சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

மொட்டை மாடியில் தோட்டம்! மொய்க்கும் காய்கறி கூட்டம்!

ஏறி வரும் விலைவாசி சாமான்யனை மட்டுமன்றி நடுத்தரவர்க்கத்தினரின் மாத பட்ஜெட்டுக்கும் வேட்டு வைக்கிறது. அதிலும் ‘விசேஷ நாட்கள், மாதங்கள், பண்டிகைகள்’ வந்துவிட்டால் போதும்… பூ முதல் பழம், காய்கறி என விலை விண்ணைத் தொடுகிறது.
சரி சமாளிப்போம் என்றாலும் அந்த காய்கறி வகைகளில் மனித உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் முழுதுமாக நிறைந்திருக்கிறதா? என்று கேட்டால் இதற்கு பதில் இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை!
விஷயத்துக்கு வருவோம்…. 2 பெரியவர் 2 சிறுவர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு ஒரு மாதத்திற்கு ஆகும் காய்கறி, பூ, கிழங்கு வகைகளுக்கு ஆகும் செலவு ரூ.2000 வரை. ஊட்டச்சத்தும் மிகக் குறைவு. அதற்கு என்ன செய்ய முடியும்? சாப்பிட்டுத்தானே ஆக வேண்டும் என்று நீங்கள் புலம்புவதும் புரிகிறது. அதற்கு அற்புதமான தீர்வு தான் மொட்டைமாடி தோட்டம்.
நம் வீட்டின் மொட்டை மாடியில் வெறும் 300 சதுர அடி பரப்பளவு கொண்ட ஒரு தோட்டம் அமைத்தால் நம் வீட்டிற்கு தேவையான பூ, காய்கறிகள், அனைத்தும் அறுவடை செய்யலாம். ஆர்வத்துடனான பராமரிப்பு, கொஞ்சம் உழைப்பு, சிறிய அளவில் மூலதனம் அவ்வளவே என்கிறார் டாக்டர். தர்மராஜன்.
இவர் எம்.பி.எ மற்றும் வேளாண் பட்டப்படிப்புகளை முடித்தவர். அவரிடம் சில சந்தேகங்கள்.

மொட்டை மாடி தோட்டம் என்பது அனைவருக்கும் சாத்தியமானதா?

நிச்சயமாக இல்லை! சொந்த வீடு வைத்திருப்பவர்கள், அரசு குடியிருப்புகள், சென்னை புறநகர்ப் பகுதிகளில் வாடைகை வீட்டில் வசிப்பவர்கள், கிராமப்புறங்களில் வசிப்பவர்கள், இவர்களுக்கான அற்புதமான பலன் தரும் திட்டம் இது.
ஒண்டிக் குடித்தனம், நெரிசல் மிருந்த நகர்ப்புற பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அது சாத்தியமாகாது.

மொட்டை மாடியில் தோட்டம் அமைப்பதனால் கட்டடம் பாதிக்கப்படாதா?

கண்டிப்பாக இல்லை! நாம் முதலில் மொட்டை மாடியில் உள்ள தரைப்பரப்பில் வாட்டர் ஃப்ரூப் பெயிண்ட் செய்ய வேண்டும். எஞ்சிய நான்கு மூலைகளிலும் மழைநீர் வடிந்து செல்ல பைப்லைன் அமைக்க வேண்டும். பின்னர் அந்த தரைப்பகுதி முழுவதும் பச்சை நிற பிளாஸ்டிக் கவரை அதன் மீது பரப்பி ஒட்டி விட வேண்டும். இப்படி செய்வதால் செடி வளர்ப்பின் போது கசியும் மண், நீர், உரம் போன்றவை தரைப்பகுதிக்குள் ஊடுருவாது. கட்டடமும் பாதுகாப்பாக இருக்கும்.

ஒ.கே. வெளியில் வாங்கும் காய்கறிகளை விட நாம் விதைக்கும் காய்கறிகளில் ஊட்டச்சத்து அதிகம் என்று எப்படி சொல்கிறீர்கள்?

காய், கனிகள் பருமனாகவும், வழவழப்பாகவும், பொலிவாகவும் இருக்க பயன்படுத்தும் செயற்கை உர வகைகள் மற்றும் அளவுக்கதிகமான உரம் து£வுதல் ஒரு புறம் மண்வளம் அதாவது தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து என்பது சரி விகிதமாக இல்லாமல் இருப்பது, குறுவை கால சாகுபடியின்போது திடீர் மழை, இதன் காரணமாக காய்கறிகள் வதங்கிப் போகுதல், அழுகிப் போகுதல் போன்றன மறுபுறம்.
ஆனால் நாம் வீட்டில் வளர்க்கும் போது சீதோஷ்ண நிலை, மண்வளம், உரத்தின் விகிதம், தேவையான நேரத்தில் தேவையான அளவு நீர் என ரசனையுடன் குழந்தையாய் பாவித்து வளர்க்கும்போது ஊட்டச்சத்து பெறலாம் என்பதே.

என்னென்ன செடிகள் வைக்கலாம்?

நமது அன்றாட உணவுக்கு பயன்படும் தக்காளி, கத்தரி, வெண்டை, கீரை வகைகள், வெங்காயம், கொடி வகைகளில் அவரை, பாகற்காய், புடலங்காய் என அனைத்தும் வைக்கலாம். 300ச.அடியில் வளர்க்கப்படும் தோட்டம் ஒரு மாதத்திற்கு 4 குடும்பங்களுக்கு தேவையான காய்கறிகள் முதல் பூக்கள் வரை அறுவடை செய்யலாம்.

செடிகளை பயிரிடும் முறை பற்றி சொல்லுங் களேன்?

என்.டி.கே எனப்படும் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து கொண்ட மண், தேங்காய் நாரில் இருந்து உதிரும் பவுடர், ஆர்கானிக் என மொத்தமாக ஒரு கிலோ வரை அளவு எடுத்துக் கொண்டு ஒரு திக்கான க்ரீன் கவரில் போட்டு வைத்து அதன் மேல் விதையை து£வினால் போதுமானது. வெங்காயம், பூண்டு போன்றவற்றிற்கு சற்று மெனக்கெட வேண்டும். ஏனென்றால் ஈரப்பதம் அதிகமாக இருந்தால் இவை சட்டென்று அழுகிப்போகும்.

இவை குறித்த சந்தேகங்களை தீர்த்து பராமரிப்பு முறையை யும் நீங்கள் நேரில் வந்து அமைத்துக் கொடுப்பீர்களா?

தாராளமாக! சரியான மண் விகிதம் கலப்பது, தண்ணீரை எந்தெந்த செடிகளுக்கு எப்போது, எவ்வளவு ஊற்றவேண்டும். காற்றோட்டமாக, வெளிச்சமாக வைத்துக் கொள்வது எப்படி? என்று சகலமும் நாங்களே நேரில் வந்து விளக்கி தோட்டம் அமைத்து கொடுக்கிறோம்.

நமக்கு இருக்கும் ஆர்வம், பராமரிப்பில் சற்றே கவனம், சிறிய அளவில் மூலதனம் இவையே இந்த மாடித் தோட்டத்தின் முக்கிய அம்சம்…

சந்தேகங்களுக்கு   டாக்டர். தர்மராஜன் 9382808083

(Visited 76 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *