சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

மீ..டூ.. தாக்கு பிடிக்குமா..!

கவர்ச்சி… ஈர்ப்பு இல்லாத உயிரினம் எங்கே உள்ளது இந்த கவர்ச்சியின் எல்லைகளை யார் நிர்ணயிப்பது. முன்னர் பெண்களை ஜாக்கிரதை படுத்தி, சில கட்டுபாடுகளை விதித்து காப்பாற்றி வந்தனர். ஆனால் இப்போது ‘சமஉரிமை’ என்ற பெயரில் பெண்கள், நாங்களும் எல்லாவற்றிற்க்கும் தயார் எனும் போது, எப்படி பாதுகாக்க முடியும்.

அதுவும் கவர்ச்சி மயமான சினிமா துறையில். ஒரு ஆண் மற்றொரு பெண்ணை பார்த்து தன் விருப்பத்தை தெரிவிப்பது எப்படி தவறாக முடியும். மறுப்பதற்கு அந்த பெண்ணிற்கு உரிமை உள்ளது. கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பது போல உள்ளது இன்றைய பெண்கள் நிலை.

மேலும் இன்று ஆண்களுக்கும் பல பிரச்சினைகள் உள்ளது. மேலிடத்திற்கு நெருக்கமாக இருக்க வேண்டும் சூழல் உள்ளது. பல அந்தரங்க வேலைகளை செய்ய வேண்டும். இல்லையென்றால் அலுவலகத்தின் ஏதோ ஒர் மூலையில் தான் இருக்க வேண்டும்.

அதனால் இந்த மீ..டூ விவகாரம் கொஞ்ச காலம் ஒடினாலும் அதிகம் தாக்கு பிடிக்காது என்றே நான் சொல்வேன்.

மேலும் சட்டம் தான் இருவரின் தனிப்பட்ட பிரச்சினைக்கு தீர்வாக முடியும்.

சமூக வலைதளங்களின் உண்மையான முகம் வெளியே வரத் தொடங்கியுள்ளது என்றே நினைக்கிறேன். எனக்கு பிடிக்காதவர்களை பற்றி, எனக்கு தொழில்துறை போட்டியாளர்களை பற்றி என யார் வேண்டுமானாலும் எழுதலாம்!!

எவ்வளவு ஆபத்து பாருங்கள். பொய் எழுதியவருக்கு சிறை என்று வந்தால் மட்டுமே மீ..டூ போன்ற எழுச்சிகள் தாக்கு பிடிக்கும்.

                                                                                            – சாரதா கிருஷ்ணன், கோவை.

(Visited 9 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *