந்நிலையில், கடந்த ஆட்சியில் காங்கிரஸால் புறக்கணிக்கப் பட்ட மதுரை – போடி அகல ரயில் பாதை வெகு வேகமாக நடைபெற பாஜக அரசு செயல் பட்டு வருகிறது.

இத்தோடு மதுரை – நெல்லை – கன்யாகுமரி இரட்டை ரயில் மின் பாதைகள் பணி மிக விரைவாக போர்கால அடிப்படையில் நடத்தி வருகிற பாஜக அரசு, மற்றுமொரு சிறப்பாக, மதுரை – தூத்துக்குடி இடையில் புதிய போக்குவரத்து பாதையை, காரியாபட்டி, அருப்புக்கோட்டை, விளாத்திகுளம், மீளவிட்டான் வழியில் அமைத்திட மோடிஜி அரசு முயற்சி செய்து வருகிறது.

இந்தியாவின் அங்கங்கள்!

நமது பிரதமர் அவர்களுக்கு குஜராத்தும், தமிழகமும் ஒன்றுதான். ஆம் அவைகள் இரண்டுமே அவரின் பார்வையில் இந்திய நாடே! அதன் வளர்ச்சியே அவரின் குறிக்கோள்! அவருக்கு நாம் செய்யும் கைம்மாறு என்ன தெரியுமா…?

எய்ம்ஸ்!

தென் தமிழக மக்கள், கிழக்கு, மேற்கு மாவட்ட மக்களின் நலனுக்காக, 1300 கோடியில் மதுரை தோப்பூரில் கிமிவிஷி பல்நோக்கு மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட வரும் நமது பிரதமருக்கு கறுப்பு கொடி காட்டுவதா..!
நன்றாக யோசியுங்கள்.!

ஏறக்குறைய 15 வருட முதல்வர். ஐந்து வருட பிரதமர் பதவி. என்ன சம்பாதித்து விட்டார் மோடிஜி..!
என் போன்று நேர்மையை மதிக்கும் கோடிக்கணக்கான நன்றியுள்ள அன்பு நெஞ்சங்களை மட்டுமே அவர் சம்பாதித்திருக்கிறார். அவரை எதிர்ப்பவர்கள் கூட அவர் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூறவில்லை.

அவர் ஒரு மதவாதி என்றே, இந்துத்வா வாதி என்றே குற்றம் சாட்டுகிறார்கள். அதும் பொய் என்று நிரூபணமாகிக் கொண்டு வருகிறது. மதசார்பின்மை பேசும் நம் தமிழக திராவிடக் கட்சிகளை பார்த்து கேட்கிறேன் ஓர் கேள்வி. கடந்த ஐந்து ஆண்டில் எங்காவது மதக்கலவரம் நடந்ததுண்டா.

பெரும்பான்மை இந்து மக்களை இழிவு படுத்தும் விதத்தில் இந்த திராவிடக் கட்சிகளும், மாற்று இரட்டை மதங்களும், ஜாதிய அமைப்புகளும் செயல் பட்டு வருவது உங்களுக்கு தெரியவில்லையா..?

தேசம் வலுப் பெற, நிம்மதியான நிலையான ஆட்சி அமைந்திட மோடிஜி அவர்களின் வழி ஒற்றி நடப்போம்.. இது எனது வேண்டுகோள்.. முடிவு உங்கள் கையில்…!

– தேச பக்தன்

 

 

(Visited 11 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *