சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

மீ…டூ… ஆரம்பித்தது எப்படி?

2006ம் ஆண்டில் ‘‘டரானா பர்க்’’ எனும் கறுப்பு இன அமெரிக்க பெண்மணி முதன் முதலாக ‘‘மீடூ’’ என்ற சொல்லை அன்றைய ‘‘Myspace’’ எனும் இணைய தளத்தில் பதிவிட்டார்.

எப்படி இந்த வார்த்தையை தேர்ந்தெடுத்தீர்கள் என்று கேட்டபோது, ‘‘என்னிடம் ஒரு 13 வயது பெண் குழந்தை தான் கற்பழிக்கப்பட்டதாக கூறி அழுத போது எனக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை. மனம் வேதனை பட்டது. ‘‘எனக்கும் தான் இப்படி நடந்திருக்கிறது. எனவே இந்த விபத்திலிருந்து மீண்டு வர வேண்டும் என்று சொல்ல நினைத்தே, என் இணைய தளத்தில் ‘‘மீ…டூ…’’ என்று எழுதினேன் என்று கூறியுள்ளார்.

2017ம் ஆண்டு அக்டோபர் 15 மதியம் ‘‘அலிசா மிலானோ எனும் ஹாலிவுட் நடிகை, இயக்குநர், தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டெயின் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்று ‘‘மீ…டூ’’ இணைய சேவையை தொடக்கி வைத்தார்.

அவரே எதிர்பார்க்காத விதத்தில், அக்டோபர் 15ம் தேதி முடிவதற்குள் 2 லட்சம் பேர்கள் மீ..டூ.. என்று டுவீட்செய்து விட்டனர். அக் 16ந் தேதி அது 5 லட்சமாக மாறிவிட்டது.

அலிசா மிலானோ தனக்கு முன்னரே டரானா பர்க் எனும் பெண்மணி ‘மீ…டூ’ என்று கூறியுள்ளதை ஒத்துக் கொண்டுள்ளார். இருவரும் பேசி நட்பாகவும் மாறி உள்ளனர்.
மீ…டூ வை போலவே, ‘‘UOKSIS’’ ‘‘What Were You Wearing’’, போன்ற வார்த்தைகளையும் பல பெண்கள் அறிமுக படுத்தியுள்ளனர்.

உலகம் முழுவதும்

மற்ற பெண்கள் பயந்து கொண்டு வாய்மூடி இந்த சித்ரவதையை அனுபவிக்க கூடாது என்ற ஒரே காரணத்திற்காகத் தான், பகிரங்கப் படுத்தியுள்ளேன் என்று ‘‘மீ..டூ..’’ பெண்கள் சொல்லி இருக்கின்றனர்.

அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இந்தியா, சவுதி, ஆப்கானிஸ்தான், இஸ்ரேஸ், ஜப்பான் என அனைத்து நாடுகளிலும் மீ..டூ தன் சுவடுகளை பதித்துள்ளது. குணம் நாடி, குற்றமும் நாடி, இந்த மீ…டூ வை முறையாக பரிசீலிக்க வேண்டும்.

20ம் நூற்றாண்டின் பாதிக்குமேல் தான் இந்திய பெண்கள் வேலை களத்தில் இறங்கியுள்ளனர். புதிய பாதைகளை தேர்ந்தெடுத்து, புதிய எல்லைகளை தொட, நமது ஆண்கள் துணை புரிவது மிக அவசியம். பெரும்பாலானவர்கள் கண்ணியமாக இருந்தாலும், ஒரு சிலர், அதுவும் சக்தி வாய்ந்த பதவியில் இருக்கும் ஒரு சிலரின் ஈனத்தனமான செய்கையால் இன்று பல ஆண்கள் தலை குனிய நேரிடுகிறது.

நமது சமஸ்காரங்களை நாம் மீண்டும் துணைக்கு அழைக்க வேண்டிய நேரம் இது போலும்.
பிற பெண்களை மாதா என்றோ அம்மா என்றோ தான் பிற ஆடவர்கள் அழைப்பது வழக்கம். அதாவது பிற பெண்கள் தனது மாதா ஸ்தானத்தில் உள்ளவர்கள் என்றே நினைத்து பழக வேண்டும் என்கிறது நம் தர்மம்.

அதற்காக பெண்கள் எப்படி வேண்டு மானாலும் நடந்துக் கொள்ளலாம் என்பது அர்த்த மல்ல. பழிக்கு அஞ்சும் வகையில் ஆண்களும், பெண்களும் நடந்து கொண்டால் இந்த மீ…டூ இயக்கத்திற்கு தேவையே இல்லாமல் போய் விடும் என்பதே நமது உன்னத இலக்காகட்டும்!!! நல்லது நடக்கட்டும்!!!

(Visited 18 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *