சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

மந்திரங்களை சரியா சொன்னா பலன் உண்டு! சொல்லுங்கோ… அர்த்தம் தெரியலைன்னாலும் பரவாயில்லை

செகந்தராபாதில் பெரியவா முகாம். அப்போது ரயில்வேயில் மூத்தஅதிகாரிகள் சிலபேர் பெரியவாளை தர்சனம் பண்ண வந்தனர். அவர்களுக்கு ஒரு பெரிய குறை. அது என்னவென்றால்…
“பெரியவாளோட அனுக்ரகத்தால எங்களோட கர்மானுஷ்டானங்களைஎல்லாம் கூடியவரைக்கும் விடாமப் பண்ணிண்டு இருக்கோம். ஆனா இந்த ஊர்ல, பூஜை, ஸ்ராத்தம், தர்ப்பணம் இதெல்லாத்தையும் சரியாப் பண்ணிவெக்க, வேதம் படிச்ச சாஸ்த்ரிகள் இல்லே! ஒரே ஒர்த்தர்தான் இருந்தார்!
அவருக்கும் பண்ணி வெக்கும்போது அவர்சொல்ற மந்த்ரங்களுக்கு அவருக்கே அர்த்தம் தெரியலை! அர்த்தம் தெரியாம கர்மாக்களை பண்றதை, எங்காத்து பிள்ளைகள் ஏத்துக்கமாட்டேங்கறா..
இந்தக் காலத்து பசங்களாச்சே! அதான்…பெரியவா தயவுபண்ணி மடத்துலேர்ந்து யாராவது வேதம் படிச்ச சாஸ்த்ரிகளா பாத்துஇந்த ஊருக்கு அனுப்பிச்சுக் குடுக்கணும்” என்று ப்ரார்த்தனைபண்ணினார்கள்.
“ஒங்காத்து பிள்ளைகள் சொல்றதுலேயும் ஞாயம் இருக்கு!” என்று அவர் ஆரம்பித்தபோது, ஸ்ரீமடத்துக்கான அன்றைய தபால்களை எடுத்துக் கொண்டு ஒரு Postman  வந்தார். பெரியவா மேலாக சில கடிதங்களைப் படித்துவிட்டு, ஒரு லெட்டரை எடுத்தார். அதில் PIN என்று இருந்த இடத்தை அந்த அதிகாரிகளுக்கு சுட்டிக் காட்டி, “PIN ..ன்னு போட்டிருக்கே… அதோட அர்த்தம் தெரியுமா?”ரொம்ப சாதாரண கேள்விதான்.
ஆனால் அந்த அதிகாரிகளுக்கு தெரியவில்லை. கொண்டு வந்த தபால் காரருக்கும் தெரிய வில்லை. ‘‘POSTAL INDEX NUMBER ” என்று தானே அதற்கு விளக்கமும் குடுத்தார்.

பண்ணி வெக்கற வாத்யாருக்கு மந்த்ரங்களோட அர்த்தம் தெரியாட்டாலும், பண்ணிக்கற ஒங்களுக்கெல்லாம் அர்த்தம் புரியாட்டாலும், எந்த கர்மாவுக்கு எந்த மந்த்ரம் சொல்லணுமோ. அதை செரியா சொன்னா, அதுக்குண்டான பலனை அது குடுக்கும் பெரியவா

சிரித்துக் கொண்டே அந்த அதிகாரிகளைப் பார்த்து நீங்கள்ளாம் நெறையபடிச்சு பெரிய உத்தியோகம் பாக்கறவா… ஆனா, சாதாரண தபால்ல வர PIN க்கு ஒங்களுக்கு அர்த்தம் தெரியலே!
அவ்வளவு ஏன்? PINCODE ன்னு எதையோ எழுதின அந்த ஆஸாமிக்கே கூட அதோட அர்த்தம் தெரியாமஇருக்கலாம். ஆனா… PINCODE ன்னு போட்டிருக்கற எடத்ல சரியான நம்பரை எழுதிட்டா…
அது சரியா போய்சேர வேண்டிய எடத்துக்கு போறாமாதிரி பண்ணி வெக்கற வாத்யாருக்கு மந்த்ரங்களோட அர்த்தம் தெரியாட்டாலும், பண்ணிக்கற ஒங்களுக்கெல்லாம் அர்த்தம் புரியாட்டா லும், எந்த கர்மாவுக்கு எந்த மந்த்ரம் சொல்லணுமோ!.
அதை செரியா சொன்னா, அதுக்குண்டான பலனை அது குடுக்கும்! அதுல ஒங்களுக்கு எந்த விதமான சந்தேஹமும் வேணாம். அதுனால, இப்போ இருக்கற ப்ரோஹிதரை நிறுத்தாம, நீங்க பண்ண வேண்டிய கர்மாக்களை ஸ்ரத்தையோடபண்ணிண்டு வாங்கோ! ஒரு கொறைவும் வராது!” கையைத் தூக்கி ஆசிர்வதித்தார்.
அதிகாரிகள் விக்கித்துப் போனார்கள்! ஒரு சாதாரண, அன்றாடம் கவனத்தில்கூட வராதPIN னை வைத்தே, எப்பேர்பட்ட பெரிய சந்தேஹத்தை போக்கிவிட்டார்!

(Visited 37 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *