சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

முகம்மது பின் துக்ளக்’படத்தின் ஷீட்டிங்கின் போதே தகராறுகள் ஆரம்பித்தன..!

‘முகம்மது பின் துக்ளக்’ படத்தின் ஷீட்டிங்கின் போதே தகராறுகள் ஆரம்பித்தன..! நடித்த நடிகர்களுக்கு மிரட்டல் விடப்பட, சிலர் விலகினர்..! பல முட்டுக்கட்டைகள் அப்போதைய ஆதிக்க சக்தியினரால் போடப்பட்டன..!

சென்சாரில் ஏகப்பட்ட வெட்டுகள் கொடுக்கப்பட, சோ அதை எதிர்த்து டிரிப்யூனலும் பின்னர் கோர்ட்டுக்கும் சென்றார்..! சென்சாரிலேயே நூறு நாட் கள் ஓடிய படம் என்று சொல் வார்கள் அதை அப்போது..!

‘‘அந்தப் படத்தை வெளியிடக் கூடாது..!’’ என்று விநியோகஸ்தர் களும், தியேட்டர்களும் மிரட்டப் பட்டனர்..! படத்தை வெளியிட தியேட்டர்கள் பயந்து பின்வாங்க, ஒன்றிரண்டு தியேட்டர்களே படத்தை வெளியிட்டனர்..!

படம் வெளியிடப்பட்ட தியேட்டர்கள் வாசலில் கழகத் தினரால் ஒவ்வொரு நாளும் தகராறு, ஆர்ப்பாட்டம், ரகளை..! படம் பார்க்க வந்தவர்களின் மேல் வன்முறை..!

தியேட்டர்கள், சோ வை சில காட்சிகளை வெட்டுமாறு வற்புறுத்தினர்..! சோ சொன்னார், “Nothing Doing..! சென்சார் செய்யப்பட்ட படத்தைக் காட்டுவது உங்கள் கடமை..! Dont Mess With Me..!”
ரகளையின் உச்சியில், சோ, சினிமா தியேட்டருக்குச் சென்றார், தனியாக..! அங்கு அவர் சட்டையில் கயிறு கட்டி அதில் டின் கட்டி கொக்கரித்தனர் கழகக் கண்மணிகள்..! அதைக் கழட்டாமல் அதோடுவே தியேட்டருக்குள் சென்றார் சோ..!
கழகத்தின் அராஜகங்களால், முகம்மது பின் துக்ளக் சில நாட்களே ஓடியது..! சோவிற்கு ஏகப்பட்ட பணநஷ்டம்..! சோ, நம்மைப் போல நடுத்தர வர்க்கம். சன் பிக்சர்ஸைப் போலவோ, விஜயைப் போலவோ மல்ட்டி மில்லியினர் அல்ல. ஆயினும் அவர் பணியவில்லை..!
சோ, பணம்தான் இழந்தார்; தன்மானத்தை இழக்கவில்லை.! அதனால்தான் அதன் பிறகு பல ஆண்டுகள் கழித்தும், முகம்மது பின் துக்ளக் படத்தை, அதன் ஒரிஜினல் வடிவத்தில் பலர் பார்க்க முடிந்தது..!
தளபதி, இளையதளபதி என்றெல்லாம் ‘பேரு’ வெச்சா போதாது தம்பி…
நெஞ்சில் துணிவு என்னும் மஞ்சா ‘சோறு’ இருக்க வேணும்..!

(Visited 4 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *